என் மலர்
நீங்கள் தேடியது "9 arrest"
- சிவகிரி 11-ம் நம்பர் ரோட்டில் குருசாமி என்பவர் வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை செய்தனர்
நெல்லை:
சிவகிரி 11-ம் நம்பர் ரோட்டில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் செயல்படும் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையில் தனிப்பிரிவு ஏட்டுக்கள் புகழேந்தி, கருப்பசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை செய்தனர். அப்போது சுமார் 9 பேர் அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், கோவிந்தராஜ், மற்றொரு கோவிந்தராஜ், சங்கர், செம்புலிங்கம் மற்றும் சிவகிரியை சேர்ந்த குருசாமி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.63,320-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.