search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CAG Report"

    • கொரோனா காலத்தில் மத்திய அரச வழங்கிய நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை.
    • மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக கூடுதலாக 119 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். முதல் சட்டசபை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

    சிஏஜி அறிக்கைகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஆம் ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிப்படுத்துவோம் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

    அதன்படி டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று மருத்துவ கட்டமைப்புகள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்திய 21 மொஹல்லா கிளினிக்குகளில் கழிப்பறைகள் இல்லை. கொரோனா தொற்றுக் காலத்தில் வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுக்காலத்தில் மத்திய அரசு டெல்லி மாநிலத்திற்கு 787.91 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. அதில் 582.84 கோடி ரூபாய் மட்டுமே ஆம் ஆத்மி அரசால் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத தொகையில் மனித வளங்களுக்கான ரூ.30.52 கோடியும் அடங்கும். மனித வளம் என்பது பணியாளர்களுக்குக் குறைவான ஊதியம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை நியமித்தல் என்பதைக் குறிக்கிறது.

    கூடுதலாக 119.95 கோடி ரூபாய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் (PPE போன்ற பாதுகாப்பு உபகரணங்கள்) வாங்குவதற்காக வழங்கப்பட்டது. அதில் 83.14 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனையில் படுக்கையை அதிகரிக்க பட்ஜெட்டை சரியாக பயன்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2016/17 முதல் 2020/21 பட்ஜெட்டில் 32 ஆயிரம் படுக்கைகள் அமைப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 1357 படுக்கைகள் மடடுமே கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

    மொஹல்லா மருத்துவமனையில் 21-ல் பாத்ரூம் இல்லை. 15 கிளினிக்குகளில் மின்சார பேக்-அப் இல்லை. 12-ல் மாற்றுத்திறனாளிக்கு உகந்த வகையில் அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.

    • அமைச்சரவை மற்றும் சட்டசபையின் ஒப்புதல்களை அரசு புறக்கணித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
    • இந்த அறிக்கை பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    CAG என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களை தணிக்கை செய்யும் சட்டப்பூர்வ அமைப்பாகும். டெல்லி மதுபான கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை ஒன்று தற்போது கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    டெல்லி ஆம் ஆத்மி அரசின் கீழ் வகுக்கப்பட்ட மதுதான் காலால் கொள்கைகளால் மாநிலத்திற்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிராக இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

    கசிந்த அறிக்கையின் சில பகுதிகளின்படி, சரண்டர் செய்யப்பட்ட மதுபான உரிமங்களை மறு டெண்டர் விடாததால் ரூ.890 கோடியும், மண்டல உரிமதாரர்களுக்கு வழங்கப்பட்ட விலக்குகளால் ரூ.941 கோடியும் நஷ்டம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர், அமைச்சரவை மற்றும் சட்டசபையின் ஒப்புதல்களை அரசு புறக்கணித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

    அதுமட்டுமின்றி, மணிஷ் சிசோடியா தலைமையிலான அமைச்சர்கள் குழு (GoM) நிபுணர் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில் தேர்தல் நேரத்தில் இந்த அறிக்கை கசிந்துள்ளதாக கூறப்படுவது அரசியலில் புயலை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த அறிக்கை பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ எதுவும் வெளியாகாத நிலையில் கசிந்துள்ளதாக கூறும் இந்த அறிக்கையை பாஜகவால் தர முடியுமா என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • போக்குவரத்து கழக கடன் 2017க்கு முன்பாக இருந்த கடனைவிட 3 மடங்கு அதிகரித்துள்ளது.
    • தனிநபர் GDPல் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக உள்ளது.

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதன்மை கணக்காய்வு துறைத் தலைவர் ஜெய்சங்கர் சிஏஜி அறிக்கையை வெளியிட்டார்.

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்தக் கடன் ரூ.21,980 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் 2017க்கு முன்பாக இருந்த கடனைவிட 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து ஊழியர்களின் செலவினம் மட்டும் 55.20% முதல் 63.55 % வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மாநில நிதிநிலை (ஏப்.2022 முதல் மார்ச் 2023 வரை) மீதான சிஏஜி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

    2022-23 நிதியாண்டில் தேசிய தனிநபர் GDP-ஐ விட, தமிழ்நாட்டின் தனிநபர் GDP அதிகமாக உள்ளது. CAG அறிக்கை தனிநபர் உள்நாட்டு உற்பத்தியின் (GDP) தேசிய சராசரி ₹1,96,983 ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டின் சராசரி ₹3,08,020 ஆக உள்ளது.

    தமிழ்நாட்டில் 2021-2022ல் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2022-2023ல் 36,215 கோடியாக குறைந்துள்ளது. ஆகவே முந்தைய ஆண்டின் வருவாய் வரவுகளை விட 2022-2023ல் 17% வருவாய் அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) - ரூ.23.64 லட்சம் கோடியாகவும் வரி வருவாய் - ரூ.1.88 லட்சம் கோடியாகவும் மொத்த வருவாய் - ரூ.2.43 லட்சம் கோடியாகவும் GSDP வளர்ச்சி - 14.16% ஆகவும் உள்ளது.

    தமிழ்நாட்டில் மாநில அரசின் கடன் கட்டுக்குள் உள்ளது. தனிநபர் GDPல் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக உள்ளது

    மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்துவதில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் 28% காலிப்பணியிடங்கள் உள்ளது.

    முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது போடப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை விட, பாஜக ஆட்சியில் குறைந்த விலைக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RafaleIssue #LokSabha #CAGonRafale
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

    மக்களவையில் நேற்று ரபேல் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சிஏஜி அறிக்கை தாக்கல் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம்  உள்ளிட்ட விமானப்படையின் பிற கொள்முதல் குறித்த தகவல்கள் அடங்கிய சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட, பாதுகாப்புத்துறை தொடர்புடைய 11 ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    அதில், ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தை விட 2.86 சதவீதம் குறைவான விலைக்கே பாஜக ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மோடியின் படத்துடன் கூடிய காகித விமானங்களை கையில் வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், சமாஜ்வாடி உறுப்பினர்கள், உ.பி. பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleIssue #LokSabha #CAGonRafale
    ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தார். #RafaleIssue #LokSabha #CAGonRafale
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

    மக்களவையில் நேற்று ரபேல் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்களை கண்டித்து பாஜக எம்பிக்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.



    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் அறிக்கையை தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விமானப்படையின் மற்ற கொள்முதல் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. #RafaleIssue #LokSabha #CAGonRafale
    உள்ளாட்சிகளில் நிர்வாக குறைபாடு காரணமாக அரசுக்கு ரூ.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #CAGreport
    சென்னை:

    உள்ளாட்சிகளில் நிர்வாக குறைபாடு காரணமாக அரசுக்கு ரூ.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகத்துக்கு சப்பாத்தி தயாரிக்கும் 9 நவீன எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவை முழுமையாக செயல்படவில்லை. ஒப்பந்ததாரர் அதை சரி செய்யவில்லை. இதனால் ரூ.1.33 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


    சென்னை மாதவரத்தில் அனுமதி பெறாத தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடம் இடிக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி தகர்ப்பு கட்டணம் வசூலிக்கவில்லை. கட்டிடம் இடிக்கப்பட்டன. காலி மனை வரி வசூலிக்கப்படவில்லை. இதனால் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சியில் புதிய பஸ்நிலையம், சுங்க வசூல் குத்தகை கட்டணத்தை வசூலிக்கவில்லை.

    சேலம் மாநகராட்சியில் உணவு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஒப்பந்ததாரர் முடிக்காமல் இருப்பது உள்பட பல்வேறு செயல்களில் சென்னை தவிர இதர மாநகராட்சிகளில் ரூ.25.65 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நிர்வாக குறைபாடு காரணமாக நகராட்சிகளில் ரூ.25.82 கோடி, பேரூராட்சிகளில் ரூ.13.45 கோடி, மாவட்ட ஊராட்சிகளில் ரூ.1.38 கோடி, ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5.29 கோடி, கிராம ஊராட்சிகளில் ரூ.1.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் ரூ.84 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CAGreport
    ×