என் மலர்
நீங்கள் தேடியது "japan"
- நியூயார்க்கில் அணுஆயுத தடை ஒப்பந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
- பார்வையாளராக கலந்து கொண்டு ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகமிக முக்கியமானது. இதனால் ஐ.நா. அணுஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள மாட்டோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டால் அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிமசா ஹயாஷி கூறுகையில் "ஜப்பானின் தேசிய பாதுகாப்புதான் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
"கடுமையான பாதுகாப்பு சூழலின் கீழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும், ஜப்பானின் இறையாண்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும் அணுசக்தித் தடுப்பு இன்றியமையாதது" எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.
ஐ.நா.வின் 2017-ம் ஆண்டு அணுஆயுத தடை ஒப்பந்தத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஒப்புதல் கிடைத்தது. இது 2021-ம் ஆண்டு நடைமுறைக்கு கொணடு வரப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதேபோன்று மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஐ.நா. இந்த நடவடிக்கையை கொண்டு வந்தது.
அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மட்டும் இன்னும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை எனக் கூறி ஜப்பான் கையெழுத்திட மறுத்துவிட்டது.
- சாலைகள், ரெயில் தண்டவாளங்கள் ஆகியவை போர்வை போர்த்தியபோது போல பனி மூடியது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி, கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
டோக்கியோ:
ஜப்பானில் இந்த மாதம் தொடங்கி கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமே உள்ளிட்டவற்றில் கடுமையான பனிப்புயல் வீசியது. கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள சாலைகள், ரெயில் தண்டவாளங்கள் ஆகியவை போர்வை போர்த்தியபோது போல பனி மூடியது.
இதனால் குறிப்பிட்ட நேரங்களில் பஸ்கள், புல்லட் ரெயில் முதலிய பொது போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி, கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில் ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- ரஷியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
டோக்கியோ:
ஜப்பானின் ஓகோட்ஸ்க் கடற்பகுதியில் டுபோலேவ்-95 என்ற ரஷிய போர் விமானங்கள் பறந்து சென்றது கண்டறியப்பட்டது. 8 மணி நேரத்துக்கும் மேலாக அந்த குண்டுவீச்சு விமானங்கள் வானில் வட்டமிட்டன.
ரஷியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதமும் ரஷிய விமானங்கள் இதேபோல் ஜப்பான் எல்லைக்குள் ஊடுருவி அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இதனால் இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது.
- 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது.
டோக்கியோ:
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது. ஜப்பானின் ஒசாகா நகரில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025 நடைபெற இருக்கிறது. இதில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டு அரங்குகளை அமைத்து தங்கள் நாட்டின் பராம்பரியம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த உள்ளனர்.
ஒசாகாவில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025-க்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி புகைப்பிடிக்க அந்த நகர மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்ததாண்டு முழுவதும் தடை அமலில் இருக்கும் என்றும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள கைஷூ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 37 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
இதனை ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் தென் மேற்கு கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
- தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷிய ராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டு உள்ளது.
டோக்கியோ:
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2023-ம் ஆண்டு போர் தொடுத்தது. இதில் அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. எனவே உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை அந்த நாடுகள் வழங்குகின்றன. அதேபோல் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்படுகிறது.
அதன்படி உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் ரஷியாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷிய ராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ரஷியாவுக்கு ஏற்றுமதி தடை உள்ள 335 பொருட்களின் பட்டியலுக்கும் ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
- மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.
டோக்கியோ:
ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் அந்நிறுவனம் செய்து வந்தது.
தனியார் நிறுவனத்தின் ராக்கெட் கடந்த மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், ஸ்பேஸ் ஒன் நிறுவனம் உருவாக்கியுள்ள கெய்ரோஸ்-2 ராக்கெட், மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா மலைப்பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவப்பட்டது.
அந்த ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் சிறிது நேரத்தில் கைவிடப்பட்டது.
ராக்கெட்டின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் பாதுகாப்பு கருதி அந்த ராக்கெட்டை வெடிக்கச் செய்தோம் என ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் 13-ம் தேதி ஏவப்பட்ட ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கெய்ரோஸ்-1 ராக்கெட், புறப்பட்ட சில விநாடிகளில் தானாகவே வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.
- முதல் அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது.
- இதில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா இறுதிக்கு முன்னேறியது.
மஸ்கட்:
9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் சீனா (4 வெற்றியுடன் 12 புள்ளி) முதலிடமும், இந்தியா (3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் ஜப்பான் (12 புள்ளி) முதலிடமும், தென் கொரியா (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.
இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
- மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் சீனா- தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
மஸ்கட்:
9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் சீனா (4 வெற்றியுடன் 12 புள்ளி) முதலிடமும், இந்தியா (3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் ஜப்பான் (12 புள்ளி) முதலிடமும், தென் கொரியா (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு நடந்த அரைஇறுதியில் இந்திய அணி (1-0) ஜப்பானை வீழ்த்தி இருந்தது. இதனால் இந்திய அணி நம்பிக்கையுடன் கால் பதிக்கும்.
அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைய ஜப்பான் அணி முயற்சிக்கும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஹாக்கி இந்தியா செயலியில் காணலாம்.
மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சீனா- தென் கொரியா (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
- ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
- ஜப்பான் மக்கள் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார்.
ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஜப்பானில் 2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5.6 சதவீதம் குறைந்து 727,277 ஆகப் பதிவானது.
ஆகவே ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளதாக டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.
2025 ஏப்ரல் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்றும் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் கவர்னர் யூரிகோ கொய்கே தெரிவித்துள்ளார்.
- ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.
- சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால், இல்லை.
இன்றைய காலகட்டத்தில் குளிப்பதே பெரும்பாடாக உள்ளதாக ஜென் Z தலைமுறையினர் நொந்துகொள்கின்றனர். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வாஷிங் மெஷின்.
ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ. நிறுவனம் இந்த நவீன வாஷிங் மெஷினை கண்டுபிடித்து 'மிராய் நிங்கன் சென்டகுகி' என்று பெயர்வைத்துள்ளது. இதற்கு எதிர்காலத்தின் மனித வாஷிங் மெஷின் என்பது பொருளாகும்.

இந்த சலவை எந்திரம் ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் அதன் பிளாசிக் நாற்காலி மீது ஏறியதும் மெஷினில் பாதியளவு வெதுவெதுப்பான நீர் நிரம்பும். பின்னர் மெஷினில் இருந்து நீர் குமிழிகளாக வெடிக்கிறது.
இது உங்கள் தோலில் இருந்து அழுக்குகளை நீக்குகிறது. நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உங்களின் உடலின் உயிரியல் தகவல்களைச் சேகரித்து நீங்கள் பொருத்தமான வெப்பநிலையில் கழுவப்படுவதை உறுதிசெய்யும்.
இதில் பிளாஸ்டிக் 'மசாஜ் பந்துகள்' அடங்கும். சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால் இல்லை. இது உங்கள் மனதையும் அமைதிப்படுத்துகிறது.

மெஷினில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஏஐ [AI] சென்சார் உங்களின் சேகரிக்கப்பட்ட உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து உங்கள் மனதை அமைதிப்படுத்தும் காட்சி மற்றும் ஒலி அடங்கிய வீடியோவை நாற்காலி முன் ஒளிபரப்புகிறது. விளைவு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விரைவான குளியல்.
இந்த அதிநவீன மனித வாஷிங் மெஷின் ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அங்கு 1,000 விருந்தினர்கள் இந்த குளியலை முயற்சிக்க உள்ளனர்.
- 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.
- 1995 ஆம் ஆண்டு லவ் லெட்டர் திரைப்படம் அவருக்கு புகழை தேடித் தந்தது
ஜப்பானை சேர்ந்த பிரபல நடிகையும் பாடகியான மிஹோ நகயாமா [54 வயது] டோக்கியாவில் உள்ள அவரது வீட்டின் குளியல் தொட்டியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நகாயாமா நேற்று [வெள்ளிக்கிழமை] ஒசாகாவில் ஒரு கிறிஸ்துமஸ் கச்சேரியில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
ஆனால் நேற்று வேலை நிமித்தமாக அப்பாயிண்ட்மண்ட் இருந்தபோதிலும் இன்னும் அவர் வரவில்லை என்பதால் உடன் வேலை செய்யும் ஒருவர் அவசர எண்ணை அழைத்துள்ளார்.
அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது குளியலறை தொட்டியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து டோக்கியோ போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்பின் காரணம் குறித்த மர்மம் வெளிவரும் என்று தெரிகிறது.

யார் இந்த மிஹோ நகயாமா?
ஜப்பானின் சாகு பகுதியில் பிறந்த நகாயாமா, 1985 ஆம் ஆண்டு 'மைடோ ஒசவாகசே ஷிமாசு' என்ற நாடகத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதே ஆண்டில் அவர் தனது முதல் ஜே-பாப் பாடலான "C" ஐ வெளியிட்டார். 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.
1995 ஆம் ஆண்டு அவர் நடித்த 'லவ் லெட்டர்' திரைப்படம் நடிகையாக அவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. நகயாமா சுமார் 22 ஜே பாப் ஆல்பங்களை வெளியிட்டார்.

1997 ஆம் ஆண்டு 'டோக்கியோ வெதர்' படமும் பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இசை ஆகியவற்றில் அவர் செய்த சாதனைகளுக்காகப் பல விருதுகளை தனதாக்கியவர் ஆவார்.