என் மலர்
நீங்கள் தேடியது "Mari Selvaraj"
- உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது.
- வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் 'உழவர் விருதுகள் 2025' விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது. இந்த ஆண்டு விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழவர் விருதோடு இரண்டு இலட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அவர்கள் பேசும் போது, "இந்த நிகழ்வுக்காக ஆண்டு முழுக்க காத்திருக்கிறோம். நமக்கு நிறைய வெளிச்சம் கிடைக்கிறது. அந்த வெளிச்சத்தின் மூலம் தங்களின் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களை,
குறிப்பாக உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், இவர்கள்தான் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் அதற்காகதான் உழவர் விருதை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
"இவ்வாறு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும். இவர்கள் அங்கீகாரம் பெறுவதின் மூலம், மேலும் பலர் இவர்களை போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் பல உழவர்கள் பயனடைவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது, "இதுவரை எல்லா மேடையும் நம்மை மேலே தூக்கி செல்லும் வகையில் தான் இருக்கும். ஆனால், இந்த மேடை தான் நாம் யார், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், நமது அடிவேர் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது. விவசாயத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்பதை இங்கு வந்த பிறகு தான் அறிந்து கொண்டேன். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது," இந்த விழாவில் கலந்துக் கொண்டதே பெருமையாக இருக்கு" என்று கூறினார்
இந்த சிறப்பம்சங்கள் இன்னும் பல கோடி பேரை சென்று சேரும் பொருட்டு, உழவன் ஃபவுன்டேஷனின் 'கார்த்தியின் உழவர் திருநாள்' விழா, ஜனவரி 14, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை.
- திரைப்படம் கடந்த 20 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 20 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் இரண்டு நாட்களில் 15 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் படக்குழுவை பாராட்டி அவரது எகஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் "இயக்குநர் திரு. வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் விடுதலை -2 பார்த்தேன். மனித சமூக ஓர்மைக்கான ஆவேசமான அரசியலை அவசியமான நேரத்தில் அப்பட்டமாகவும் அதே நேரத்தில் நேர்மையான கலைபடைப்பாகவும் பதிவு செய்திருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகளும் பேரன்பும்" என பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் திரு. வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் விடுதலை -2 பார்த்தேன். மனித சமூக ஓர்மைக்கான ஆவேசமான அரசியலை அவசியமான நேரத்தில் அப்பட்டமாகவும் அதே நேரத்தில் நேர்மையான கலைபடைப்பாகவும் பதிவு செய்திருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகளும் பேரன்பும்… pic.twitter.com/i6iGzvhbbK
— Mari Selvaraj (@mari_selvaraj) December 22, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கருப்பி என்ற பெயரில் சிப்பிப் பாறை வகை இனத்தை சேர்ந்த நாய் நடித்துள்ளது.
- பரியேறும் பெருமாள் பட ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.
சாதிய கொடுமைகளையும் அது எவ்வாறு மறைமுகமாக செயல்படுகிறது என்பதையும் ஒரு கல்லூரி காதல் கதை மூலம் அப்பட்டமாக கூறியிருப்பார் மாரி செல்வராஜ்.
இந்த படத்தில் கருப்பி என்ற பெயரில் சிப்பிப் பாறை வகை இனத்தை சேர்ந்த நாய் நடித்துள்ளது. அந்த படத்தில் கருப்பி நாய் இறந்துவிடும். அதற்கென தனி ஒப்பாரி பாடல் படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் பிரபலமானது.
இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பட்டாசு வெடித்த சத்தத்தை கேட்டு தெறித்து ஓடிய கருப்பி நாய் சாலையில் வந்த வண்டி மீது மோதி உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம், பரியேறும் பெருமாள் பட ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- தற்பொழுது இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்பொழுது படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் துரூவ் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி, வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பைசன் படக்குழு வெளியிட்டுள்ளது,.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Wishing our dearest #DhruvVikram the Happiest Birthday!! ✨? This year get ready to witness our #Bison 's journey! Sending you all my love and best wishes! ❤️?@beemji @NeelamStudios_ @ApplauseSocial @Tisaditi pic.twitter.com/iZbxO2TdK6
— Mari Selvaraj (@mari_selvaraj) September 23, 2024
- மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்த படம் வாழை.
- வாழைத்தார் சுமக்கும் தொழிலாளியின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்த படம் வாழை. தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் பகுதியில் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளியின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.
படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், கிராமத்து பொதுமக்கள் பங்கேற்றனர்.
விழாவிற்காக கிராம மக்கள் 2 பேருந்துகளில் வரவழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் மாரி செல்வராஜ் பேசியதாவது:-
வாழை படம் இந்த அளவுக்கு நன்றாக வருவதற்கு காரணம் என் முந்தைய பட தயாரிப்பாளர்கள்தான். நான் படம் பண்ணும் போது அவ்வளவு சுதந்திரம் கொடுத்தார்கள்.
வாழை படத்தை ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி பார்த்துவிட்டு வசூலாக எப்படி பண்ணும்னு தெரியல. ஆனால் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று சொன்னார். படத்தின் இறுதிக்காட்சியில் பூங்கொடி டீச்சர் (நிகிலாவிமல்) ஏன் வரவில்லை என்று பலரும் கேட்டனர்.
அவரது தேதி அப்போது கிடைக்கவில்லை. கடைசியில் அம்மா மடியில் சிவனானந்தன் படுத்திருப்பான். அம்மாவிற்கு பதில் டீச்சர் மடியில் படுத்திருக்கிற மாதிரிதான் காட்சி இருக்க ஆசைப்பட்டேன். விபத்தின் போது இஸ்லாமிய சகோதரர்கள்தான் காப்பாற்றினார்கள் என்ற உண்மை படத்தின் மூலமாக வெளிவந்துள்ளது.
வாழை படத்தின் 2-ம் பாகத்தை நிச்சயமாக எடுப்பேன். முதல் பாகத்தின் பின்னால் இருக்கும் கதையை சிவனானந்தனை வைத்து எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வாழை திரைப்படம்.
- ரஜினிகாந்த் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வாழை திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் " மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான. தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு.
மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சப்பிடவில்லையே என்று கதறும் போது. நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்" என தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாழை படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன்.
- காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி உள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வாழை திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜூக்கு அன்பின் வாழ்த்துகள்.
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி @mari_selvaraj அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்?பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்…
— M.K.Stalin (@mkstalin) September 2, 2024
- வாழை படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.
- சோ தர்மன் எழுதிய வாழையடி சிறுகதையை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன்.
என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய"வாழையடி......" என்கிற சிறுகதை.
என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.
வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.
ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி"என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.
கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு.
"வாழை வாழவும் வைக்கும்.தாழவும் வைக்கும்."
என்னை வாழை வாழ வைக்கவில்லை" என்று பதவியிட்டுள்ளார்.
1999ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற லாரி விபத்தை மையமாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சோ தர்மன் எழுதிய வாழையடி சிறுகதையை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.
வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன்அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி❤️—வாழைhttps://t.co/VRFo53NxFn
— Mari Selvaraj (@mari_selvaraj) August 28, 2024
அவரது பதிவில், "வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி" பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாழை திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- வாழை திரைப்படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள் என்று விஜய் சேதுபதி கோரிக்கை.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வாழை படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் சேதுபதி, "மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படம் மிக அற்புதமான திரைப்படம். படத்தை பார்த்த பிறகு படம் முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் அந்த படத்துடன் இருப்பது போன்றே இருக்கிறது. வாழை திரைப்படத்தில் பேசப்பட்ட அரசியல், வசனம், நடித்த அனைவரும், அந்த ஊரில், அவர்களின் வாழ்க்கைக்கு மத்தியில் அந்த ஊர்காரர்களில் ஒருவராக அங்கிருந்து இன்னும் வெளி வர முடியாமல் மாட்டிக் கொண்டு இருக்கிறேன்.
வாழை திரைப்படம் எடுத்ததற்கு மாரி செல்வராஜுக்கு நன்றி. இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை பதிய வைத்ததற்கும் நன்றி. சாதாரணமாக கடந்து போகிற செய்திகளுக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கையை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்ததற்கு நன்றி. இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது, நம் வாழ்க்கையின் மீது நமக்கு உள்ள சில கேள்விகளை எழுப்பும் என நம்புகிறேன். வாழை திரைப்படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள். உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும்" என்று பேசினார்.
விஜய் சேதுபதி பேசிய இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார். அந்த எக்ஸ் பதிவில், வாழை திரைப்படத்தை பார்த்த பின் தன் உணர்வை பெரும் உருக்கத்தோடு பகிர்ந்துகொண்ட தமிழ்சினிமாவின் மக்கள் செல்வன் அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் " என்று பதிவிட்டுள்ளார்.
வாழை திரைப்படத்தை பார்த்த பின் தன் உணர்வை பெரும் உருக்கத்தோடு பகிர்ந்துகொண்ட தமிழ்சினிமாவின் மக்கள் செல்வன் அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் @VijaySethuOffl pic.twitter.com/6fGv2ksqE6
— Mari Selvaraj (@mari_selvaraj) August 25, 2024
- வாழை திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- வாழை படத்தை பாராட்டி இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வாழை படத்தை பாராட்டி இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "நம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்கும் போது நாம் வாழ்ந்த தருணங்கள் மீண்டும் கண் முன் வந்து போகும். வலி நிறைந்த ஒரு தருணத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் கலையாக படைத்து நெஞ்சத்தை கலங்க வைத்து விட்டார். ! All the love to you brother" என்று பதிவிட்டுள்ளார்.
- வாழை படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார், மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் வாழை படத்தை இயக்குநர் பாரதிராஜா பாராட்டி பேசியுள்ளார். அந்த வீடியோவின் லிங்க்கை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய பாரதிராஜா, "சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களை பாரத்து யோசித்தது உண்டு. 'வாழை' அப்படியொரு படம். படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார், மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.
சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களை எல்லாம் விஞ்சுகிற வகையில் என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக ஒரு படம் பண்ணியிருக்கான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்லுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் அவரது பதிவில், "நிறைய தருணங்கள் என்னை பற்றியான உங்கள் சொற்களில் நின்று இளைப்பாறியிருக்கிறேன். இன்று நானே ஒரு செடியாய் துளிர்க்கிறேன். இயக்குனர் இமயத்திற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
- வாழை படத்தை சிவகார்த்திகேயன் பாராட்டி பேசியுள்ளார்.
- அந்த வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வாழை படத்தை சிவகார்த்திகேயன் பாராட்டி பேசியுள்ளார். அந்த வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "மிக நெருக்கமான ஒருவரின் கதையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மாரி செல்வராஜ் மீண்டும் மீண்டும் தான் ஒரு strong-ஆன இயக்குநர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். 'வாழை' என்னுடைய favourite படமாக மாறியுள்ளது. பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் இந்த வாழை" என்று சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
மாரி செல்வராஜ் அவரது பதிவில், "பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள் …கர்ணன் மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திகொள்கிறேன். நன்றி" பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள் …கர்ணன் மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும்… pic.twitter.com/bhyEyzvdXB
— Mari Selvaraj (@mari_selvaraj) August 24, 2024