search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A fine of Rs.5 thousand"

    • தீபாவளி பண்டிகையொட்டி நடவடிக்கை
    • ரெயில்வே போலீசார் எச்சரிக்கை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் நேற்று முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை மற்றும் பெங்களூரு மார்க்கமாக செல்லும் ரெயில்கள், சென்னையில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் வழி யாக செல்லும் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகளை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படுகின்றனர்.

    சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ஆபத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளை எடுத்து சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பெண்களை பாது காப்புடன் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    அதிவிரைவு ரெயில்கள், விரைவு ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வட மாநில இளைஞர்கள் அதிக அளவில் பயணம் செய்வதாகவும் புகார் இருந்தது.

    அதன் பேரில் முன்பதிவு பெட்டிகளில் ஆய்வு நடத்தி அதில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வட மாநில இளைஞர்கள், தமிழக இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்ய அறிவுறுத்தினர்.

    ரெயிலில் சந்தேக படும்படி யாராவது நடந்து கொண்டால் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அதேபோல் ரெயிலில் உடன் பயணிக்கும் அடையாளம் தெரியாத பயணிகளிடம் இருந்து உணவு பொருட்கள், தின்பண்டங்கள், குடிநீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவர்களை வாங்கி சாப்பிட வேண்டாம். பாதுகாப்பான தீபாவளி அனைவரும் கொண்டாட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

    ×