search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A huge public gathering"

    • தற்போது வழங்கப்பட்டுள்ள 126 பக்கமுள்ள இந்த தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது,
    • ஜூன் 23-ந் தேதி நடந்த பொதுக்குழுவை கண்டு கொள்ளவில்லை.

    சேலம்:

    ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி சேலத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-நீதிபதிகளின் தீர்ப்பை தலை வணங்குகிறோம், ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள 126 பக்கமுள்ள இந்த தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது,

    முந்தைய தீர்ப்பில் எங்களுக்கு சாதகமாக வந்தது ,தற்போது தீர்ப்பு எங்களுக்கு எதிராக உள்ளது.இந்த தீர்ப்பை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம். வழக்கறிஞர்களுடன் இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஓரிரு நாளில் அப்பீல் செய்யப்படும்.

    உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி இல்லை என்று சொல்லும் போது உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து செல்வது வழக்கம். அதன்படி அப்பில் செய்வோம், தற்போது வழங்கி உள்ள தீர்ப்பு ஜூலை11-ந் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவை சுற்றியுள்ளது ,ஜூன் 23-ந் தேதி நடந்த பொதுக்குழுவை கண்டு கொள்ளவில்லை. தொண்டர்கள் முழுவதும்‌ எங்கள் பக்கம் உள்ளனர். சுப்ரீம் கோர்ட் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும். கட்சி தலைமை அலுவலகத்துக்கு யாரும் செல்லலாம். சேலத்தில் விரைவில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் , மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×