search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A large"

    • சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த ஆண்டு 55 -வது ஆண்டு பாலாபிஷேக பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனர். பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் அதை அடுத்து உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமான் சுப்பிரமணியர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

    சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணியருக்கு வருடந்தோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பாலாபிஷேக பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பெரும் தொற்றல் எளிமையாக நடந்தது.

    இந்த ஆண்டு 55 -வது ஆண்டு பாலாபிஷேக பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 7:40 மணிக்கு 1610 திருப்பால் குடங்களை ஏராளமான பெண்கள் எடுத்து சென்றனர். ஊர்வலம் சென்னிமலை டவுன், கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் இருந்து புறப்பட்டு மேள, தாளம் முழங்க காவடி ஆட்டத்துடன் சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளிலும் திருவீதி வலம் வந்து மலைமீதுள்ள முருகன் கோவிலை படி வழியாக சென்றடைந்தது.

    காலை 11 மணிக்கு மலை மேல் சுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் தொடங்கியது தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் பால் குடங்களில் இருந்த பால்களை வேத மந்திரங்கள் ஓத சுப்பிரமணிய பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். இதை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசித்தனர்.

    இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனர். பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் அதை அடுத்து உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியால் இன்று அதிகாலை முதலே சென்னிமலை முருகன்கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது.

    பாலாபிஷேக பெரு விழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    ×