search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A man"

    • அருள்தாஸ் கதவை எட்டி உதைத்து செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    • இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவுக்கு உட்பட்ட எல்லீஸ்பேட்டை பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (46). இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் செல்வி கடையில் இருந்தபோது அதே பகுதியில் உள்ள மாதா கோவில் வீதியை சேர்ந்த அருள்தாஸ் (49). தொழிலாளி இவர். மதுபோதையில் கடைக்கு வந்து கடனாக சிகரெட் தருமாறு கேட்டுள்ளார். செல்வி சிகரெட் தர மறுத்துள்ளார்.

    இதையடுத்து அருள்தாஸ் கடையினுள் நுழைந்து அங்கிருந்த கண்ணாடி ஜாடியை தூக்கி கீழே போட்டு உடைத்தும், செல்வியை தகாத வார்த்தையால் திட்டியும் தகராறு செய்துள்ளார்.

    இதனால் செல்வி அருகில் உள்ள தனது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். அப்போதும் விடாமல் அருள்தாஸ் கதவை எட்டி உதைத்து செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த அருள்தாஸ் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.

    பின்னர் அவர் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • பழையபாளையம் இந்திரா காந்தி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மது விலக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் செந்தில், சூரம்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா என பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பழையபாளையம் இந்திரா காந்தி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு கடையாக தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது அங்கு மூட்டை மூட்டையாக ஹான்ஸ், புகையிலை பொருட்கள், பான் மசாலா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கரோல் பிரான்சிஸ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். யார் யாரிடம் இருந்து புகையிலை பொருட்கள் வாங்கப்பட்டது. என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் சூரம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சூரம்பட்டி பெட்ரோல் பங்க் அருேக 2 பேர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்கள், பான் மசாலா 90 பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சாஸ்லிங் (55), செல்வராஜ் (56) என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஹான்ஸ் -புகையிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.

    ×