search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A man on a motorcycle was killed"

    • அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக முருகேசன் மீது மோதியது.
    • மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் எழு மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் முரு கேசன் (வயது 52). இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன் தனது இரு சக்கர வாகனத் தில் ஈரோடு-முத்தூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அவர் மண்கரடு அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரி யாத வாகனம் எதிர்பாராத விதமாக முருகேசன் மீது மோதியது.

    இதில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை க்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் முருகேசன் வரும் வழியிலேயே இருந்து விட்டதாக கூறினர். இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    ×