என் மலர்
முகப்பு » A round-robin sports competition
நீங்கள் தேடியது "A round-robin sports competition"
- வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது
- மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சேத்துப்பட்டு டொமினிக் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் சூப்பர் சீனியர் பிரிவு எறிபந்து போட்டியிலும், கோகோ போட்டிகளில் ஜூனியர் பிரிவு குழு போட்டிகளில் முதலிடம் பெற்று மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பாலாஜியையும், பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைபாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
×
X