search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A truck"

    • ஓமலூரில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்த்து.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த சென்டர் மீடியனில் மோதியது.

    கோபி:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்த்து.லாரியை ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டியை சேர்ந்தவர் நடராஜ் (35) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    லாரியில் டிரைவருடன் அதே பகுதியை சேர்ந்த லோடு மேன்கள் ராஜேந்திரன், ராஜமாணிக்கம், மணிகண்டன், மாரியப்பன் ஆகியோரும் சென்று கொண்டிருந்தனர்.

    லாரி இன்று அதிகாலை கோபிசெட்டிபாளையம் கள்ளிப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த சென்டர் மீடியனில் மோதியது.

    மோதிய வேகத்தில் லாரியின் முன் பகுதி முழுமையாக நொறுங்கியது. அதைத்தொடர்ந்து இன்று காலை மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்த செங்கல்கள் மாற்றப்பட்டு லாரி கிரேன் மூலமாக அகற்றப்பட்டது.

    லாரி விபத்துக்குள்ளான இடத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. அதே இடத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

    லாரி ரோட்டின் தடுப்பு மீது மோதிய போது எதிரே வாகனங்கள் வந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கரட்டடிபாளையத்தில் இருந்து குள்ளம்பாளையம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சென்டர் மீடியனில் 25 க்கும் மேற்பட்ட லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    நெடுஞ்சாலை–த்துறையினர் சென்டர் மீடியன் குறித்து பெரும்பாலான இடங்களில் எச்சரிக்கை வழிகாட்டு பலகை, பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டாமல் உள்ளதாலேயே விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

    ×