என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aadhar link"
- ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே மேலப்பாளையம் பிரிவுகள் 1 மற்றும் 2 அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
- அம்பாசமுத்திரம் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் கனரா வங்கி அருகில் மின் இணைப்பு எண்னணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் சந்திப்பு உப கோட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே மேலப்பாளையம் பிரிவுகள் 1 மற்றும் 2 அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் படி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் கனரா வங்கி அருகில் மின் இணைப்பு எண்னணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதனை நகர்ப்புறக் கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன், உதவி மின் பொறியாளர்கள் கார்த்திக்குமார், ரத்தினவேணி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ளதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம்
- முகாமில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு முகாம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் பணித்துள்ளதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடி களிலும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்பட உள்ளது. முகாமில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
பொதுமக்கள் தங்கள் முகவரிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்று அங்கு பணியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் படிவம் 6 பி பூர்த்தி செய்து தங்களது ஆதார் அட்டை விவரங்களை முன்வந்து http://www.nvsp.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது Play store-ல் Voter's Help Line App-ஐ பதிவிறக்கம் செய்து ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம்.
இந்த வாய்ப்பினை தகுதி உள்ள அனைவரும் பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்