என் மலர்
நீங்கள் தேடியது "Aadipura Pramotsavam"
- நாளை தொடங்குகிறது
- சிவன் கோவில்களில் தீமிதி விழா
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோ றும் ஆடிப் பூரம் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூரம் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதையொட்டி, அன்று அதிகாலை 5.45 மணி முதல் 6.45 மணிக்குள், உண்ணா முலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் ஆடிப்பூரம் பிர மோற்சவ கொடியேற்றம் நடைபெறும். அலங்கார ரூபத்தில் உண் ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப் பார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா உள்ளிட்ட முக்கிய விழாக் கள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அதில், உண்ணா முலையம்மன் சன்னதி எதிரில் உள்ள கொடி மரத்தில், கொடி யேற்றத்துடன் தொடங்கும் விழா ஆடிப்பூர பிரமோற்சவம் நடைபெறுவது தனிச் சிறப்பாகும்.
விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், காமதேனு வாகனத்தில் அம்மன் திரு வீதியுலாவும் நடைபெறும்.
மேலும், ஆடிப்பூரம் பிர மோற்சவ விழாவின்போது, பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடை பெறுகிறது . அதன்படி, முதல் நாளன்றே பூரம் நட்சத்திரம் அமைவதால், நாளை இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா வும் நடைபெற உள்ளது.
சிவன் கோவில்களில் தீமிதி விழா நடைபெறும் சிறப்பும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து, வருகிற 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் உலா வந்து அருள் பாலிக்கின்றனர்.