என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Accidemt"
- ராமர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த ஆபிரகாமுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு செங்குளத்தை சேர்ந்தவர் ராமர் (வயது24). இவர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த ஆபிரகாமுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இளையாமுத்தூர் விலக்கு அருகே வந்த போது, அந்த வழியாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் ராமர், ஆபிரகாம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர்.
- பலியான வியாபாரி மாவடியில் சுவீட் கடை வைத்து நடத்தி வந்தார்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள் கீழே விழுந்ததுள்ளது. அதை எடுக்க முயன்ற போது கீழே விழுந்துள்ளார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வடக்கு சாலைப்புதூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
வியாபாரி
இவர் மாவடியில் சுவீட் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 11-ந்தேதி நடராஜன் களக்காட்டிற்கு வந்து கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மாவடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சாலைப்புதூர் அருகே உள்ள பாலத்தில் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள் கீழே விழுந்தது. இதை எடுக்க முயற்சி செய்த போது, மோட்டார் சைக்கிள் கீழே சரிந்து விழுந்தது. இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.
பலி
தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்