என் மலர்
நீங்கள் தேடியது "accident farmer death"
எடப்பாடி:
எடப்பாடி அடுத்த ஆவணிப்பேரூர் கீழ்முகம் ஊராட்சிக்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டி, மலையம்பழத்தான் வலவு பகுதியை சேர்தவர் செங்கோடன் (வயது 60), விவசாயி.
இவர் இன்று காலை தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவருடன், விவசாய நிலத்திற்கு உரம் வாங்குவதற்காக அருகில் உள்ள பக்கிரி காட்டுவளவு பகுதிக்கு மொபட்டில் சென்றார்.
அப்போது எடப்பாடி புறவழிச் சாலையை கடக்க முயன்றபோது பிரதான சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காகமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செங்கோடன் சம்பவ இடத்திலேயே பலியானர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செங்கோடன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தினை தேடி வருகின்றனர்.