என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ACHIVEMENT"
நொய்யல்,
கரூர் குறுவட்ட அளவில் நடைபெற்ற மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 17 வயதிற்கு உட்பட்ட
கோலூன்றித் தாண்டுதல் பிரிவில் விளையாடினார்கள்.இதில் 8 ஆம் வகுப்பு மாணவி சுபாஷினி 2-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கோலூன்றி தாண்டுதல் பிரிவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்.
- தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- ப்ளூபேர்டு பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் 2-வது இடம் மற்றும் 3-வது இடங்களை பிடித்தனர்.
பல்லடம் :
கோவை, சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பல்லடத்தில் உள்ள ப்ளூபேர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ப்ளூபேர்டு பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் 2-வது இடம் மற்றும் 3-வது இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்யின் முதல்வர் சு.ஹேமலதா வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
- விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
- குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர்.
திருப்பூர் :
பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தடகளப் போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதில் குண்டு எறிதல் போட்டியில் ஆர்யுஸ் ரோகித் என்ற மாணவர் தங்க பதக்கம் பெற்றார்.
யுவன் பாரத் என்ற மாணவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றார். அபிகிருஷ்ணன் உயரம் தாண்டுதலில் தங்கம் பதக்கம் பெற்றார். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புவனேஸ் என்ற மாணவன் தங்க பதக்கமும், 200 மீட்டரில் வெள்ளி பதக்கமும் பெற்றார். சஞ்சய் மும்முறைத்தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 400 மீட்டரில் காயத்ரி வெள்ளிப் பதக்கமும் வெண்கல பதக்கமும் வென்றார்.
குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் தேர்வாகியுள்ள மாணவர்களை பள்ளி நிர்வாகிகள், தாளாளர் சாமிநாதன் , மூத்த முதல்வர் மணிகண்டன், முதல்வர் சின்னையா, துணை முதல்வர் ரவி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.
- வடகாடு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்
- பல்வேறு விளையாட்டு போட்டிகளில்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போ ட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். இ வர்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி பாராட்டி னார்.
வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் ஆகிய போட்டிகளில் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். இதேபோன்று, 400 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் இடம், குண்டெறிதலில் முதலிடம், 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் மாணவர்கள் 2-ம் இடம் பெ்ற்றனர்.
மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம், 19 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3-வது இடமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடம், கடற்கரை கைபந்து போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம், 17 -வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடம் பிடித்து மாணவர்கள் சாதித்துள்ளனர். மேலும், 19 வயது க்கு உட்பட்ட வாலிபால் போட்டியில் மாணவிகள் 3-வது இடம் பெற்றனர்.
மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கைப்பந்து போட்டியிலும், 17 வயது வயதுக்கு உட்பட்ட மாணவிகள் கடற்கரை கைப்பந்து போட்டியிலும், 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் போட்டியில் மாணவி காவியாவும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
அடுத்தடுத்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவ, மாணவிகளையும் அவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி பாராட்டினார்.
- சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
- வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி டிரஸ்டி, தாளாளர், முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.
சுரண்டை:
வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன. அதில் கைப்பந்து போட்டியில் சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தொடர்ந்து கடந்த 21-ந்தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வட்டார அளவில் வெற்றி பெற்ற அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன. அதிலும் ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் தனது முழுத்திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றனர்.இதன் மூலம் ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் தென்காசி மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் டிரஸ்டி, தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
- அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
- மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான ஜுடோ போட்டிகள் கந்தர்வகோட்டையில் அண்மையில் நடைபெற்றது.போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.அப்துல் ஆரிப் 60 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று முதலிடமும், மாணவன் கே.சிராஜ் 66 கிலோ எடைப்பிரிவில் முதவிடமும், மாணவன் டி.சண்முகசுந்தரம் 55 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும், மாணவன் கேஎம்.அருளானந்தன் 90 கிலோ பிரிவில் முதலிடமும், மாணவன் பி.சந்தோஷ்குமார் 66 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும், மாணவன் வி.மனோஜ் 50 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும் பெற்றனர்.மேலும் பள்ளி மாணவ, மாணவியர் 6 பேர் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளர் வீரையா, பயிற்சியாளர் பிரகாஷ் உள்ளிட்டோரை பள்ளியின் முதல்வர் ச.ம.மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்