search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Action to be taken to prevent accidents"

    • தேசிய நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் பலி எதிர்ரொலி
    • 5 கிலோ மீட்டரில் சோதனைச் சாவடிகள் உருவாக்கப்படும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 15 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் இந்த சாலையில் விபத்துகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரைகள் வழங்கப்பட உள்ளதாகாக தெரிவித்தனர்.

    இந்த ஆய்வு குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீசார் கூறியதாவது:-

    மொத்தம் 180 கி.மீ., திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 60 கி.மீ., திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்கிறது.

    தற்போதுள்ள சோதனைச் சாவடிகள் இரட்டிப்பாக்கப்பட உள்ளது.

    பெரும்பாலான பயணிகள் புதுச்சேரி மற்றும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒவ்வொரு 5 கி.மீ.க்கும் ஒரு சோதனைச் சாவடிகள் உருவாக்கப்படும், இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் வகையில் கான்கிரீட் மீடியனில் மிளரும் விளக்குகள் அமைக்கப்படும்.

    குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கு எதிராக கூடுதல் விழிப்புணர்வு பலகைகளை நிறுவப்படும், நவீன தொழில்நுட்பம் மூலம் மூலம் குறுகிய வளைவுகளை குறைத்தல் மற்றும் சாலை விரிவாக்கத்திற்கு இடம் வழங்குதல் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட உள்ளதாக கூறினர்.

    ×