என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actor Dhanush"

    • இந்தியாவின் போக்குவரத்து விதிமீறல்கள் பலரால் விமர்சிக்கப்பட்ட ஒன்று
    • 2022ல் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்தார்

    கடந்த மாதம் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ஒரு கருப்பு நிற கார் வேகமாக ஒரு சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருக்கும் இரண்டு கார்களின் மேல் மோதுகிறது. அதில் அந்த இரு கார்களும் முற்றிலும் சேதமடைந்து கவிழ்கின்றன. அருகே உள்ள மக்கள் இதனை கண்டு அலறியடித்து கொண்டு ஓடுகின்றனர்.

    ஒரு சிலர், கார்களிலிருந்து சிதறி காற்றில் பறக்கும் கண்ணாடி துண்டுகள் மற்றும் உலோகங்கள் தங்களை தாக்குவதில் இருந்து தப்பிக்க கீழே குனிந்து கொள்கின்றனர். இந்த வீடியோவுடன், "இது எந்த கார்? நல்ல வேளையாக உள்ளே யாரும் இல்லை. இந்தியா" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது.

    இந்தியாவின் போக்குவரத்து விதி மீறல்களும், சாலைகளின் தரமும், இந்தியர்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதும் பல முறை பலரால் உலகளவில் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வீடியோ அத்தகைய கருத்துக்களுக்கு வலுவூட்டுவதாக சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

    ஆனால், ஆய்வில் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் உண்மையில்லை என்பதும், அந்த சம்பவம் நடைபெறுவது இந்தியாவிலேயே இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.

    தேடுதலில் இந்த வீடியோவின் முழுப்பகுதி கிடைத்தது. அதில் "ப்ரேக் நகரில் படப்பிடிப்பு" என குறிப்பிடப்பட்டுள்ளது. சாலையில் நிற்கும் இரு கார்களும், மக்கள் நடப்பதும், அதற்கு பிறகு கருப்பு கார் வந்து நின்று கொண்டிருக்கும் கார்களின் மேல் மோதுவதும், மக்கள் ஓடுவதும் மட்டுமல்லாமல் அதனுடன் சினிமா படப்பிடிப்பு கேமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்கள் ஆகியவை உள்ளதும் தெரிந்தது.

    மேலும் ஆய்வில், இவை 2022-ல் வெளியான "தி க்ரே மேன்" எனும் ஆங்கில திரைப்படத்தின் படப்பிடிப்பின் காட்சிகள் என்பதும் அந்த படப்பிடிப்பு செக் குடியரசின்தலைநகரான ப்ரேக் நகரில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதும் இந்த வீடியோ 2021 ஆண்டிலேயே வீடியோவாக வெளிவந்தது என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த ஆங்கில திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • வுண்டர்பார்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
    • என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருக்கும் நடிகை அனிக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    நடிகர் தனுஷ் பா பாண்டி படத்தின் மூலம் 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தற்போது நடிகர் தனுஷ், தான் நடிக்கும் 50-வது படத்தை இயக்கி வருகிறார்.

    தொடர்ந்து, தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் சர்ப்ரைசாக வெளியிடப்பட்டு இருக்கிறது. தனது வுண்டர்பார்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில், இளம் பட்டாளமே களம் இறங்கியுள்ளது. என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருக்கும் நடிகை அனிக்கா, பிரியா வாரியர், பவிஷ், ரபியா, மேத்யூ, ரம்யா, வெங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, DD3 குறித்த அப்டேட் 24.12.2023 (இன்று) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில், "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்கிற தனது படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," DD3- நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.. ஒரு வழக்கமான காதல் கதை" என்று குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், அந்த பதிவுடன் DD3 போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டருக்கான லிங்க்கும் வெளியிடப்பட்டுள்ளது.

    தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
    • ராயன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக போஸ்டருடன் வெளியிடப்பட்டது.

    தொடர்ந்து இன்று 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவனும் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

    இந்நிலையில், "உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை" என நடிகரும், இயக்குனருமான தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் செல்வராகவனின் போஸ்டருடன் பதிவிட்டுள்ளார்.

    இதற்கு பதிலளிக்கும் விதிமாக, "வாய்ப்பிற்கு நன்றி இயக்குனர் சார். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்" என செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • 'ராயன்' வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    தனுஷின் 50-வது படமான 'ராயன்' கடந்த 26-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில் நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் 'ராயன்' படத்தின் "அடங்காத அசுரன்" பாடலைப் பாடிய உணர்ச்சிகரமான குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

    அதனுடன், 'நான் எழுதிய 'உசுரே நீதானே' என்ற இந்த இரண்டு எளிய வார்த்தைகள் உங்கள் மேஜிகள் இசையால் இத்தனை கோடி பேரை கவரும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

    புக்கிட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியத்தில் சுமார் 35,000 ரசிகர்கள் அடங்கிய நிகழ்ச்சியில் இந்திய இசை ஜாம்பவான் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அங்கு 'ராயன்' படத்தின் மோஷன் போஸ்டரும் எல்இடி திரையில் காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சி சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் தனுஷ் மீது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
    • தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த பிரச்சினை சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை.

    நடிகர் தனுஷ் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்று கூறியது உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் சங்கத்தின் குற்றச்சாட்டுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 29.7.2024 அன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் தனுஷ் மீது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

    கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் முக்கிய 5 நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தகவல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் தெரியப்படுத்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

    மேலும், கடந்த ஓராண்டு காலமாக தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அவர்களுக்கு மேற்படி விஷயம் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த பிரச்சினை சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை.

    தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனை காக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    அதேபோல கடந்த 1.11.2024 முதல் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தி திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் தொடர தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய கூட்டமைப்பு சேர்ந்து எடுத்த தீர்மானத்திற்கு தாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளீர்கள்.

    இன்றைய சூழ்நிலையில் முதல் போடும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை பெரும் பொருளாதார இழப்பில் இருந்து பாதுகாத்து திரைத் துறையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது. ஆகையால்தான் கூட்டமைப்பு கூட்டத்தினை கூட்டி இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு, அந்த வரிசைப்படித்தான் நடித்துக் கொடுத்து வருவது காலம் காலமாக இருந்து வருவதும் மரபு.

    அவ்வாறு இல்லாமல் புதிதாக திரைப்படம் எடுக்க வருபவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏற்கனவே பணம் கொடுத்தவர்களுக்கு நடித்து கொடுக்காமல் மற்றவர்களுக்கு நடித்துக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?

    இப்படி இக்கட்டான சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் கூட்டமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட அறிக்கையை தவறானது கண்டனத்துக் குரியது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கூறி இருப்பது வாபஸ் பெற வேண்டும்.

    எப்படி தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களை பாதுகாக்கிறார்களோ, அதே போல் எங்களது சங்க உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது.

    நடிகர்களின் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால் மேலும் மேலும் நஷ்டத்தை எதிர்கொள்ள தயாரிப்பாளர்களால் இயலவில்லை.

    கடந்த ஆறு மாத காலத்தில் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை வியாபாரம் செய்ய ஒ.டி.டி. தளம் மற்றும் சாட்டிலைட் என அனைத்து வியாபார தளங்களிலும் பொருளாதார ரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை கருத்தில் கொண்டு அவர் களை காப்பாற்றிடவும் எதிர்கால தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும் என்பதற்காகவும் மேற்கண்ட தீர்மானங்கள் கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஏற்கனவே கூட்டமைப்பின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூன்று சங்கங்களும் உறுதியாக உள்ளது. இதனை புரிந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கமும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.
    • இட்லி படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் நடித்து, இயக்கி வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் நடிப்பில் வெளியான 50-ஆவது படமாக ராயன் அமைந்தது.

    ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மேலும், இந்த படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.

    "இட்லி கடை" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை கிரன் கௌஷிக் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா ஜிகே மேற்கொள்கிறார்.

    இந்த படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இந்நிலையில், இட்லி கடை படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் டீ கப் உடன் செல்பி எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு.
    • நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்.

    நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸுடன் வெளியானது. நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள், விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவணப்படமாக வெளியிடவுள்ளனர்.

    'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வரும் 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவண படத்தை வெளியிடவுள்ளது.

    இந்நிலையில் தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில், தனுஷை வன்மையாக கண்டிக்கும் நயன்தாராவின் பதிவிற்கு லைக் செய்து நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இதில், தனுஷூடன் ஜோடியாக நடித்த நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, பார்வதி, நஸ்ரியா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நயன்தாராவுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

    • திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம்
    • நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை.

    நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸுடன் வெளியானது. நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள், விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவணப்படமாக வெளியிடவுள்ளனர்.

    'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வரும் 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவண படத்தை வெளியிடவுள்ளது.

    இந்நிலையில் தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தனுஷை வன்மையாக கண்டிக்கும் நயன்தாராவின் பதிவிற்கு லைக் செய்து நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நயன்தாரா- விக்னேஷ் சிவன் பதிவுக்கு, நடிகர் தனுஷ் தரப்பு விளக்கம் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    • நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார்.
    • நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயந்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    நடிகை நயன்தாராவின் சினிமா வாழ்க்கை மற்றும் திருமண நிகழ்ச்சிகள் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டு கடந்த 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

    முன்னதாக ஆவணப்படத்தின் முன்னோட்ட காட்சிகளில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகள் முன் அனுமதி இல்லாமல் இடம் பெற்றுள்ளதாகவும் இதற்கு இழப்பீடாக ரூ.10 கோடி கேட்டும் நடிகர் தனுஷ் நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

    இதை கண்டித்து தனுஷ் மீது நயன்தாரா பல குற்றச்சாட்டுகளை கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    தனுஷ் எதிர்ப்பை மீறி கடந்த 18-ந்தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    இந்த நிலையில் நயன்தாராவுக்கு எதிராக தனுசின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளி வைத்தார்.

    • ரஜினி- நயன்தாரா நடித்திருந்த சந்திரமுகியை சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
    • சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை நயன்தாரா வெளியிட்டிருந்தார்.

    நடிகர் தனுஷை தொடர்ந்து சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு நடிககை நயன்தாராவுக்கு மற்றொரு நிறுவனமும் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரஜினி- நயன்தாரா நடித்திருந்த சந்திரமுகியை சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

    இந்நிலையில், நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் சந்திரமுகி திரைப்பட காட்சியை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சந்திரமுகி திரைப்படத்தின் ஆன்லைன் தொடர்புடைய உரிமை, வேறொரு நிறுவனத்திடம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, திருமண ஆவணப்படத்தில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை நயன்தாரா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம் பெற்று இருந்தது.
    • நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

    நடிகை நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-இல் வெளியானது.

    இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம் பெற்று இருந்தது.

    இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 22-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

    நெட்பிளிக்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து தான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

    இதற்கு தனுஷின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சியில் அனைத்தும் தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். இந்தப் படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும்போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்பந்தமிடப்பட்டு, அதில் அவரும் கையெழுத்திட்டுள்ளார், படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் வொண்டர்பாருக்கு சொந்தமானது என்று வாதிட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தனர். தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரிய நெட்பிளிக்சின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது எனக்கூறி நெட்பிளிக்ஸ் மனுவை நிராகரித்தனர்.

    இதைத்தொடர்ந்து வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஏப்ரல் 9ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

    ×