search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Karthik"

    • தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.
    • அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகர பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி ஆகியோரை ஆதரித்து இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதா வது:-

    நல்லவர்களுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் மக்களின் தேவைகளுக்கு நாடாளு மன்றத்தில் குரல் எழுப்ப முடியும். உசிலம்பட்டிக்கு வந்தாலே நான் உணர்வு பூர்வமாக ஆகிவிடுகிறேன். நான் யாரையும் குறைகூறி பிரசாரம் செய்பவன் அல்ல. கச்சத்தீவை மீட்போம் என்று கூறினார்கள். ஆனால் இது வரைக்கும் என்ன செய்தீர்கள்? வெள்ளம் வந்தபோது தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேனி பிரசாரத்தில் பேசியபோது தான் நடித்த 'அமரன்' படத்தில் சொந்தக் குரலில் பாடிய பாடலை பிரசாரத்திற்காக அதே மெட்டில் மாற்றி, 'அமரன்' பாட்ட கேட்டால் சோடா பாட்டில் அல்ல, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் பறக்கும்' என அதே மெட்டில் பாடிக் காட்டினார். இதை கேட்டு அவரது ஆதரவாளர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் உற்சாகமடைந்த நடிகர் கார்த்திக்கும் மேலும் 2 வரியை பாடி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்தார் 2, தீரன் அதிகாரம் 2, கைதி 2 ஆகிய பார்ட் 2 படங்களில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
    • டாணாக்காரன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    கார்த்தியின் 25-வது படமாக வெளிவந்த ஜப்பான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து அவர் தற்போது '96' பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்திலும், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சர்தார் 2, தீரன் அதிகாரம் 2, கைதி 2 ஆகிய பார்ட் 2 படங்களில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இந்த வரிசையில் கார்த்தியின் புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, டாணாக்காரன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    விக்ரம் பிரபு, எம்.எஸ் பாஸ்கர், லால் உள்ளிட்ட பலர் நடித்த டாணாக்காரன் படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான டாணாக்காரன் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    கார்த்தி - தமிழ் இணையும் இப்புதிய படம், 1960-களின் காலகட்டத்தில் நடைபெறும் கேங்க்ஸ்டர் பின்னணியில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குநர் தமிழ் ஜெய்பீம், வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது
    • ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது.

    நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான 'பிரிஞ்சி' (வெஜிடபிள் பிரியாணி) ரூபாய் 10க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது

    ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது

    ஊருக்கே உணவு சப்ளை செய்யும் டெலிவரி பாய்கள், கொரியர் மேன்கள், உதவி இயக்குனர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் போன்ற பலருக்கு இந்த உணவகம் தினமும் பசியாற்றி வருகிறது.

    லாப நோக்கம் எதுவும் இன்றி ஒரு மக்கள் சேவையாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று 17.04.2024) இந்த உணவகம் தொடங்கி தனது 500-வது நாளை நிறைவு செய்தது.

    நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கி செயல்படுத்தி வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று புதிய கட்சி தொடங்கினார்.#ActorKarthik

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் புதிய கட்சியை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ‘மக்கள் உரிமை காக்கும் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்குவதாக நடிகர் கார்த்திக் அறிவித்து, அதற்கான கொடியையும் அறிமுகம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு நாடாளும் மக்கள் கட்சி செயல்படவில்லை. அந்த கட்சியை கலைத்து விட்டு தற்போது மக்கள் உரிமைகளை வென்றெடுக்க ‘மக்கள் உரிமை காக்கும் கட்சி‘ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கட்சியை விரைவில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளேன்.

    அதன் பிறகு அம்பையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தப்படும். அப்போது தமிழக மற்றும் இந்திய அரசியல் குறித்து பேசுவேன். சுதந்திர இந்தியாவில் மனித உரிமைகளை போராடி பெற வேண்டி உள்ளது. எனவே கட்சிக்கு இத்தகைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அரசியலில் சிறிது இடைவெளி ஏற்பட்டு விட்டது. இனி அரசியலைவிட்டு ஒருபோதும் போகமாட்டேன்.வருகிற தேர்தல்களில் கண்டிப்பாக போட்டியிடுவோம். தனித்து போட்டியா?, கூட்டணி அமைத்து போட்டியா? என்பது தேர்தலின் போது அறிவிக்கப்படும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும். ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு 13 பேரின் உயிர்களை இழந்து விட்டோம். இனிமேல் போராட்டத்தினால் மனித உயிர்களை இழக்க கூடாது. மக்கள் உரிமை காக்கும் கட்சி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும்.

    கஜா புயல் நிவாரண பணிகளை தமிழக அரசு முறையாக செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு முழுமையாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார். #ActorKarthik

    காவல் துறையை கண்டித்து கருணாஸ் பேசியது கோழைத்தனம் என்று மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் கூறினார். #Karunas #Karthik
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2½ ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகி இருந்தேன். அதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அப்படி ஒதுங்கி இருந்திருக்கக்கூடாது.

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பகுதி நேர அரசியல்வாதிகளாக இல்லாமல் முழுநேர அரசியல் வாதிகளாக செயல்பட வேண்டும். இனி நானும் முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவேன்.

    எனது கட்சியில் தவறு செய்தவர்கள் அவர்களாகவே ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் நான் விலக்க நேரிடும்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். அதே சமயத்தில் திருவாரூர் தொகுதி மிகப்பெரிய தலைவர் போட்டியிட்ட இடம் என்பதால் அதில் போட்டியிடவில்லை. பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவோம்.

    மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும். ஆளும் கட்சி மக்களுக்கு எதிராக இருந்தால் அதற்கு எனது ஆதரவில்லை.


    தமிழர்களுக்கு வீரம் அதிகம். போராடலாம். ஆனால் கொலை செய்யக் கூடாது. காவல்துறையை கண்டித்து கொலை செய்வோம் என கருணாஸ் என்ன காரணத்துக்காக கூறினார் என்று தெரியவில்லை. அவர் அவ்வாறு பேசியது கண்டித்தக்கது. இது மிகவும் கோழைத்தனமான செயலாகும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #Karunas #Karthik
    இதுவரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். “இனி, நான் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன்” என்று நடிகர் கார்த்திக் கூறினார்.
    சென்னை:

    கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தில் தந்தை-மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இதுவரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. சமீபகாலமாக நான் அரசியலை விட்டு விலகியே இருந்தேன். அதற்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் தான் காரணம்.

    இனி, நான் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அவர்களும் பகுதிநேர அரசியலில் தான் ஈடுபட்டு இருக்கிறார்கள். இருவரும் முழு நேர அரசியல்வாதியாக மாறவேண்டும். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும்.

    நான் என் அப்பா முத்துராமனுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டேன். அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனால் என் மகன் கவுதம் கார்த்திக் என்னுடன் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது.



    கவுதம் கார்த்திக்குடன் நான் இணைந்து நடித்தது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து நடித்த ‘மிஸ்டர் சந்திரமவுலி’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுமாதிரி ஒரு நல்ல கதையம்சம் உள்ள படத்தை டைரக்டர் திரு கொடுத்திருக்கிறார். தனஞ்செயன் பிரமாண்டமாக தயாரித்து இருக்கிறார்.

    சினிமாவில் இப்போது உள்ள இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார்கள். திறமையாக நடிக்கிறார்கள். கவுதம் கார்த்திக்கும் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டான். தொடர்ந்து அவன் கடினமாக உழைத்து நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று அவனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×