search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Kasthuri"

    • இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
    • இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்க கூடாது என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி வருமாறு:-

    ஜனநாயக நாட்டில் தேர்தலை மக்கள் புறக்கணிக்கவே கூடாது. அதற்கான விழிப்புணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டின் 2-ம் பெரிய கட்சியான அ.தி.மு.க.வே தேர்தலை புறக்கணிக்கிறது என்பது எனக்கு ஏற்புடையது இல்லை. அவர்கள் போட்டியிட வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

    இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்பது தமிழ்நாட்டில் இது முதல் தடவை என்று நான் நினைக்கிறேன். எனவே இது எனக்கு ஏற்க முடியாத ஒரு அறிவிப்பாக இருக்கிறது. இதை எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற பலரது விருப்பமாக இருக்கிறது.

    தி.மு.க. இருக்கும் இடத்தில் அ.தி.மு.க. அதை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் அது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய ஒரு அ.தி.மு.க.வாக இருக்கும். அவர்கள் ஒதுங்கிப்போவது என்பது கண்டிப்பாக பா.ஜ.க. தான் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி, நாங்கள் 3-வது இடத்துக்கு வந்து விட்டோம் என்று அவர்களே வாக்குமூலம் கொடுப்பது போல் இருக்கிறது. என்னாலும், என்னைப்போல் இருப்பவர்களாலும் அதை ஜீரணிக்கவே முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெங்கு, மலேரியா உங்கள் குடும்பத்திலேயே முற்றியிருக்கிறதே. அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?
    • கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்று கலைஞர் அன்றே சொன்னார்.

    சென்னை:

    சனாதனதர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகையும் சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

    டெங்கு, மலேரியா உங்கள் குடும்பத்திலேயே முற்றியிருக்கிறதே. அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி சனாதனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதலில் உண்டியலில் இருந்து கையை எடுங்க.

    கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்று கலைஞர் அன்றே சொன்னார். இதைத்தான் சொன்னார் போலும்.

    சனாதன எதிர்ப்பில் தி.க.வை. போல் தி.மு.க.வும் உறுதியாக இருந்தால் முதலில் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். ஏனெனில் பல சனாதனவாதிகள்தான் அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    4 தொகுதிகளிலும் நினைத்ததை விட அதிகமாகவே கமல்ஹாசன் ஓட்டு வாங்குவார் என்று நடிகை கஸ்தூரி கூறி உள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே. அவர் ஒரு இந்து என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பதட்டம் நிலவி வருகிறது.

    இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கமல் 30 வினாடிகள் பேசியதை 3 நாளாக பேசிக்கொண்டு இருக்கிறோம். பேசியே ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினவர்கள் இப்போது கமல் பேசியதை நாடு முழுக்க பிரபலப்படுத்தி விட்டார்கள்.



    இதைவிட ஒரு சூப்பர் பிரசாரம் அவருக்கு அமையுமா? இந்த 4 தொகுதியில் நினைத்ததை விட அதிகமாகவே அவர் ஓட்டு வாங்குவார் பாருங்கள்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


    ×