என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Actress Meena"
- IIFA விருது விழாவில் நடிகை மீனாவும் கலந்து கொண்டுள்ளார்.
- தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன் என மீனா பேசியுள்ளார்.
2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கிய இந்த மூன்று நாள் விழா செப்டம்பர் 29 ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த விருது விழாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகின் பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அழைப்பின் பேரில் நடிகை மீனாவும் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் மீனாவை பேச அழைத்தனர். அப்போது செய்தியாளர்களில் ஒருவர் அவரிடம் "இந்தியில் பேசுங்கள்" என்றார். அதைக்கேட்டு கடுப்பான மீனா, "இது இந்தி விழாவா? இந்தியில்தான் பேச வேண்டுமா? அதுக்கு எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?
தென்னிந்தியர்கள் மட்டும் தான் இங்கே வருகிறார்கள் என நினைத்தேன். தென்னிந்திய படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன்" என மீனா பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
She is very candid and very humble. She doesn't wear a celebrity hat. "Hindi ya, eppadi ennai kuputingge?" ??A very proud South Indian queen for a reason ? #Meena #IIFA #IIFAUtsavam2024 #IIFAUtsavam #IIFA2024 pic.twitter.com/rrWKvzwbcp
— Meena ᴹᴱᴱᴺᵁ (@Meena_team) September 29, 2024
- இன்ஸ்டா பக்கத்தில் உலகக் கோப்பையை வைத்து எடுத்த புகைப்படங்களை நடிகை மீனா ஷேர் செய்துள்ளார்.
- ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலகக் கோப்பையுடன் நடிகை மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவணை சில நாட்கள் முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சி முகாமை தொடங்கினர். இந்த முகாமில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகக் கோப்பை 2023-ஐ நடிகை மீனா அறிமுகப்படுத்தி உள்ளார். ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலகக் கோப்பையுடன் நடிகை மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது இன்ஸ்டா பக்கத்தில் உலகக் கோப்பையை வைத்து எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ள நடிகை மீனா விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
இதுவரை எந்தவொரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமைக்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளேன் என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிறகு நடிகை மீனாவுக்கு திரையுலகமே ஒன்று திரண்டு நிகழ்ச்சி நடத்தி உற்சாகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. ஆனால் கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் அந்த கட்சி தான் முக கவசம் வழங்க வேண்டும்.
- நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்ததாக சொல்லப்படுவது தவறாகும். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வந்தது. எனவே நேற்று கொரோனா பாதிப்பால் அவர் இறக்கவில்லை.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து 4 மணி நேரம் நின்று பொதுமக்களுக்கு 50 ஆயிரம் முக கவசங்களை இலவசமாக வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க முக கவசங்கள் அணியுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கூட்டம் எங்கு கூடினாலும் அங்கு முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. ஆனால் கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் அந்த கட்சி தான் முக கவசம் வழங்க வேண்டும். அவர்களது கட்சிக்காரர்களை அவர்கள்தான் பாதுகாக்க வேண்டும்.
நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்ததாக சொல்லப்படுவது தவறாகும். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வந்தது. எனவே நேற்று கொரோனா பாதிப்பால் அவர் இறக்கவில்லை.
மீனாவின் கணவருக்கு கடந்த டிசம்பர் மாதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. வீட்டிலேயே ஆக்சிஜன் உதவியுடன் இருந்தார். டிசம்பர் மாதம் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். 6 மாதம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார்.
அவருக்கு இருதயம், நுரையீரல் ஆகிய இரு உறுப்புகளும் செயல் இழந்து விட்டது. 95 நாட்கள் சுயநினைவின்றி எக்மோ சிகிச்சையில் இருந்தார்.
15 நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தேன்.
அவரது நிலைமை மோசமாகவே இருந்தது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு யாராவது தானம் செய்தால் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியா முழுவதும் அவருக்கான உடல் உறுப்பு எந்த ஊரிலும் கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா, பெங்களூர் உள்பட பல இடங்களில் சொல்லி வைத்திருந்தோம். ஆனாலும் அவரது ரத்த வகை பொருந்தவில்லை.
முதல்-அமைச்சர் உள்பட நாங்கள் எல்லோரும் அவரை காப்பாற்ற நிறைய முயற்சி செய்தோம்.
தமிழக அரசு எவ்வளவோ முயற்சித்தும் மீனாவின் கணவரை காப்பாற்ற முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் வருகிற 10-ந்தேதி 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதாகவும் சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
- பெங்களூரூவைச் சேர்ந்த வித்யாசாகர் திருமணத்திற்குப் பிறகு மீனாவுடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்தார்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டிருகிறது. இதோடு கொரோனா பரவலும் சேர்ந்து அவருக்கு மூச்சு பிரச்சனையை அதிகப்படுத்தியிருக்கிறது.
சென்னை:
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். நேற்று இவர் காலமானார். அவருக்கு வயது 48.
மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அவருக்கு ஏற்கனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனாவுக்குப் பின் அது தீவிரமடைந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் திடீரென அவருக்கு நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து உள்ளது.
அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போய் உள்ளது.
மாற்று நுரையீரலுக்காக சென்னை உட்படபல இடங்களில் மூளைச்சாவு அடைந்தவர்கள் உறுப்புகள் கிடைக்கிறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது குடும்ப நண்பர்கள் சிலர் 48 வயதே ஆன வித்யாசாகரின் மரணத்திற்கு சொல்லும் காரணம் அதிர வைத்திருக்கின்றன.
பெங்களூரூவைச் சேர்ந்த வித்யாசாகர் திருமணத்திற்குப் பிறகு மீனாவுடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டிருகிறது. இதோடு கொரோனா பரவலும் சேர்ந்து அவருக்கு மூச்சு பிரச்சனையை அதிகப்படுத்தியிருக்கிறது. இதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு பெங்களூருவிலேயே தங்கியிருந்தார். பெங்களூருவில் இவர்கள் வாழும் வீட்டுக்குப் பக்கத்தில் அதிக அளவில் புறா வளர்க்கப்பட்டு வந்ததாகவும் இந்த புறாக்களின் எச்சத்தின் மீது பட்டு வீசும் காற்றை தொடர்ந்து அவர் சுவாசித்ததன் காரணமாக வித்யாசாகருக்கு புதிய தொற்று பரவி நுரையீரலை அதிக அளவில் பாதித்திருக்கிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட வித்யாசாகர் ஆழ்வார்பேட்டை பகுதியிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அப்போதுதான் இரண்டு நுரையீரல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. இதற்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நிலையில்தான் இரண்டு நுரையீரலைத் தொடர்ந்து சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. வித்யாசாகரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடியிருக்கிறார்கள். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. திரையுலகினர் பலரும் தங்கள் ஆறுதலை மீனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சரத்குமார் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திரைப்பட நடிகையும், என் குடும்ப நண்பருமான நடிகை மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் இறந்ததை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனா, நைனிகாவும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்'' என கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என் அன்புக்குரிய தோழி மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்துபோன தகவலோடு எழுந்திருக்கிறேன். நீண்டகாலமாக நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் இப்போது உயிரோடு எங்களுடன் இல்லை என்பது பயங்கரமாக இருக்கிறது. மீனாவுக்கும், அவரது மகள் நைனிகாவுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, மீனாவின் குடும்பத்தின் துயரச் செய்தியோடு இன்று காலை விடிந்தது. அவர்களது குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகை மீனா எப்போதும் மங்களகரமான முகத்துடன் குடும்பத் தலைவி போன்ற கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தோற்றத்தில் இருப்பார். குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் அனைத்து ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார். 90களின் முன்னனி நடிகையாக இருந்தவர் தற்போது வரைக்கும் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
- வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனாவும், நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்.
சென்னை:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
தென்னிந்திய திரைப்பட நடிகையும், எனது நெருங்கிய குடும்ப நண்பருமான நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனாவும், நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்.
அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உற்றார்-உறவினர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொண்டு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக் கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மீனாவின் தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகாவுக்கு கொரோனா பாதிப்பு.
- நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே வித்யாசாகர் இறப்புக்கு காரணம் என தகவல்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வித்யாசாகர் உயிரிழந்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நுரையீரல் பிரச்சனையுடன் கொரோனா பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்று கருதப்படுகிறது. முன்னதாக மீனாவின் கணவர் வித்யாசாகர், தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள போதும், தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்