search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adam Zampa"

    • தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆடம் சாம்பா இன்றைய போட்டியில் சோபிக்கவில்லை.
    • ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 174 ரன்களை குவித்து அசத்தினார்.

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இன்று இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆடம் சாம்பா இன்றைய போட்டியில் சோபிக்கவில்லை. மாறாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனையை படைத்திருக்கிறார். பத்து ஓவர்கள் பந்து வீசிய ஆடம் சாம்பா 113 ரன்களை வாரி வழங்கினார்.

    ஆடம் சாம்பா பந்துவீச்சில் மட்டும் 8 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் ஒரே ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஆடம் சாம்பா படைத்து இருக்கிறார். 50 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் இத்தகைய மோசமான சாதனையை இதுவரை யாரும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயிண்டன் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 45 மற்றும் 28 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரசி வேன் டெர் டுசென் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 ரன்களை குவித்து அசத்தினார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் எட்டு ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 174 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 13 பவுண்டரிகளும், 13 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஆடிய டேவிட் மில்லர் 45 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 416 ரன்களை குவித்து உள்ளது.

    • ஸ்டோய்னிஸ் கன்னத்தில் ஜாம்பா முத்தமிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    • ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர்.

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் அன்புக்குரியவர்களைக் கெளரவிப்பதற்கும் அவர்களை சிறப்புற உணர வைப்பதற்கும் ஒரு நாள். பலர் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ஒருவருக்கு ஒருவர் காதலர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஜாம்பா ஸ்டோய்னிஸின் கன்னங்களில் முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிக் பாஷ் லீக்கின் ட்விட்டர் பக்கம், "காதலர் தின வாழ்த்துகள்" என்று ஒரு அன்பான ஈமோஜியுடன் தலைப்பிட்டுள்ளது. 

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட் செய்த ரினிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.
    • நடுவர்களின் தீர்ப்பும் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஸ் டி20 லீக்கில் நடந்த ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரினிகேட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ரினிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 108 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ரினிகேட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் ஆடம் ஜம்பா, இந்த போட்டியின் கடைசி ஓவரின் 5-வது பந்தை வீசியபோது பவுலிங் முனையில் இருந்த பேட்ஸ்மேன் ரோஜர்ஸ் பந்துவீசும் முன்பாக கிரீஸை விட்டு வெளியேறினார். இதை கவனித்த ஜம்பா, மன்கட் முறையில் அவரை ரன் அவுட் செய்தார். இது 3-வது நடுவரின் ரிவ்யூக்கு சென்றது.


    மேலோட்டமாக பார்க்கும்போது எல்லாம் சரியாக இருந்து, அவுட் என்று அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பந்துவீசும்போது பவுலரின் கை, 90 டிகிரிக்கும் குறைவான கோணத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. இதை மீறி, 90 டிகிரியையும் தாண்டி ஜம்பாவின் கை சென்றுள்ளது. இதன் அடிப்படையில் ரன் அவுட் கிடையாது என்று நடுவர்கள் முடிவை அறிவித்தனர்.


    அதாவது பவுரின் கை, முன்னால் சென்று விடக்கூடாது என்பது விதிமுறை. அதற்காக இந்த 90 டிகிரி கோண அளவீடு கணக்கிடப்படுகிறது. ஜம்பாவின் மன்கட் அப்பீலும், நடுவர்களின் தீர்ப்பும் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • டி20 உலக கோப்பை தொடரின் ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
    • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    பெர்த்:

    டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாலர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை என அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆஷ்டன் அகர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் மீண்டும் ஜம்பா இணைந்துள்ளார்.
    • ஆஷ்டன் அகர், சீன் அபோட் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    ஆஸ்திரேலியா அணி ஆகஸ்டு மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அதை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலியா ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டது.

    இதில் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறவில்லை. அவரது மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்தால் அந்த தொடரில் இருந்து விலகினார்.

    இந்நிலையில் நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் மீண்டும் ஜம்பா இணைந்துள்ளார். அதே நேரத்தில் ஆஷ்டன் அகர், சீன் அபோட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்ற மிட்செல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்கிலிஸ், ரிச்சர்ட்சன் மற்றும் மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் இந்த அணியில் இடம் பெறவில்லை.

    கரிபியன் ப்ரீமியர் லீக்கில் ஜமைக்கா அணிக்காக விளையாடி வந்த ஆடம் ஜம்பா சொந்த நாடு திரும்புவதால் இஷ் சோதி சேர்க்கப்பட்டுள்ளார். #CPL
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது உள்ளூர் தொடரில் விளையாடுவதற்காக அவர் ஆஸ்திரேலியா செல்கிறார்.

    இதனால் ஜமைக்கா அணி ஆடம் ஜம்பாவிற்குப் பதிலாக இஷ் சோதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்த சீசனில் ஜம்பா 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.


    ஆடம் ஜம்பா

    2013-ம் ஆண்டு டி20 போட்டியில் அறிமுகமான இஷ் சோதி ராஜஸ்தான் ராயல்ஸ், நார்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ், நட்டிங்காம்ஷைர், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
    ×