search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "additional buses"

    • கோடை விடுமுறைக்குப் பின் நாளை 12-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட உள்ளன.
    • உடுமலை ஒன்றியம் ஆண்டியகவுண்டனூரில் அரசு துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.

    உடுமலை:

    கோடை விடுமுறைக்குப் பின் நாளை 12-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட உள்ளன. இதற்காக உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறப்புக்கு தயாராக உள்ளன.

    பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், ஆபத்தான மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், பள்ளி வளாகத்திற்குள் வளர்ந்து நிற்கும் செடிகளை அப்புறப்படுத்துதல், வகுப்பறையை சுத்தம் செய்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும் பணிகள் நடைபெற்று வருகின்றன.எந்தவொரு பணிக்கும் நிதி ஒதுக்கீடு கிடையாது என்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு தூய்மைப்பணியாளர்கள் வாயிலாக இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சொந்த செலவில் தூய்மைப் பணிகளை மேற்கொள்கின்றனர்.கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு தூய்மைப் பணிக்கென 2,500 ஒதுக்கீடு செய்தும் பணியாளர்கள் வர தயக்கம் காட்டுகின்றனர்.

    இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-

    அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்களை கொண்டு சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் தோறும் இரு தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.கட்டட சீரமைப்பு பணிகள் ஆசிரியர்களின் சொந்த செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல நகராட்சி, பேரூராட்சி நீங்கலாக கிராமப்புற பள்ளிகளுக்கு மட்டும் தூய்மைப்பணிக்கென ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக மாதம் 2,500 ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

    இந்த தொகையை பெற்று தூய்மைப் பணி மேற்கொள்ள எவரும் முனைப்பு காட்டுவதில்லை. பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    உடுமலை அமராவதிநகர் உண்டுஉறைவிடப்பள்ளி, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படுகிறது. மலைவாழ் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு உறைவிடம் மற்றும் உணவு வசதியுடன் அடிப்படை கல்வியும் வழங்க, இப்பள்ளிகள் செயல்படுத்தப்படுகிறது.இங்கு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், மறையூர் உள்ளிட்ட மலைவாழ் பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.பள்ளியின் கட்டமைப்புகளும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான தங்கும் அறைகள், வகுப்பறை கட்டடம், சுற்றுசுவரும் தற்போது கட்டப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்கள் எண்ணிக்கை 40க்கும் அதிகமாக இங்கு பராமரிக்கப்படுகிறது. புதிய கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளியை நடுநிலையாக தரம் உயர்த்துவதற்கு கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    நடுநிலைப்பள்ளியாக மாற்றுவதற்கான இடவசதியும் பள்ளி வளாகத்தில் இருப்பதால் பெற்றோரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். நடுநிலையாக தரம் உயர்த்தப்படுவதன் வாயிலாக கூடுதல் மாணவர் சேர்க்கை பதிவு நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

    மேலும் மாணவர்கள் துவக்கநிலை கல்வியை நிறைவு செய்தவுடன் நகர்புறப்பள்ளிகளில் வகுப்பு சேர்ந்தும், விடுதி தனியாகவும் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பெரும்பான்மையான மலைப்பகுதி பெற்றோர் தயக்கம் காட்டி மீண்டும் மலைப்பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்கின்றனர். நடுநிலையாக மேம்படுத்துவதால் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத கல்வி பெற முடியும் என கல்வியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.

    பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், பள்ளியை தரம் உயர்த்த ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கடந்த ஆண்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்படுவதால் மாணவர்கள் அதிகம் பயன்பெற முடியும் என்றனர்.

    உடுமலை ஒன்றியம் ஆண்டியகவுண்டனூரில் அரசு துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. இங்குள்ள குழந்தைகள், அடுத்தடுத்த உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு, மலையாண்டிபட்டணம் உயர்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படிக்கின்றனர்.கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், பள்ளி நேரத்தில் இயக்கப்படும் பஸ்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

    கொரோனாவுக்கு முன் வரை உடுமலையில் இருந்து கல்லாபுரம் செல்வதற்கு ஆண்டியகவுண்டனூர் வழிதடத்தில் 5-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பின் பஸ்கள் இயக்கப்படுவது குறைக்கப்பட்டதோடு, பள்ளி நேரத்தில் பஸ்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் காலை 8மணிக்கு கல்லாபுரத்தில் இருந்து உடுமலைக்கு இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்சில் பணிக்கு செல்வோர், கல்லூரி மாணவர்கள் என கூட்டம் நிரம்பி வழிகிறது.

    ஆண்டியகவுண்டனூரில் இருந்து செல்லும் மாணவர்கள் வேறு வழியில்லாமல் கூட்ட நெரிசலில் பயணிப்பதால் பள்ளிக்கு செல்லும் முன்பே சோர் வடைந்து விடுகின்றனர். கூட்ட நெரிசலால் பல குழந்தைகள் பஸ்சில் ஏறாமல் விடுப்பு எடுத்துக்கொள்வதும் நடக்கிறது. மாணவர்களை தனியார் வாகனங்களில் வாடகை செலுத்தி அனுப்பும் அளவுக்கு பொருளாதார நிலை இல்லை என பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.இப்பிரச்சினையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் போக்குவரத்து கழகம் சார்பில் பள்ளி நேரத்தில் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும்நாளை 12-ந் தேதி பள்ளி–கள் திறக்கப்படவுள்ளன. பள்ளி வாகன விபத்துகள் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. பள்ளி வாகன பராமரிப்பு, மேலாண்மை குறித்து, பள்ளி முதல்வர், மேற்பார்வையாளர், விளையாட்டு அலுவலர்களிடம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பள்ளிதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் கூறியதா–வது:- பள்ளி வாகனத்தின் முன்னும், பின்னும் உள்ள கேமராக்கள், ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள், தீயணைப்பான்கள், முதலுதவிப்பெட்டி, அவசரகால வழி, பள்ளி மாணவர்கள் ஏறி இறங்கும் படிக்கட்டுகள் ஆய்வுக்–குட்படுத்தப்பட்டன. ஆய்வின்போது பல பள்ளி வாகனங்களில் கேமரா பொருத்தப்படாமல் இருந்தது. அந்தப் பள்ளி வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாளை 12-ந் தேதிக்குள் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கட்டாயமாக கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் கேமரா குறித்து கடந்த ஒரு வருடமாக பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். அதில் பலரும் பள்ளி வாகனங்களில் பொருத்தப்படும் கேமரா கிடைக்கவில்லை என்று காலம் தாழ்த்தி வந்தனர். அதற்கான கால அவகாசம் முடிந்து–விட்டது. தற்போது மீண்டும் கேமரா பயன்படுத்தப்படாமல் வாகனங்களை இயக்கினால் பள்ளி வாகனம் வட்டார போக்குவரத்து சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொதுமக்கள் ஓடிப் பிடித்து பஸ்சில் செல்லும் நிலைமை நீடிக்கிறது.
    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் என அனைவரும் வந்து செல்லுவதற்க்கு அரசு பஸ்களை நம்பியுள்ளனர்.

    பகல் நேரங்களில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கினாலும் பெரும்பாலும் மக்கள் பயணம் செய்வதில்லை. இதனால் பஸ்கள்களில் குறைந்த அளவே மக்கள் பயணம் செய்கின்றனர். மாலை வேளைகளில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது கிராமங்களுக்கு செல்ல பஸ் வசதிகள் ஓரளவு இருந்து வருவதால் அந்தந்த பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமமில்லாமல் செல்ல முடிகிறது.

    குன்னூர் மற்றும் ஊட்டி பகுதிகளுக்கு செல்ல மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் பயணம் செய்ய வருகின்றனர். இதனால் அந்த நேரங்களில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பஸ்கள் செல்வதால் பொதுமக்கள் ஓடிப் பிடித்து பஸ்சில் செல்லும் நிலைமை நீடிக்கிறது.

    எனவே சம்மந்த ப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தினமும் ஆயிரக்கணக்கானோர் உடுமலையில் இருந்து திருப்பூருக்கு செல்கின்றனர்.
    • படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    உடுமலை :

    உடுமலையில் இருந்து திருப்பூருக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படுவதில்லை. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கிராமங்கள் ஆகியவற்றுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் உடுமலையில் இருந்து திருப்பூருக்கு செல்கின்றனர்.

    ஆனால் போதிய அளவு பஸ்கள் இல்லாததால், தற்போது இயக்கப்படும் பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், படிக்கட்டில் தொங்கிக்கொண்டும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாவட்ட தலைநகரான திருப்பூருக்கு உடுமலையில் இருந்து அதிக அளவில் பஸ்கள் இல்லை. எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள், உடுமலையிலிருந்து திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அருணாசலேசுவரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெறவுள்ளது.
    • கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 200 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    விழுப்புரம்:

    போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:- திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை மகா தீபத் திருவிழாவும், 7-ந் தேதி (புதன்கிழமை) பவுர்ணமி கிரிவலமும் நடைபெறவுள்ளது. இதனால், பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். அவர்களின் பஸ் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வருகிற 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கூடுதல் பஸ்கள் விழுப்புரம் மண்டலம் சார்பில் இயக்கப்பட உள்ளன.

    விழுப்புரம், திரு வண்ணாமலை வழித் தடத்தில் 317 பஸ்கள், திண்டிவனம், திருவண்ணாமலை வழித்தடத்தில் 82 பஸ்கள், புதுச்சேரி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 180 பஸ்கள், திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழித்தடத்தில் 115 பஸ்கள், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 200 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை ஏற்பாடு செய்திடவும், பஸ் இயக்கங்களை மேற்பார்வை செய்யவும் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்கள் போதுமானதாக இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
    • மாணவர்களின் நலன் கருதி காலை மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் இருந்து வள்ளியூர் வரை நாலுமூலைக்கிணறு, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், நங்கை மொழி, சாத்தான்குளம், இட்டமொழி மற்றும் இதற்கு இடைப்பட்ட பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரிக்கு சென்று வருகின்றனர். காலை நேரத்தில் திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்கள் போதுமானதாக இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கின்றனர்.

    எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் வரை அதே போல் சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூருக்கும் பிரத்தியேகமாக மாணவ- மாணவிகளுக்கென தனியாக மாணவர்களின் நலன் கருதி காலை மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறி வருகின்றனர். இதே போல் சாத்தான்குளத்தில் இருந்து வள்ளியூருக்கும், வள்ளியூரிலிருந்து சாத்தான்குளத்திற்கும் தனி பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேவர் குருபூஜை விழாவையொட்டி உள்ளூர், பிற மாவட்டங்களில் இருந்து 250 பஸ்கள் கூடுதலாக இயக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • முத்துராமலிங்கத் தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை முன்னிலையில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    பசும்பொன் தேவர் நினைவிடம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை போதிய எண்ணிக்கையிலான கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க 'நிர்வாக நடுவர்கள்' நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிர்வாக நடுவர்கள் சட்டம்-ஒழுங்கு ஏற்படும் சமயத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய காவல் துறை அலுவலர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களைத் தெரிவிக்க வேண்டும்.

    பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்படும் அரசு பஸ்களில் ஒவ்வொரு பஸ்சிலும் ஒரு போலீசாரை நியமிக்க வேண்டும்.

    தனி நபர்கள் அமைக்கும் அன்னதான பந்தலின் உறுதித்தன்மையை சரி பார்க்க வேண்டும். நினைவி டத்தின் மேற்குப்புறம் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியில் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக மரத்தாலான தடுப்புவேலி அமைக்க வேண்டும்.

    கோட்டை மேடு வளைவு முதல் நினைவிடத்தில் உள்ள வளைவு வரை தற்காலிக மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். குருபூஜை விழாவிற்கு வரும் மக்கள் காலணிகள் அகற்றுவதற்கு ஏதுவாக பந்தல் அமைக்க வேண்டும். நுழைவு பகுதிகளிலிந்து வெளிப்பகுதி வரை சாலை செப்பனிடும் பணி அனைத்தும் விரைவில் முடித்திருக்க வேண்டும்.

    பசும்பொன் கிராமத்தில் மட்டும் 27 சின்டெக்ஸ், 30 நகரும் கழிப்பறைகள், 30 குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். 90 துப்புரவுப் பணியாளர்கள் பணியில் அமர்த்த வேண்டும். 29 மற்றும் 30-ந் தேதிகளில் 200 மற்றும் 250 பஸ்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக இயக்க வேண்டும்.

    சுமார் 19 இடங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். 2 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மின் கம்பிகளில் பழுது ஏற்பட்டால், அவைகளை உடனே சரிசெய்ய போதுமான பணியாளர்களை அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் ஜெனரேட்டர், மற்றும் பாதுகாப்பு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுக்கழிப்பறைகள் அருகில் கண்டிப்பாக மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பசும்பொன் கிராமத்தில் அன்னதானம் வழங்கும் இடங்களில் வழங்கப்படும் அன்னதானத்தை பரிசோதித்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் அலுவலர்கள் நாளை (27-ந் தேதி)க்குள் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், ராமநாதபுரம் கோட்டாட்சியர் மரகதநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், அருண் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டரிடம் மாணவர்கள் வலியுறுத்தல்
    • மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது

    திருப்பத்தூர்:

    கல்லூரி நேரங்களில் கூடு தல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை யில் நடந்தது. அப்போது வீட் டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து 375 மனுக்களை பொதுமக்களிட மிருந்து பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்திய தகுதி யானதாக இருப்பின் உடனடி யாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அப்போது கலெக்டர் பேசு கையில், பொதுமக்களிடம்இருந்து பெறப்பப்பட்ட கோரிக்கை மனுக்களில் காவல்துறை சம்பந்தப்பட்ட மனுக்கள் அதிக அளவு நிலு வையில் உள்ளது. இதனை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு உயர் அலுவலர்கள் கட்டாயம் வர வேண்டும் என கூறினார். அதைத்தொடர்ந்து மாற்றுதிற னாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுதிறனாளிக ளுக்கு 13 வகையான மருத்துவ உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் கந்திலி அருகே உள்ள கரியம்பட்டியில் இயங் கும் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்த னர். அதில் கல்லூரி பஸ் நிறுத் தத்தில் பஸ்கள் சரிவர நிற்பது கிடையாது.காலை நேரத்தில் 2 டவுன் பஸ்கள் மட்டுமே உள்ளது. திருப்பத்தூரில் இருந்து ஏராளமானோர் கல் லூரிக்கு சென்று வருகின்றனர். இதனால் கல்லூரி மாண வர்கள் பஸ்சின் படிச் க்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்ய வேண்டி உள்ளது.

    இதனால் கல்லூரி மாண வர்களுக்கும், கண்டக்டருக் கும் இடையே அடிக்கடி பிரச் சினை ஏற்படுகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங் களில் கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது. அதே போல் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த திருநங்கைகள், தங்க ளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை என கூறி கலெக்டரிடம் முறை யிட்டனர். அவர் விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் இ.வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவி யாளர்கள் வில்சன்ராஜசே கர்,ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கிருஷ்ண மூர்த்தி, கலால் உதவி ஆணை யர் பானு, மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டையில் உயிரை பணயம் வைத்து மாணவர்கள் பஸ்சின் படியில் பயணம் செய்கின்றனர்.
    • கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ -மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் மதுரை, விருதுநகரில் நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக அருப்புக்கோட்டையில் இருந்து காலை நேரங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதும். இதில் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பஸ்சில் முண்டியடித்துக் கொண்டு ஏறுகின்றனர். இதில் மாணவர்கள் பஸ்சின் படியில் ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து செல்கிறார்கள்.

    இந்த காட்சிகளை காலை மற்றும் மாலை நேரங்களில் காண முடியும். சில நேரங்களில் சிலர் பஸ்சில் இருந்து தவறி விழுந்து காயமடைவது வழக்கமாக இருந்து வருகிறது.

    எனவே அருப்புக்கோட்டைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×