என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ADHD"
- ஏ.டி.எச்.டி. பாதிப்பு பெரும்பாலும் குழந்தை பருவத்தில் அறிகுறிகள் தோன்றினாலும், இளமைப்பருவம் மற்றும் முதுமையிலும் கூட தொடரலாம்.
- இந்தியாவில், ஆரம்பப்பள்ளி மாணவர்களிடையே ஏ.டி.எச்.டி. பாதிப்பு 11.32 சதவீதம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
கவன பற்றாக்குறை மற்றும் அதிக செயல்பாட்டு கோளாறை ஏ.டி.எச்.டி. பாதிப்பு என கூறுகிறார்கள். இது சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மன கவனத்தை ஒருங்கிணைப்பதிலும், மனக்கிளர்ச்சியான நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதிலும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
ஏ.டி.எச்.டி. பாதிப்பு ஏற்படும்போது அமைதியின்மை, திடீர் பதற்றம், நேரடியாக பேசும்போது கேட்க இயலாமை, மறதி, எளிதில் திசை திருப்புதல் அல்லது அதிவேகமாக இருப்பது ஆகிய அறிகுறிகள் காணப்படும்.
ஏ.டி.எச்.டி. பாதிப்பு பெரும்பாலும் குழந்தை பருவத்தில் அறிகுறிகள் தோன்றினாலும், இளமைப்பருவம் மற்றும் முதுமையிலும் கூட தொடரலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் 2.5 சதவீதம் பெரியவர்களும், 5 சதவீதம் குழந்தைகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
இந்த பாதிப்புக்கு சிகரெட் புகைத்தல், மது அருந்துதல் அல்லது கர்ப்ப காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வரலாம் என்று கருதப்பட்டது.
மேலும், உடலில் அதிக அளவில் ஈயம் கலப்பது, குறைந்த எடை, மூளையில் காயம் போன்ற பிரச்சனைகளாலும் ஏற்படும் என்று தெரிகிறது. ஆனால், இவை அனைத்தையும் விட ஏ.டி.எச்.டி. பாதிப்புக்கு பரம்பரை மரபணுக்கள்தான் காரணம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏ.டி.எச்.டி. பாதிப்பு உள்ளவர்களில் காணப்படும் மரபணுக்களின் மாறுபட்ட வடிவம், மற்ற மனநல பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படுவதை போலவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், ஆரம்பப்பள்ளி மாணவர்களிடையே ஏ.டி.எச்.டி. பாதிப்பு 11.32 சதவீதம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் காரணமாக உருவாகும் இந்த பாதிப்புக்கு தொடர் மருத்துவம் மூலம் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் நிரந்தரமாக குணமாக்கும் வகையில் ஆய்வுகள் தொடர்கின்றன.
- குழந்தை பருவத்தில் மிகவும் பொதுவான நரம்பியல் வளர்ச்சி நோய்களில் ஒன்றாகும்.
- மைதியாக இருந்தாலும் அதிகபட்சம் 20 நிமிடங்கள் தான். அதற்கு மேல் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
அட்டென்ஷன் டிஃபிளிக்ட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர் (ADHD - Attention Deficit Hyperactivity Disorder) என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சிக்கலான நரம்பியல் கோளாறாகும். சுருக்கமாக சொன்னால் இது கவனக்குறைவு சீர்குலைவு என்று கூறலாம். இந்தியாவில் பள்ளி வயது குழந்தைகளில் சுமார் 7% பேர் ADHD நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது குழந்தை பருவத்தில் மிகவும் பொதுவான நரம்பியல் வளர்ச்சி நோய்களில் ஒன்றாகும்.
ADHD-ஆல் பாதிக்கப்படும் நபர் வெளியுலக வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட உறவுகளின் செயல்திறனை கணிசமாக பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள நபர் தங்களின் உணர்ச்சிகளை நிர்வகிப்பதில் சிரமப்படுவார்கள். இவர்கள் மிகவும் கவன குறைவாகவும், அதே சமயம் அதிவேகமாகவும் இருப்பார்கள். இவர்களால் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார முடியாது.
ஒருவர் பேசும் போது அதை கவனிக்கும் திறன் எப்படி உள்ளது, பிறருடன் பழகும் திறன் உள்ளிட்டவற்றை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். உங்கள் செயல்பாட்டில் அமைதி தெரியவில்லை, நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒரு விஷயத்தை செய்கிறீர்கள், தேவையற்ற நடத்தைகளை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தால், அதிக கவனக்குறைவுடன் இருக்கிறீர்கள் எனில் அது ADHD-ஆக இருக்க கூடும்.
ADHD அறிகுறிகள் இருப்பின் கவனக்குறைவு அறிகுறிதான் முதலில் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது. பல படிகளை உள்ளடக்கிய டாஸ்க் ஒன்றை கொடுக்கும் போது, ADHD கொண்ட குழந்தைகள் அல்லது பெரியவர்கள் அந்த டாஸ்க்கை தொடங்க அல்லது முடிக்க மிகவும் சிரமப்படுவார்கள். இது பெரியவர்களுக்கும் பொருந்தும். ஏதாவது ஒரு செயலை செய்வது அல்லது அதன் வழிமுறைகளைப் பின்பற்றுவதில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுவதால் இது நிகழ்கிறது.
ADHD பாதிப்பு கொண்ட நபர் அதிக மறதி கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை பெரிதாக நினைக்க மாட்டார்கள். அடிக்கடி குழப்பத்துடன் காணப்படுவார்கள். மறதி மற்றும் குழப்பம் இரண்டின் காரணமாக கவனச்சிதறலுடன் கூடிய நடத்தையை கொண்டிருப்பார்கள். இதனால் இவர்கள் தங்களின் இலக்கை மறந்து எளிதில் திசை திரும்பிவிடுவார்கள். தங்கள் பொருட்களை சரியான இடத்தில் வைக்க மாட்டார்கள்.
ஏற்கனவே நாம் கூறியபடி ADHD பாதிக்கப்பட்டவர்கள் ஓரிடத்தில் சில நிமிடங்கள் கை, கால்களை வைத்து கொண்டு அமைதியாக உட்காருவது என்பது அரிது. குழந்தைகளாக இருப்பின் ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போதே அதில் கவனம் செலுத்தாமல் கிளாஸை ரவுண்ட் அடிப்பார்கள். ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தாலும் கை மற்றும் கால்களை அசைத்தபடி நெளிந்து கொண்டே இருப்பார்கள். அமைதியாக இருந்தாலும் அதிகபட்சம் 20 நிமிடங்கள் தான். அதற்கு மேல் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
அதே போல மற்றவர்களை பேச விடாமல் இடைமறித்து இவர்கள் பேசி கொண்டே இருப்பார்கள். மேற்காணும் அறிகுறிகள் 6 மாதத்திற்கும் மேல் நீடித்தால் நிச்சயமாக தகுந்த நிபுணர்களின் உதவியை நாடுவது அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்