என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Adi"
- ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது.
- அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.
அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.
இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா?
அந்த கடமையை செய்யும் மாதமாக ஆடி மாதம் மலர உள்ளது.
இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும்.
அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும்.
உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும்.
ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது.
அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.
அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும்.
அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள்.
அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும்.
மனதை அடக்க, அடக்க மாயை விலகி சக்தி பிறக்கும்.
அதற்கு ஆடி மாத வழிபாடு மிகச் சிறந்த அஸ்திவாரமாக இருக்கும்.
சக்தியை வழிபடுவோம்..... சகல நன்மைகளையும் பெறுவோம்....
- சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.
- எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.
அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. "முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே" என்கிறார் அபிராமிபட்டார்.
கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே.
சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.
எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.
வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.
குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.
வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.
லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப் படுத்தி அவள் வளர்த்துள்ளாள்.
- ஆடி மாதம் வந்து விட்டது. ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.
- அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் வித, விதமான வழிபாடுகள் நடத்தப்படும்.
ஆடி மாதம் வந்து விட்டது. ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.
அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் வித, விதமான வழிபாடுகள் நடத்தப்படும்.
எங்கு பார்த்தாலும் "ஓம் சக்தி... பராசக்தி" என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.
சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை 'தாய்மை வழிபாடு" என்றே கூறினார்கள்.
உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது.
சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு "ஹ்ரீம்" எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.
"ஹ்ரீம்" என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது.
"ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
- குறிப்பாக சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
- கலியுக வரதனாம் கந்த பெருமானுக்கு பல விரதங்கள் உண்டு. இருப்பினும், தட்சிணாயனம் தொடங்கும் ஆடிமாதத்தில் வரும்
கோவில்களில் ஆடிப்பூர உத்ஸவம் விசேஷமாக நடைபெறும்.
குறிப்பாக சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடிமாத வள்ர்பிறை துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரையில் துளசியை வழிபட்டால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம் பெருகி, வாழ்க்கை வளமாகும்.
ஆடியும் ஆறுமுகனும்
கலியுக வரதனாம் கந்த பெருமானுக்கு பல விரதங்கள் உண்டு. இருப்பினும், தட்சிணாயனம் தொடங்கும் ஆடிமாதத்தில் வரும்
கார்த்திகை விரதமும், உத்தராயணம் தொடங்கும் தை மாதத்தில் வரும் கார்த்திகையும் பெரும் சிறப்புடையன.
கந்தனுக்கு பாலூட்டி வளர்த்த ஆறு கார்த்திகை பெண்களிடம், சிவபெருமான் "கார்த்திகை விரதம் இருக்கும் அனைவரின் குறைகளை எல்லாம் போக்கி, நல் வாழ்வு அளித்து, இறுதியில் முக்தியும் கொடுப்பேன் என்று வரமளித்தார்."
எனவே தான் ஆடி மாதக் கார்த்திகையில் முருகப் பெருமானுக்கு விரதம் இருப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது.
- ஆடிமாத தேய்பிறையில் வரும் யோகிநீ ஏகாதசி அன்று விரதம் இருந்து, நோயிலிருந்து விடுபட்டான்.
- பிறகு குபேரனிடம் சென்று தன் பணியைத் தொடர்ந்தான். இதுவே யோகிநீ ஏகாதசி எனப்பட்டது.
ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களில் குறிப்பாக மாரியம்மன் கோவில்களில் வேப்பஞ்சேலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது, தீமிதிப்பது, கூழ் வார்த்தல் போன்ற விசேஷமான வழிபாடுகள் நடைபெறுகிறது.
ஆடிமாதத்தில் தேய்பிறை ஏகாதசி – யோகிநி ஏகாதசி.
வளர்பிறை ஏகாதசி – சயிநி ஏகாதசி. ஆடிஅமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) ச்ரார்த்தம் செய்வது மிகவும் நல்லது.
சூரியன் திசைமாறி சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாதம்.
ஆகையால் ஆடி அமாவாசை தர்பணத்திற்கு மிகவும் உயர்ந்தகாலம். இதனால், பித்ருக்கள் மகிழ்ந்து நமக்கு சகல செல்வத்தையும் வழங்குவார்கள்.
குபேரனின் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பணியாளனான ஹேமமாலி என்பவன் தனது அழகான மனைவி மீது கொண்ட மையலால், வழக்கமான தனது பணியை மறந்து போனதால், குபேரனால் சபிக்கப்பட்டு குஷ்டரோக நோய் வந்து அவதியுற்றான்.
அப்போது ஆடிமாத தேய்பிறையில் வரும் யோகிநீ ஏகாதசி அன்று விரதம் இருந்து, நோயிலிருந்து விடுபட்டான்.
பிறகு குபேரனிடம் சென்று தன் பணியைத் தொடர்ந்தான். இதுவே யோகிநீ ஏகாதசி எனப்பட்டது.
திரிவிக்ரமனாகத் தோன்றி மஹாபலியின் கர்வத்தை அடக்கிய மஹாவிஷ்ணு அவனைப் பாதாளத்துக்கு அனுப்பியவுடன் திருப்பாற்கடலுக்குச் சென்று பாம்பணையில், ஆடிமாத வளர்பிறை ஏகாதசியில்தான் சயனித்தார்.
எனவே, இது சயநீ ஏகாதசி எனப்பட்டது.
- ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள்.
- பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!” என்று வேண்டுகிறது.
ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம்.
இது தேவர்களுக்கு இரவாகும். தை முதல் ஆனி முடிய உத்தராயணம். இது தேவர்களுக்கு பகலாகும்.
ஆடிப் பதினெட்டு:
ஆடிமாதமே, தேவர்களின் மாலைக்காலம் (6 மணி முதல்– 8 மணி வரை) இந்த மாலை நேரத்தில் அனைத்து உயிருக்கும் அன்னையான அம்பிகையைத் துதித்து, அவள் அருளை வேண்டுகிறது மனித இனம்.
ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள்.
பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!" என்று வேண்டுகிறது.
மனிதகுலத்தின் அந்த வேண்டுதலின்படி, அன்னையின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடியது.
அதற்கு நன்றி செலுத்தும் வகையில் 'ஆடிப் பதினெட்டு ' என்று கொண்டாடுகிறார்கள்.
பதினெட்டு என்ற எண் 'ஜய' த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும்.
மஹாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள், நதிக்கரைகளில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
எனவேதான், காவிரி அன்னைக்கு 'ஆடிப் பதினெட்டு'அன்று நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகின்றனர்.
- இந்துக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு, ஆடி மாதம் வந்தாலே பண்டிகைகளின் அணிவகுப்பு ஆரம்பமாகிவிடும்.
- ஆடி மாதத்தை பல தெய்வங்களுடன் தொடர்பு படுத்தி நம் முன்னோர்கள் பல விரதங்களை மேற்கொண்டு வழி பட்டு வந்தனர்.
இந்துக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு, ஆடி மாதம் வந்தாலே பண்டிகைகளின் அணிவகுப்பு ஆரம்பமாகிவிடும்.
ஆடி மாதப் பிறப்பு முதல் ,தை மாதம் மகர சங்கராந்தி வரை,பலவித வழிபாடுகளிலும், கொண்டாட்டங்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.
ஆடி மாதத்தை பல தெய்வங்களுடன் தொடர்பு படுத்தி நம் முன்னோர்கள் பல விரதங்களை மேற்கொண்டு வழி பட்டு வந்தனர்.
அம்மன் வழிபாடு, ஆடிப்பூரம், ஆடிஅமாவாசை, ஆடிக்கிருத்திகை என
நாமும் அவர்களை போல் பெருமை வாய்ந்த ஆடி மாதத்தில் இறைவனைத் துதித்து மகிழ்வோமாக!
நன்றே சொல்வோம்!
நன்றே செய்வோம்!
- ஆடி மாத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு தான்.
- அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.
திருப்பூர்:
ஆடி மாத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு தான். ஒவ்வொரு வெள்ளியன்றும் வித்தியாசமாக கொண்டாடுகின்றனர்.முதல் வெள்ளியான இன்று, வீடுகளில் திருக்கலசம் எழுந்தருளச்செய்து, அதில் அம்மன் முகத்தை போன்ற உருவ அமைப்பை ரவிக்கை துணியில் ஏற்படுத்தி, அதற்கு அணிகலன்கள் மலர் மாலைகள் சூட்டி அலங்கரித்து வழிபட்டனர்.
வீட்டு முற்றத்திலும், பூஜை அறையிலும் மாக்கோலமிட்டு, மாவிலை, தென்னை தோரணங்கள் சூட்டினர். சர்க்கரை பொங்கல், எலுமிச்சை, தேங்காய், புளி, தயிர் சாதங்களை தயாரித்து, அம்பாளுக்கு படைத்தனர்.
அம்பாளை துதித்து போற்றி, மாலைகளை பாராயணம் செய்தனர். தொடர்ந்து, முப்பெரும் தேவியரை துதித்து, வீடுகளுக்கு சுமங்கலிப்பெண்களை அழைத்து விருந்து பரிமாறி, வளையல், ரவிக்கை, மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்ட மங்கல பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர். இப்படி ஆடிப்பண்டிகையை சுமங்கலிப்பெண்கள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடினர்.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஏ.பி.டி., ரோடு பட்டத்தரசிம்மன் கோவி்ல், தில்லை நகர் ராஜ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம் போலீஸ்லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ெபருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில், அவிநாசியை அடுத்துள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் உள்பட உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.
அம்மன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர். கோவில்களில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர்சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.மேலும் கூழ் வார்த்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இன்று முதல் ஆடி வெள்ளி என்பதால் குறைந்திருந்த பூக்கள் விலை மெல்ல உயர துவங்கியுள்ளது.
திருப்பூர் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ, 300 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று கிலோவுக்கு, 150 ரூபாய் உயர்ந்து 450 ரூபாய்க்கு விற்றது. முல்லை கிலோ 250 ரூபாயில் இருந்து 320 ரூபாய்க்கு விற்பனையானது. ஆடி வெள்ளி என்றாலே அம்மன் கோவில்கள் தான் பிரசித்தம். கோவிலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் அரளி பூ விலையும் உயர்ந்துள்ளது.
ஒரு வாரமாக கிலோ 80 முதல் 120 ரூபாய் இருந்த ஒரு கிலோ அரளி நேற்று 200 முதல் 240 ரூபாய்க்கு விற்றது. துளசி ஒரு கட்டு 20 ரூபாய், செவ்வந்தி 300 ரூபாயாக விலை உயர்ந்தது. ஒரு சில வியாபாரிகளிடம் மட்டும் அரளி பூ இருந்ததால், அதனை வாங்க சில்லறை வியாபாரிகள் பலர் போட்டி போட்டனர். வரத்து குறைவால், மக்களுக்கு அரளி கிடைக்கவில்லை; வியாபாரிகள் மொத்தமாக விற்பனைக்கு அள்ளிச்சென்றனர்.
பூ வியாபாரிகள் கூறுகையில், காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், பூக்கள் உதிர்ந்து வருகிறது. வரத்து குறைந்து வரும் இவ்வேளையில் ஆடி வெள்ளி விற்பனை சற்று அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளது.
இருப்பினும் ஓரிரு நாளில் விலை குறைந்து விடும். ஆவணி முகூர்த்தம் வரை மல்லிகை பூ விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என்றனர்.
- உடல் நிலை பாதிப்புகளில் இருந்து விரைவில் நலம் பெரும் அமைப்பு
- புதிய சொத்து, வண்டி வாகனம் வாங்கும் யோகம்
இந்த ஆடி, புரட்டாசி, தை அமாவாசை திருநாளில் , தமது இரண்டாவது தாயான குல தெய்வத்தை ஒருவர் முறையாக அன்ன தானம் செய்து வழிபடும் பொழுது ஜாதகருக்கு, அறிவில் தெளிவு, நல்லவர் சேர்க்கை, செய்யும் தொழில் முன்னேற்றம், வருவாய் உயர்வு, பதவி உயர்வு, மக்கள் செல்வாக்கு , பூர்விகத்தில் ஜீவிக்கும் தன்மை அதனால் ஜாதகர் அடையும் நன்மை, தமது குளம் விளங்க நல்ல வாரிசு, பெரிய மனிதர்களின் நட்பு, ஜாதக ரீதியான பாதிப்புகளில் இருந்து நன்மை பெறும் யோகம், வண்டி வாகனங்களில் இருந்து எவ்வித பாதிப்பும் விபத்தும் ஏற்படாத அமைப்பு , தனது சொந்த பந்தங்களுடன் நல்ல முறையில் உறவை வளர்த்துகொண்டு நன்மை பெரும் தன்மை .
கணவன் -மனைவி அன்பு ஒற்றுமை , பிரிந்த கணவன் -மனைவி சேர்ந்து தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம் பெரும் யோகம், உடல் நிலை பாதிப்புகளில் இருந்து விரைவில் நலம் பெரும் அமைப்பு, செய்யும் தொழில் அபரிவிதமான முன்னேற்றம், புதிய சொத்து, வண்டி வாகனம் வாங்கும் யோகம், வருடம் முழுவதும் எவ்வித சிக்கல்களும் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை, குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் யோக அமைப்பு, மன கவலைகளில் இருந்து ஜாதகரை மீட்டு எடுத்து நலம் பெற செய்யும் யோகம் , மண் மனை வண்டி வாகன யோகம், புதிதாக தொழில் துவங்கும் யோகம், புதிய வீடு கட்டும் யோகம் என அனைத்து நன்மைகளையும் ஒருவருக்கு இந்த ஆடி, புரட்டாசி, தை அமாவாசை குலதெய்வ வழிபாடு செய்வதால் கிடைக்க பெறுவார் .
இதற்கு ஜாதகர் தனது குல தெய்வம் எதுவோ அங்கு சென்று , அவர்களது முறைப்படி வழிபாடு செய்து, அங்கு உள்ள முன் பின் அறியாத நபர்களுக்கு ஒரு 20 பேருக்காவது அன்னதானம் செய்து வழிபடுவது மிக பெரிய நன்மைகளை நிச்சயம் தரும் . குலதெய்வத்தை அறியாதவர்கள் தனது இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்து நலம் பெறலாம் .
பித்ரு தர்ப்பணம்
ஒருவருடைய ஜாதக அமைப்பில் பித்ரு தோஷங்களால் , வறுமை , நோய் , கடன் , விபத்து , ஏமாற்றம் , திருமண தாமதம், கணவன் மனைவி பிரிவு , விவாகரத்து ,குழந்தை இன்மை , விஷ ஜந்துக்களால் பாதிப்பு , மன நிம்மதி இழப்பு , விரக்தி, வேலை இன்மை , தொழில் முன்னேற்றம் இன்மை , மற்றவர்களால் ஏமாற்ற படுதல் , திடீர் இழப்பு ,எதிரிகள் தொந்தரவு , யோகம் அற்ற நிலை , யோக பங்கம் ஏற்படுதல் , அவ பெயர் , தீய பெண்களின் சகவாசம் இதனால் பொருள் இழப்பு , கெட்ட நண்பர்களால் துன்பம் , மற்றவருக்காக தான் பாதிக்க படுதல் என ஜாதகரை படுத்தி எடுத்து விடும் இந்த பித்ரு தோஷம்.
இதுமாதிரியான பாதிப்புகளால் அதிகம் துன்புறுவோர் அனைவரும், முறை படி நதிக்கரை , மீன் உள்ள நீர் நிலைகளுக்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசை திருநாளில் சென்று தமது சக்திக்கு ஏற்றார் போல் தாமாகவோ , அல்லது வேதம் அறிந்த பிராமணர் வழிகாட்டுதலின் பேரிலோ சுவேதா தேவியின் மூலம் தர்ப்பணம் செய்வோருக்கு மேற்கண்ட பாதிப்புகளில் இருந்து 100 சதவிகிதம் நன்மை நடைபெற ஆரம்பிக்கும் சில நாட்களிலேயே இது கண்கூடாக கண்ட உண்மை .
மேலும் இந்த ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வோருக்கு கடந்த 54 வருடமாக பித்ரு கடமையை செய்யாதவருக்கு பித்ருக்கள் ஏற்றுக்கொண்டு நன்மைகளையும் , யோகங்களையும் வழங்குவார்கள்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பழைய பை-பாஸ் கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மனுக்கு ஆடி தவசு விழா நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பழைய பை-பாஸ் கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மனுக்கு ஆடி தவசு விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் போன்ற 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் செல்லாண்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஆடித்தவசுக்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்