என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Adi Dravidian"
- பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும்.
- 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-க்குள், ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்திட உறுதி பூண்டுள்ளார். அதற்காக, பல்வேறு திட்டங்களைப் புதிதுபுதிதாக உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
"அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" எனும் புதிய திட்டத்தை 2023-2024-ம் ஆண்டு அறிவித்து, ரூ.100 கோடி அனுமதித்தார்.
இந்த திட்டம் பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும். இதில் தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை அரசு மானியமாகவும், 65 சதவீத, மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.
அவற்றின் பயனாகப் தொழில்கள் தொடங்குவதற்காக மொத்தம் 12,472 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 7,365 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுப் பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைகள் செய்யப்பட்டது.
மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன், முனைவு
பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக மட்டும் 159.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் ௨௮௮ மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மானிய உதவியுடன் வங்கிக் கடன்கள் பெற்று ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்கள் பலர், பல்வேறு தொழில்களைத் தொடங்கித் தொழில் அதிபர்களாக உயர்ந்துள்ளனர்.
இதுபற்றி சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் பயன்பெற்ற எஸ்.அஞ்சலி கூறுகையில், "அண்ணல் அம்பேத்கர் தொழில்
முன்னோடிகள் திட்டம் பற்றி அறிந்து சிவகங்கை மாவட்டத் தொழில் மையம், அலுவலகம் சென்று எனது நார் இழை பைகள் நெய்யும் தொழில் தொடங்குவது குறித்துத் தெரிவித்தேன்.
அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தில் விண்ணப்பித்து ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் வங்கி கடன் பெற்று, அதற்கு 35 சதவீத மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் பெற்றுத் தொழில் தொடங்கினேன். தற்போது 10 பணியாளர்கள் எனது நார் இழை பைகள் நெய்யும் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
இதன்மூலம் மாதம் 4 லட்சம் ரூபாய் வருவாயும், ரூ.70 ஆயிரம் லாபமும் பெறுகிறேன். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்திய முதல்-அமைச்சருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
- மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
- சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த வாரிசுதாரர் பணிகள் உடனடியாக நிரப்பப்பட்டன.
புதுச்சேரி:
புதுவை மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் சமூக நலத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையில் மட்டும் கடந்த 30 ஆண்டு காலமாக பணியில் மரணம் அடைந்த ஊழியர்களின் வாரிசுதா ரர்களுக்கு வழங்க வேண்டிய அரசு பணி வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது.
ஆட்களை நிரப்பும்போது ஒவ்வொரு முறையும் 5 சதவீத வாரிசுதாரர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த வாரிசுதாரர் பணிகள் உடனடியாக நிரப்பப்பட்டன. ஆதிதிராவிட நலத்துறையில் மட்டும் நிரப்பவில்லை.
எனவே ஆதி திராவிட நலத்துறையில் வாரிசுதாரர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். டெபுடேஷன் மூலம் பணி செய்யக்கூடியவர்களை அந்தந்த துறைக்கு அனுப்பி விட்டு ஆதிதிராவிடர் நலத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மதுரையில் ஆதி திராவிடர் நலக்குழு கூட்டம் நடந்தது.
- நிர்வாகிகள் சங்கர் சபாபதி, அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும், விடுதியில் உள்ள மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா தகுதியான பயனாளிகளுக்கு வழங்குதல் மற்றும் அரசு அலுவலர்கள் மீது பொய்யான தகவல்களை பரப்பும் விதமாக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கோட்டூர்சாமி, தாட்கோ மேலாளர் ராஜேஸ்வரி, வட்டாட்சியர் தனலெட்சுமி, துணை வட்டாட்சியர் வீரக்குமார், கண்காணிப்பாளர் சேவியர் பால்ச்சாமி,நிர்வாகிகள் சங்கர் சபாபதி, அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேர்வு செய்ய உருவாக்க விடுதி மேலாண்மை அமைப்பு என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக் குழுவினரால்15.7.2023 அன்றைய தேதிக்குள் பரிசீலனை செய்யப்படும்.
திருப்பூர் :
2023 -– 2024ம் கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய உருவாக்க விடுதிமேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கை நடத்திட வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள்,வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறையிலுள்ள மாணவர் சேர்க்கைவிதிமுறைகளை பின்பற்றி புதிய மாணவர் சேர்க்கை நடத்திட ஏதுவாக திருப்பூர்மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளி-கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும்மாணவ- மாணவிகள் 30.6.2023 வரையிலும் https://tnadw.hms.in என்கிறஇணையதளத்தில் நேரடியாகவோ சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் வாயிலாகவோ விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைய வழியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவினரால்15.7.2023 அன்றைய தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு மாவட்டஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படுவர் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்