என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Adinam"
- கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மயில் வடிவிலான மலையில் அமைந்தபடி முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. முக்கிய விழாவான சூரசம்கார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து மாலை 7 மணி அளவில் ஸ்ரீ பால சித்தர் சன்னதியில் ஆறுமுக கடவுள் வேல் வாங்கி சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட கலெக்டர் பழனி, மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, மயிலம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மத்திய ஒன்றிய செயலாளர், செழியன், மாவட்ட பொருளாளர் ரவி, விவசாய அணி துணை தலைவர் நெடி சுப்பரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மபுர ஆதினம் 20 ஆம் சிவஞான பாலசுவாமிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- சங்கீத கலாநிதி பக்தவத்சலத்திற்கு பாராட்டு விழா நடந்தது.
- விருதினை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணியசாமி வழங்கினார்.
மதுரை
மதுரை எஸ்.எஸ்.காலனி எம்.ஆர்.பி.திருமண மண்டபத்தில் அனுஷத்தின் அனுக்கிரகம் மற்றும் மதுரை குமர கான சபா டிரஸ்ட் இணைந்து கர்நா டக இசை நிகழ்ச்சி மற்றும் சங்கீத வித்வான்களுக்கு பாராட்டு விழா நடத்தியது.
ராமநாதபுரம் கலை மாமணி சி.எஸ்.சங்கரசிவம், சங்கீத வித்வான்கள் சீனிவாசா ஐயர், மிருதங்க வித்வான் பத்மஸ்ரீ.சி.எஸ். முருக பூபதி ஆகியோர் நினைவாக சங்கீத கலாநிதி விருது பெற்ற கலை மாமணி திருவாரூர் பக்தவத் சலத்திற்கு பாராட்டு விழா தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து திருவாரூர் எஸ்.கிரீஸ் அவர்களுக்கு குமரகான இசை மணி விருது வழங்கப்பட்டது.
திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கம், எஸ்.கிரீஷ் பாட்டு, புதுக்கோட்டை அம்பிகா பிரசாத் வயலின், ஆலத்தூர் ராஜ் கணேஷ் கஞ்சிரா உள்ளிட்ட இசை கலைஞர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. விருதினை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணியசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் சத்குரு சங்கீத வித்யாலயம் இசை கல்லூரி முதல்வர் தியாக ராஜன் முன்னாள் முதல்வர் லதா வர்மா, பேங்க் ஆப் பேங்க் ஆப் பரோடா மேலாளர்கள் பிரபாகரன் ராமமூர்த்தி, உட்பட பலர் பங்கேற்றனர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு மற்றும் மதுரை குமர கான சபா ட்ரஸ்ட் முனைவர் லஷ்மண்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்