என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adjusted"

    நன்னிலம் அருகே குச்சிப்பாளையத்தில் தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சியில் எல்லைக்குட்பட்ட, குச்சிபாளையம் தெருவில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையின் மையத்தில் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மின் கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

    இரவு நேரங்களில் வாகனத்தில் வருபவர்கள், இருசக்கர வாகனம் ஓட்டுபவ ர்களுக்கு, இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தக் கூடிய வகையிலும் அமைந்து ள்ளது. இந்தச் சாலை பேரூராட்சியின் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமையப் பெற்று உள்ளதால், இப்பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்லும் நிலை உள்ளது.

    பள்ளி, கல்லூரி மாண வர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள், சாலைக்கு வந்து செல்வது வழக்கம், நெருக்கடி நேரத்தில், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் தடுமாறி இந்த மின் கம்பத்தில் மோத அதிக வாய்ப்பு உள்ளது. சாலை மேம்பாட்டு பணி, நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றியமை க்கப்பட வேண்டும் என குச்சிபாளையம் தெரு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்களின் கோரி க்கையை மின்சார வாரியத் துறை நிறைவேற்றுவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    ×