என் மலர்
நீங்கள் தேடியது "Administrators can apply for responsibility"
- பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை
- வருகிற 30-ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வருகிற 30 -ந் தேதிக்குள் விண்ணப்பி க்கலாம் என பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பத்தை சாரோனில் உள்ள திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவல கத்திலும், வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்தவாசியில் உள்ள தி.மு.க. அலுவலகத்திலும் வழங்கலாம்.
நகர, ஒன்றிய, பேரூர் அமைப்புகளுக்கு ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர். பேரூர் அமைப்புகளுக்கு ஒரு அமைப்பாளர் 3 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.
தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீண்டும் அந்த பொறுப்புகளுக்கு வர விரும்பினாலும் விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் சேர்க்க வேண்டும் என பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.