என் மலர்
முகப்பு » admk on behalf of annas birthday
நீங்கள் தேடியது "A.D.M.K. On behalf of Anna's birthday"
- அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊட்டியில் நடந்தது.
- கூட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் கே.ஆர். அர்ச்சுணன், செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி, கூடலூர் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம் பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் லயோலா குமார், அன்புச்செல்வன், சகுந்தலா, ஜெயலட்சுமி, தனலட்சுமி, உதகை எம்ஜிஆர் மன்ற தலைவர் ஜெயராம்,நொண்டிமேடு கிளை செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
×
X