search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AFGvBAN"

    • நடப்பு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் குர்பாஸ் முதலிடத்தில் உள்ளார்.
    • அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பசுல்லா பரூக்கி முதலிடத்தில் நீடிக்கிறார்.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னிலையில் உள்ளனர்.

    ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் 7 போட்டிகளில் 281 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இந்த அணியின் பரூக்கு 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார்.

    மேலும் முன்னணி அணியான நியூசிலாந்தை லீக் சுற்றிலும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி அசத்தியுள்ளது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் வீடியோ காலில் வாழ்த்து சொல்லியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் இந்த வெற்றி வங்காளதேச மக்களின் இதயத்தை மட்டுமின்றி, ஆஸ்திரேலியா ரசிகர்களின் இதயத்தையும் சுக்குநூறாக நொறுக்கிவிட்டது என்றால் மிகையல்ல.

    டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக முன்னேறியதை அந்த நாட்டு மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

    அத்துடன் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது. அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ரஷித் கான் நிகழ்த்தி உள்ளார்.

    ரஷித் கான் இதுவரை 9 முறை 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    இந்தப் பட்டியலில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 8 முறையும், உகாண்டா வீரர் ஹென்றி சென்யாண்டோ 7 முறையும் வீழ்த்தியுள்ளனர்.

    • டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
    • பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

    அபூட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

    வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரஷித் கான், "அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை

    பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, 'நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்' என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ காலில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் வாழ்த்து சொல்லியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.

    அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். நாளை நடைபெறும் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.

    பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, 'நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்' என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்.

    மழையை நம்பாமல் 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் எங்கள் அணியில் சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பவுலிங்கில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் திறமை இருந்தால் சாதிக்க முடியும். மனதளவில் நாங்கள் தயாராகவே இருந்தோம்.

    இந்த வெற்றி எங்கள் நாட்டில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை உண்டாக்கும். தற்போது அரையிறுதியில் தெளிவான மனதுடன் விளையாடுவோம் என தெரிவித்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அணி த்ரில் வெற்றி பெற்றது. #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN
    அபுதாபி:

    அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாசும், நஜ்மல் உசைன் ஷண்டோவும் களமிறங்கினர்.

    லித்தன் தாஸ் 41 ரன்களுடனும், முஷ்பிகுர் ரகுமான் 33 ரன்களுடனும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து ஜோடி சேர்ந்த இம்ருல் கெய்சும், மகமதுல்லாவும் இணைந்து பொறுப்புடன் விளையாடினர். இதனால் வங்காளதேசம் அணி 200 ரன்களை கடந்தது.

    இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்தது. மகமதுல்லா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இம்ருல் கெய்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்களை எடுத்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் அல்தாப் ஆலம் 3 விக்கெட்டும், முஜிபுர் நயீப், குல்புதின் நயீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 250 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியில் முகமது மற்றும் இன்சானுல்லா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரகளாக களமிறங்கினர். இன்சானுல்லா 8 ரன்கள் மற்றும் ரக்மத் ஷா ஒரு ரன் என அடுத்தடுத்து தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

    பின்னர் 3-வது விக்கெட்டுக்கு முகமதுவுடன் ஜோடி சேர்ந்த ஹஸ்மதுல்லா ஷகிதி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், ஆப்கானிஸ்தான் அணியின் எண்ணிக்கை சீரான அளவில் உயர்ந்தது. சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த முகமது 53 ரன்களில் மகமதுல்லா பந்தில் போல்டு ஆகி வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய அஸ்கர் ஆப்கன் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், ஷகிதி 71 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் முகமது நபி மற்றும் சென்வாரி ஆகியோரின் பொருப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் அணியின் எண்ணிக்கை 238 ஆக இருந்த நிலையில் 38 ரன்கள் எடுத்திருந்த முகமது நபி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.



    கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முஸ்தாபிசுர் ரகுமான் பந்து வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த ரஷித் கான் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில் பைஸ் முறையில் சென்வாரி ஒரு ரன் எடுத்தார், நான்காவது பந்தில் ரன் அடிக்காமல் குல்புதின் நயீப் வீணடித்தார்.

    பின்னர் 5-வது  பந்தை மீண்டும் அடிக்காமல் விட்ட நயீப், பைஸ் முறையில் ஓரு ரன் ஓடினார். கடைசி பந்தில் வெற்றி பெற பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் விளையாடிய சென்வாரி, முஸ்தாபிசுர் ரகுமான் வீசிய நேர்த்தியாக அந்த பந்தை வீணடித்தார். இதனால் வங்காளதேசம் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் அணி தரப்பில் மோர்டாசா மற்றும் முஸ்தாபிசுர் ரகுமான் தலா 2 விக்கெட்டுகள் கைப்பறினர். மகமதுல்லா மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இரண்டு விக்கெட் மற்றும் கடைசி ஓவரை சிறப்பாக வீசி வங்காளதேச அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய முஸ்தாபிசுர் ரகுமான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN
    அபுதாபி:

    அபிதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் துல்லியமாக பந்து வீசி ஆப்கானிஸ்தான் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த குல்பதின் நயீபும், ரஷித் கானும் பொறுப்புடன் ஆடினர். இதனால்  ஆப்கானிஸ்தான் அணி 250 ரன்களை கடந்தது.

    பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 255 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரஷித் கான் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன்களை குவித்தார். வங்காளதேசம் சார்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து, 256 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிடோன் தாஸ் மற்றும் நிஸ்மல் ஹோசய்ன் ஆகியோர் களமிறங்கினர்.

    ஆனால், ஆப்கானிஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சினால் லிடோன் தாஸ் 6 ரன்கள், ஹோசய்ன்  7 ரன்கள், மொமினுல் ஹகு 9 ரன்கள், முகமது மிதுன் 2 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தது அதிர்ச்சியளித்தனர்.

    ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷகிப் அல் ஹசனும் 32 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் சுழலில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால், வங்காளதேச அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து திணறியது. இதன் பின்னர் வந்த வீரர்களும் ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக ஆவுட்டாகி வெளியேறினர்.



    இறுதியில், 42.1 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஷித் கான், முஜீப் அர் ரகுமான், குல்பதின் நயீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

    அதிரடியாக விளையாடி 57 ரன்கள் குவித்து, 2 விக்கெட்டையும் சாய்த்து ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN
    ×