என் மலர்
நீங்கள் தேடியது "African swine fever"
- சுகாதாரத் துறையினர் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரே நாளில் 310 பன்றிகளை கொன்று புதைத்தனர்.
திருச்சூர்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கட்டிலப்பூவம், மடக்கத்தாரா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் பன்றிகள் திடீரென அடுத்தடுத்து இறந்தன. இதனால் பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்த சுகாதாரத் துறையினர் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதித்து பன்றிகள் இறந்தது உறுதியானது.
இதைத்தொடர்ந்து நோய் பரவலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ஒரே நாளில் 310 பன்றிகளை கொன்று புதைத்தனர். அங்கு கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதி தொற்று மண்டலமாகவும், 10 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நோய் பாதித்த பகுதிகளில் இருந்து பன்றி இறைச்சி விற்பனை, பன்றி இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- திருச்சூர் பகுதியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கபன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.
- பன்றிகளை பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. இந்நிலையில் தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால் நோய் பரவல் மேலும் அதிகரித்திருக்கிறது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
அது மட்டுமின்றி பறவை காய்ச்சலும் கேரளாவில் பரவியது. இதன்காரணமாக ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான வாத்துக்கள், கோழிகள் மற்றும் பறவைகள் கொல்லப்பட்டன. இந்நிலையில் திருச்சூர் பகுதியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கபன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.
மடக்கத்தனம் பகுதியில் தான் அதிக பாதிப்பு இருக்கிறது. இதனால் அங்கு மாநில கால்நடைத்துறை முகாமிட்டு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்று பாதிப்பு உள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வளர்க்கப்பட்டு வரும் பன்றிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக உருவாக்கப்பட்ட மீட்பு குழுவினர் பன்றிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். பன்றிகளை பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது. மடக்கத்தனம் பகுதியில் இதுவரை 310 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு வேறு எங்கும் இருக்கிறதா? என்று கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆப்பிரிக்க பன்றிக்க்காய்ச்சல் என்னும் கொடிய வகை தொற்றுநோய் சீனாவில் சமீபத்தில் பரவியது. கடந்த மாதத்தில் இங்குள்ள 5 மாகாணங்களில் 5 பேர் இந்நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், நோய் பாதித்துள்ள மாகாணங்களில் இருந்து இறைச்சிக்காக பன்றிகளை பிறபகுதிகளுக்கு கொண்டு செல்ல சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. பன்றி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பன்றிகள் மூலமாக வேகமாக பரவும் இந்த நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் இங்குள்ள லியாவ்னிங், ஹேனான், ஜியான்சு. ழேஜியாங் மற்றும் அன்ஹுய் மாகாணங்களில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் நேற்று ஒரேநாளில் கொன்று புதைக்கப்பட்டன. #Africanswinefever #38KhogsculledinChina