search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after"

    • பவானி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள கூலிக்காரன் பாளையம் அடுத்த ஏமம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். கூலி தொழிலாளி இவரது மனைவி நாகேஸ்வரி (33). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் நாகேஸ்வரிக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வேதனை அடைந்து வந்தார். இந்த நிலையில் நாகேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாதபோது களைக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது வாலிபர்வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 27). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் இரும்புகளை வாங்கி இரும்பு உருக்கு ஆலைக்கு அனுப்பும் வேலை செய்து வந்தார். இவர் கள்ளியம்புதூர் பகுதியில் தனியாக தங்கி விஜயமங்கலத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பல்லகவுண்ட ம்பாளையம் சென்று விட்டு இரவு கள்ளியம்புதூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளியம்புதூர் அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது அவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினர். இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மன உளைச்சல் ஏற்பட்டு சண்முகசுந்தரம் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டார்.
    • இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்த மணிமலை கரடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (42) . இவர் தண்ணீர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு சண்முகசுந்தரம் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டார்.இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×