search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after being"

    • வெள்ளாட்டை சிறுத்தை கடித்து கொன்று விட்டது.
    • வனத்துறையினர் கால் தடயங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் மஜாரா குரும்பனூர் காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் வீட்டின் அருகே 2 வெள்ளாடுகளை கட்டு வைத்திருந்தார்.

    இந்த நிலையில் அதிகாலை சுமார் 4 மணி அளவில் வீட்டின் அருகில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாட்டை சிறுத்தை கடித்து கொன்றுவிட்டது.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வெள்ளாட்டை சிறுத்தை கடித்ததா? இல்லை வேறு ஏதேனும் மர்ம விலங்கு கடித்ததா? என கால் தடயங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    • தண்ணீர் பந்தல் மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்களின் பின்னால் வந்த ஒரு கார் மோதியதில் சகுந்தலா மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் கீழே தூக்கி வீசப்பட்டனர்.
    • இது குறித்து அந்தியூர் போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50) விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (50).இவர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் நடை பயிற்சிக்காக வெள்ளையம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தண்ணீர் பந்தல் மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்களின் பின்னால் வந்த ஒரு கார் மோதியதில் சகுந்தலா மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் கீழே தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் சகுந்தலாவிற்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. சீனிவாசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • தனது வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டின் இடது புறம் இருந்து வலது புறமாக ரோட்டை கடக்க முயன்றார்.
    • அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரஞ்சிப்பேட்டை இந்திரா வீதியைச் சேர்ந்தவர் மயிலியம்மாள்(87) இவர் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் நெரிஞ்சிப் பேட்டையில் மேட்டூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    தனது வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டின் இடது புறம் இருந்து வலது புறமாக ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அம்மா–பேட்டை பகுதியில் இருந்து நெருஞ்சிப் பேட்டையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக மைலியம்மாள் மீது மோதியதில் பின்னந் தலையில் பலத்த அடிபட்டது உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவ–மனையில் சேர்த்தனர்.

    சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணி அளவில் உயிரிழந்தார் இதுகுறித்து மயிலியம்மாளின் மகன் ஆடலரசன் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வெண்டிபாளையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    காவிரியில் இருந்து ஈரோடு வரும் ரெயில் பாதையில் வெண்டிபாளையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை.

    கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது அவ்வழியே வந்த ரெயில் மோதி சம்பவ இடத்தில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×