search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agilandeshwari Temple"

    • ஈருடல் சிவனொடும் ஆனாய் போற்றி!
    • உலகுயிர் படைத்த ஒருத்தியே போற்றி!

    * ஓம் அகிலாண்ட நாயகி அடிமலர் போற்றி!

    * ஆளுவாய் ஆனைக்கா அம்மா போற்றி!

    * இன்பம் எவர்க்கும் ஈவாய் போற்றி!

    * ஈருடல் சிவனொடும் ஆனாய் போற்றி!

    * உலகுயிர் படைத்த ஒருத்தியே போற்றி!

    * ஊரையும் உலகையும் காப்பாய் போற்றி!

    * எழில்தரும் இயற்கையே எந்தாய் போற்றி!

    * ஏழு பிறப்பிலும் எந்தெய்வம் போற்றி!

    * ஐம்பூதம் உடலாய் ஆக்கினாய் போற்றி!

    * ஒப்புயர் வில்லா ஒளியே போற்றி!

    * ஓதுவார் உள்ளிருந்து இசைப்பாய் போற்றி!

    * ஔவைநீ அப்பன்நீ அகிலா போற்றி!

    * கற்பனை கடந்த கருத்தே போற்றி!

    * காவிய ஓவியக் கருவே போற்றி!

    * கிழக்கில் கிளர்ந்தெழும் கதிர்நீ போற்றி!

    * குன்றமாய் மழையாய் நிற்பாய் போற்றி!

    * கூடிடும் ஆறுகள் குளிர்கடல் போற்றி!

    * கெடுப்பது இல்லாக் கேண்மைநீ போற்றி!

    * ஓம் கேளிராய் வந்துடன் கேட்பாய் போற்றி!

    * கொடுப்பதே தொழிலாய்க் குறையிலாய் போற்றி!

    * கோயிலும் அன்பாக்குக் காட்சிநீ போற்றி!

    * சக்கர ஞாலம் சுழற்றுவாய் போற்றி!

    * சாத்திரம் வரையும் சாறுநீ போற்றி!

    * சிந்திப்பவரின் சீரடி போற்றி!

    * சீரும் சிறப்பும் செழித்தருள் போற்றி!

    * சுருங்கும் அன்பைத் தாண்டுவாய் போற்றி!

    * சூடும் குளிரும் நீயே போற்றி!

    * செய்தி தருவதும் நின் செயல் போற்றி!

    * சேர்ப்பதும் விடுப்பதும் நின்னருள் போற்றி!

    * சொரிமலர் யானைகை வாங்கினாய் போற்றி!

    * சோவென நீர்விடக் குளித்தாய் போற்றி!

    * தண்ணெனச் சிலந்தி இடுபந்தல் போற்றி!

    * தாவிடும் நாவல் மரக்கிளை போற்றி!

    * திருமுனி வழிபட்ட சிவமங்கை போற்றி!

    * தீந்தமிழ்த் தேவாரத் தேன்சுனை போற்றி!

    * துயரறு சேவடித் துணையே போற்றி!

    * தூயவர் நெஞ்சகம் துலங்குவாய் போற்றி!

    * தென்றலை அணியாய்ச் சூடுவாய் போற்றி!

    * தேன்மலர் தேடிடும் நறுமணம் போற்றி!

    * தையலை உயர்த்திய தாயே போற்றி!

    * தொண்டில் முன்னிருந்து தொடுப்பாய் போற்றி!

    * தோழமை தொழிலில் காட்டுவாய் போற்றி!

    * பரத்தை மறைத்த பாவையே போற்றி!

    * கேஓம் பார்முதல் ஐந்தும் படைத்தாய் போற்றி!

    * பிள்ளைகள் தந்து மகிழ்வாய் போற்றி!

    * பீடும் பெருமையும் வளர்ப்பாய் போற்றி!

    * புனிதக் காவிரிப் பொன்னுடை போற்றி!

    * பூத்திகழ் பொன்னடி புரிவாய் போற்றி!

    * பெரிய கல்வியின் பெரும்பொருள் போற்றி!

    * பேறுகள் அருளும் பிராட்டியே போற்றி!

    * பைங்கொடிக் காவில் பைங்கிளி போற்றி!

    * பொறுமையின் உச்சியில் பழமே போற்றி!

    * போற்றுவார் ஈர நெஞ்சமே போற்றி!

    * ஞால உருண்டையின் நடுவிசை போற்றி!

    * நம்புவார் அடையும் நற்பயன் போற்றி!

    * நாவல் அடிப்பிரான் நம்மொளி போற்றி!

    * நிலம்முதல் பசுமை நிறத்தாய் போற்றி!

    * நீடுயர் வாழ்வை நல்குவாய் போற்றி!

    * நுட்பாய் இறைவிதி நுவலுவாய் போற்றி!

    * நூலில் நின்படம் காட்டுவாய் போற்றி!

    * நெடியவான் அண்டமும் நின்னிழல் போற்றி!

    * நேயப் பண்ணைக்கு நெடும்புனல் போற்றி!

    * நைந்துநைந் துருக்கும் நாயகி போற்றி! '

    * நொந்திடா தணைக்கும் நுதல்விழி போற்றி!

    * நோயெலாம் தீர்க்கும் மருந்தாய் போற்றி!

    * மதிசூடிப் பெருமான் மருங்காய் போற்றி!

    * மாதுளை முகத்து மங்கையே போற்றி!

    * மின்னிடு மாலை மிளிர்வாய் போற்றி!

    * ஓம் மீத்திறன் அறிவைத் தருவாய் போற்றி!

    * முப்பொருள் பாடமும் மொழிவாய் போற்றி!

    * மூண்டெழு சோதியும் நீயே போற்றி!

    * மென்னடை அன்னமாய் மேவுவாய் போற்றி!

    * மேன்மைகள் உயிர்க்கெலாம் பொழிவாய் போற்றி!!

    * மைதவழ் கண்ணே கரும்பே போற்றி!

    * மொட்டவிழ் கையால் முகந்தருள் போற்றி!

    * மோதலைத் தவிர்க்கும் நீதியே போற்றி!

    * யாதும் நீயே தாயே போற்றி!

    * வட்டவான் காதணி அணிந்தாய் போற்றி!

    * வாழ்த்துவார் மனத்தகம் வாழ்வாய் போற்றி!

    * விதியினை எழுதும் விரைமலர் போற்றி!

    * வீடெலாம் விளக்காய் விளங்குவாய் போற்றி!

    * வெற்றிவேல் தடக்கை கொற்றவை போற்றி!

    * வேண்டுவார் வேண்டலைத் தருவாய் போற்றி!

    * வையமாம் தேரில் வரும்தாய் போற்றி!

    * கொடியரைக் கொன்று காட்டுவாய் போற்றி!

    * குறைவிலா மழையும் பொழிவாய் போற்றி!

    * மூவரும் தேவரும் வணங்குவர் போற்றி!

    * முத்தொழில் நடைபெற மூட்டுவாய் போற்றி!

    * கன்னியாய்ப் பூசனை பண்ணுவாய் போற்றி!

    * காலமும் அருட்சக்தி காட்டுவாய் போற்றி!

    * வழிபடும் தூயரை வாழ்த்துவாய் போற்றி!

    * பக்தியின் கண்ணீர் பார்ப்பாய் போற்றி!

    * மாயையை இயற்கையாய் ஆக்கினாய் போற்றி!

    * ஓம் மந்திரச் சொல்லின் மறைத்தமிழ் போற்றி!

    * சிலந்தியைச் செங்கணான் ஆக்கினாய் போற்றி!

    * மடையனைப் புலவனாய் மாற்றினாய் போற்றி!

    * அம்மையின் பெயரெலாம் அன்னைநீ போற்றி!

    * ஆடும் சிவவொளி அளைந்தாய் போற்றி!

    * அகிலா என்றதும் அண்டுவாய் போற்றி!

    * வானில் கோள்பல வகுத்தாய் போற்றி!

    * அண்டமும் அடுக்காய் அமைத்தாய் போற்றி!

    * அண்டத்தில் பண்டம் காட்டினாய் போற்றி!

    * அறிவுக்கு அடங்கா அண்டமே போற்றி!

    * ஓமில் உயிரைப் படைத்தாய் போற்றி!

    * உயிரில் ஒளியை உரைத்தாய் போற்றி! --

    * நீரிலே முளைத்த நின்சிவம் போற்றி!

    * விழாவிலே உலாவரும் வியனருள் போற்றி!

    * வித்தே போற்றி! விழியே போற்றி!!

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அப்போதில் இருந்து அவன் பாடத் தொடங்கினான். பல்லோராலும் பாராட்டப்படும் கவிஞன் ஆனான்.
    • அவனே 15&ம் நூற்றாண்டில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்த சிலேடைப் புலவன் கவிகாளமேகம்.

    அகிலாண்டேசுவரியின் பெருமைக்கும், சக்திக்கும் சான்றாக விளங்கியவர் கவிகாளமேகம்.

    அவர் ஸ்ரீவைஷ்ணவர், ஸ்ரீரங்கம் பெரிய கோவில் மடப்பள்ளியில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார்.

    அவர் ஒருநாள் ஜம்புகேசுவரத்தில் உள்ள தனது ஆசைநாயகியின் வீட்டிற்கு வந்தார்.

    அவள் அகிலாண்ட நாயகியின் சன்னதியில் நடனமாடுபவள்.

    அவளுக்காக வாயிலில் காத்திருந்தவர் சன்னதியின் கோபுர வாயிலில் படுத்து தூங்கி விட்டார்.

    ஓர் அந்தணன் ஒரு புகழ்பெற்ற கவியாக விரும்பினான். அவன் அகிலாண்டேசுவரியின் பரமபக்தன்.

    அவன் அன்னையைக் குறித்து தவம் இருந்தான். அன்னை அவன் தவத்துக்கு மகிழ்ந்து அருள்புரிய எண்ணினாள்.

    அவள் கண்டவர் மயங்கக்கூடிய அழகிய பருவ மங்கையாக உருமாறி தவம் செய்யும் அந்தணனை நோக்கி வந்தாள்.

    அவள் தரித்திருந்த தாம்பூலத்தை அவன் வாயில் உமிழக் குனிந்த போது அந்தணன் அவளது சவுந்தரிய வல்லமையைக் கண்டு பயந்தான்.

    யாரோ மனதைக் கெடுக்கும் மோகினியோ என்று வெறுத்து ஒதுங்கினான்.

    "சீ போ போ" என்று விரட்டினான்.

    அன்னை அகிலாண்டேஸ்வரி கோபம் அடைந்தாள்.

    தவத்தின் பலன் கிடைக்கப் பெறாத துர்ப்பாக்கியசாலி என்று அங்கிருந்து வெளிப்புறம் வந்து தாம்பூல எச்சிலை உமிழ்ந்தாள்.

    அங்கு வாயைத் திறந்து படுத்திருந்த ஸ்ரீரங்கம் பெரிய கோவில் சமையல்காரர் வாயில் அது விழுந்தது.

    அவர் கோவில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர்.

    "கோவில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்தையும் செய்வேன், பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள்," என்றார்.

    அம்பாளும் அப்படியே செய்ய, அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.

    அவன் கண் விழித்தன்.

    அவனை அன்னை ஆட்கொண்டதாக உணர்ந்தான்.

    அப்போதில் இருந்து அவன் பாடத் தொடங்கினான். பல்லோராலும் பாராட்டப்படும் கவிஞன் ஆனான்.

    அவனே 15&ம் நூற்றாண்டில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்த சிலேடைப் புலவன் கவிகாளமேகம்.

    காளமேகம் பாடிய அனைத்துப் பாடல்களும் சுவை மிகுந்தவை. சாகா வரம் பெற்றவை.

    இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.

    • அறிஞர்களின் ஆலோசனைப்படி ஆனைக்காவைச் அடைந்து ஆக முறைப்படி ஆனைக்கா அண்ணலை வழிபட்டான்.
    • அவன் வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குத் திருவருள் வழங்கினார்.

    இந்திரசபையில் ஒருநாள் விசுவாமித்திரனுக்கும், வசிட் டனுக்கும் இடையே நடந்த விவாதத்தில் விசுவாமித்திரன் தோற்றுப்போனான்.

    விசுவாமித்திரன் கோபமடைந்து வசிட்டனைக் கொல்லுவதற்காக வேள்வித் தீ ஒன்றை வளர்த்து, அதில் இருந்து ஒரு பூதத்தை தோற்றுவித்து வசிட்டனைக் கொன்று வருமாறு அனுப்பினான்.

    ஆனால் பூதமோ பர்ணசாலையில் வசிட்டனின் சாயலில் இருந்த அவனது மகனான சத்தி முனிவனைக் கொன்று விட்டது.

    அப்பூதம் வெளியில் சென்று திரும்பிய வசிட்டன் தன் மகன் இறந்திருப்பதைக் கண்டு அலறினான்.

    வசிட்டனைத் தேற்றுவதற்காக நான்முகன் தோன்றினான். இறந்தவரின் மனைவி கருவுற்றிருக்கும் செய்தியைக் கூறி அச்சிசுவால் உன் குலம் உலகெல்லாம் ஒளிவீசப் போகிறது என்று கூறினான்.

    வசிட்டன் தனது மருமகள் வயிற்றில் இருக்கும் சிசுவின் செவிகளில் விழும் வகையில் இடைவிடாது வேத மந்திரங்களை உச்சரித்து வந்தான்.

    தாயின் கருவில் இருந்தே தத்துவஞானம் முழுவதையும் பெற்ற அவ்வுயிர் பராசரன் என்னும் பெயர் கொண்ட ஆண் விற்றையாகத் தோன்றியது.

    வசிட்டன், பராசரன் வாலிபனானதும் நடந்த சோகக் கதையைக்கூறினான். அநியாயமாகத் தன் தந்தை கொல்லப்பட்டதை எண்ணி அவன் மனம் துடித்தது.

    தாயின் விதவைக் கோலம் நீங்க, அகில புவனத்தில் உள்ள அத்துனை அரக்க பூதங்களையும் அழிக்க நினைத்தான்.

    அறிஞர்களின் ஆலோசனைப்படி ஆனைக்காவைச் அடைந்து ஆக முறைப்படி ஆனைக்கா அண்ணலை வழிபட்டான்.

    அவன் வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குத் திருவருள் வழங்கினார்.

    சிவபெருமானின் அருள்பெற்ற பராசரன் ஆன்மா சாந்திய டையாது பேய் உருவில் அலைந்து கொண்டிருந்த தனது தந்தைக்கு மானுடயாக்கை பெறச்செய்தான்.

    ஆனைக்கா திருகோவிலின் வடகிழக்கு மூலையில் வேள்விச் சாலை அமைத்து மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தி அத்தீயினில் அரக்க பூதங்கள் அனைத்தும் விட்டில் பூச்சிகளைப்போல் விழுந்து இறக்குமாறு செய்தான்.

    • அம்மன் கரத்தில் சிவபூஜைக்காக இரண்டு தாமரை மலர்களை ஏந்திய வண்ணம் உள்ளாள்.
    • சிவபூஜை செய்யும் அம்பிகைக்கு இன்மொழித் தேவி என்று திருநாமம்.

    வழக்கமாக உள்ள கொடி மரமே அல்லாமல் ஜலகண்டேசுவரர் கோவிலில் எட்டு திசைகளுக்கும் எட்டு துவஜஸ்தம்பங்கள் காணப்படுவது மற்ற ஆலயங்களில் இல்லாத தனிச்சிறப்பு.

    இந்த எட்டு கொடிக் கம்பங்களும் எட்டு திசைகளைத் தாங்கும் எட்டு யானைகளையும் எட்டு திக்பாலகர்களையும் காட்டுகின்றன.

    மற்ற ஈசுவர ஆலயங்களில் கர்பக்கிருகத்தின் பின்புறச் சுவற்றில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமானான லிங்கோற்பவர் இங்கு பிரகாரத்தில் உள்ளார்.

    யானை பூஜை செய்து மீண்டும் வந்து பிறக்காமல் முக்தி பெற்றுச் சிவலோகம் சேர்ந்த திருவானைக்காவலில் பராசக்தி நாள்தோறும் சிரத்தையுடன் சிவ நினைவில் மூழ்கி சிந்தனை வேறு எங்கும் சிதறாமல் பக்தியுடன் ஜம்புலிங்கத்தைப் பூஜை செய்து வாழ்கின்றாள்.

    மூலமுழுமுதற் பொருளின் அபிஷேகத்துக்காக பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு ஆகிய பஞ்ச கவ்வியம் எனப்படும் ஐந்து அபிஷேகப் பொருட்களை அளிக்கும் புனிதப் பிறவியான கோமாதாவையும் அம்மன் பூஜித்து மகிழ்ந்தாள்.

    காமாட்சி அம்மனுக்கு ஏகாம்பரேஸ்வரர் அருளிச் செய்த வரத்திற்கு ஏற்ப திருவானைக்காவில் பராசக்தி எந்த விதமான தடையும் இல்லாமல் பூஜைக்கு பாதிப்பு இல்லாமல் வேறு சிந்தனை இல்லாமல் சிவ நினைவுடன் மந்திரங்களை ஓதி ஆத்ம திருப்தியுடன் நித்தமும் சிவபூஜை செய்கின்றாள்.

    இதைக் காட்டும் வகையில் சிவாச்சாரியார் உச்சிக்காலப் பூஜையின் போது அம்மன் போன்று புடவை அணிந்து ஜம்புலிங்கப் பரம்பொருளையும், கோமாதாவையும் பூஜை செய்கின்றார்.

    லிங்கப் பரம்பொருள் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் வலது பக்கமாக ஜலகண்டேசுவரர் இருக்கும் திசையை நோக்கியவாறு அம்மன் சன்னதி அமைந்துள்ளது.

    அம்மன் கரத்தில் சிவபூஜைக்காக இரண்டு தாமரை மலர்களை ஏந்திய வண்ணம் உள்ளாள்.

    சிவபூஜை செய்யும் அம்பிகைக்கு இன்மொழித் தேவி என்று திருநாமம்.

    • அதாவது காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார்.
    • அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்” தலமானது.

    ஒரு முறை அன்னை பார்வதிக்கு பெரிய சந்தேகம் வந்துவிட்டது.

    யோக தட்சிணாமூர்த்தியாக விளங்கும் இறைவன் போக மூர்த்தியாகவும் இருக்கும் காரணம் என்ன என்ற ஐயத்தை எழுப்பினாள்.

    ஐயன் உடனே அதற்குப் பதில் சொல்லவில்லை.

    பூலோகம் சென்று அங்குள்ள ஞானத்தலத்தில் தவமியற்றுமாறும் உரிய நேரத்தில் தாம் வந்து அன்னையின் ஐயத்தைத் தீர்ப்பதாகவும் கூறிவிட்டார்.

    அதன்படியே அன்னை பூலோகம் வந்து முனிவர்கள் எல்லாம் தவம் புரிந்து கொண்டிருந்த திருவானைக்கா சோலையை கண்டு அவ்விடத்திலேயே தானும் தவம் செய்ய முனைந்தாள்.

    தன் தவ வலிமையால் நீரை திரட்டி லிங்கமாக்கி பூசித்து வரலானாள்.

    அதாவது காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார்.

    அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் "நீர்" தலமானது.

    நீரின் வடிவமாக விளங்கியதால் இறைவனுக்கு அப்புலிங்கம் என்ற திருநாமமும் ஏற்பட்டது.

    உரிய காலத்தில் இறைவன் தோன்றி உலகம் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் யோகம் போகம் இரண்டுமே அவசியம் என்பதை உலக ஆன்மாக்களுக்கு உணர்த்த முடிவு செய்தார்.

    இதற்காகவே தான் யோகியாகவும் போகியாகவும் இருக்க வேண்டியுள்ளது என்னும் உண்மையை உணர்த்துகிறார்.

    • நாவல் மரத்தை வடமொழியில் ஜம்பு விருட்சம் என்று கூறுவர்.
    • லிங்கம், நாவல் மரத்தடியில் தோன்றியதால் ஜம்புலிங்கம் என்ற பெயரையும் பெற்றது.

    கோச்செங்கோட்சோழன் திருவானைக்கா திருக்கோவிலை மட்டும் எடுக்கவில்லை.

    தனக்குத் தீங்கிழைத்த யானையால் ஏறமுடியாத வகையில் எழுபது மாடக்கோவில்களை சிவனுக்கு எடுத்தான்.

    இதனைத் திருமங்கை மன்னர்

    "இருக்கிலங்கு திருமொழிவா யெண்தோளீசற்கு

    எழில்மடம் எழுபது செய்துலக மாண்ட

    திருக் குலத்து வளச்சோழன்" என்று பாடுகின்றார்.

    லிங்கம், நாவல் மரத்தடியில் தோன்றியதால் ஜம்புலிங்கம் என்ற பெயரையும் பெற்றது.

    நாவல் மரத்தை வடமொழியில் ஜம்பு விருட்சம் என்று கூறுவர்.

    எனவே கோச்செங்கண்ணன் கட்டிய கோவிலையும் நாவற் கோவில் என்றும் வழங்கினர்.

    இத்தலத்திற்கு ஜம்புகேசுவரம் என்ற வடமொழிப்பெயரும் உண்டு.

    இந் நாவற் கோவிலிலேயே ஈசன் ஜம்புகேசுவரரும், அகிலாண்ட நாயகியாக அகிலாண்டேசுவரியும் தனித்தனித் திருக்கோவில் கொண்டு திருக்காட்சி அருளுகின்றனர்.

    அண்டங்கள் அனைத்தையும் ஈன்ற அன்னையாகிய அகிலாண்டேசுவரியோடு ஈசனையும் கண்குளிரக் கண்டு வழிபட்ட திருத்தொண்டர்கள் பூமாலையும் பாமாலையும் சாத்திப்போற்றுகின்றனர்.

    அழகிய அந்தப் பாமாலைகளுள் ஒன்று அகிலாண்டநாயகி மாலை.

    • சிலந்தி சோழ மன்னனாகப் பிறந்ததை நக்கீர தேவநாயனார், “சீர்மலிந்த சிலந்திக் கினைரசளித்து” என்று கூறுகின்றார்.
    • சிவபெருமானைப் பூசித்து வந்த அந்த யானை கயிலை சென்றது.

    ஆனை உலாவிய சோலையில் ஒரு நாவல் மரத்தின் அடியில் தோன்றிய லிங்கத்தை யானை ஒன்று துதிக்கையால் நீர் கொணர்ந்து திருமஞ்சனம் மாட்டி மலர்க் கொய்து அன்றாடம் பூசித்து வந்தது.

    அதே லிங்கத்திற்கு சிலந்தி ஒன்று தன் வாய்நீரினால் மேற்கட்டி அமைத்து அதன்மீது சருகுகள் விழாமல் காத்து வந்தது.

    அன்றாடம் பூசித்து வந்த யானையோ சிலந்தி வலையைச்சிதைத்துச் சுத்தம் செய்து வந்தது.

    சிலந்தி மீண்டும் வலை கட்டிக் காத்தது.

    யானை மீண்டும் அதனைச்சிதைத்துப் பூசித்து வந்தது.

    இவ்வாறு அன்றாடம் நிகழவே சிலந்தி சினம்கொண்டு யானையின் துதிக்கையில் புகுந்து அதைக் கடிக்கவே யானை வீழ்ந்து இறந்தது.

    சிவபெருமானைப் பூசித்து வந்த அந்த யானை கயிலை சென்றது.

    ஆனால் சிலந்தியோ கோச்செங்கோட் சோழன் என்ற அரசனாகப் பிறந்து திருவானைக்கா திருக் கோவிலை அமைத்ததாகக் கூறுவர்.

    சிலந்தி சோழ மன்னனாகப் பிறந்ததை நக்கீர தேவநாயனார்,

    "சீர்மலிந்த சிலந்திக் கினைரசளித்து" என்று கூறுகின்றார்.

    கோச்செங்கோட் சோழன், தான் முன்னம் திருவருள் பெற்ற திருவானைக்காவில் திருக்கோவில் எடுத்ததை சேக்கிழார்,

    ஆனைக்காவில் தாம் முன்னம்

    அருள்பெற்றதனை அறிந் தாங்கு

    மானைத் தரித்ததிருக் கரத்தார்

    மகிழும் கோயில் செய்கின்றார்,

    எனப் பாடுகின்றார்.

    • அன்னை சந்நிதிக்குச் செல்லும் வழியில் பெரிய தூண் ஒன்றில் ஏகபாத மூர்த்தி காணப்படுகின்றது.
    • அன்னை சந்நிதியின் தென்மேற்கு மூலையில் பஞ்ச முக விநாயகர் விளங்குகின்றார்.

    அகிலம் ஈன்ற அன்னையாகிய அகிலாண்ட நாயகியை (உமையை) ஒரு பாகத்தில் வைத்து கங்கையாகிய மங்கையைச் சடைமுடியில் வைத்துக்காட்சி தருபவன் இறைவன்.

    அன்னையைக் கண்டு வழிபட்ட ஒரு கவிஞன்,

    அம்மையே! அகிலாண்ட நாயகியே என் போன்ற அடியார்கள் புரியும் எண்ணிறந்த பிழைகளைப் பொருத்தருள் புரியும் அன்னையாகிய உன்னை ஒரு பாகத்தில் வைத்த பரமன் மூன்று பிழைகட்கு மேல் பொறுக்காத ஒரு மங்கையைத் தன் சடைமுடியின் மேல் ஏற்றிவைத்தானே!

    இதனால் அன்றே பித்தன் என்ற ஒரு பெயரையும் பெற்றான் என்று பாடுவதன் வாயிலாக,

    அகிலாண்ட நாயகியின் அருட்சிறப்பினைப் போற்றுகின்றான்.

    இங்ஙனம் அருள் பாலிக்கும் வகையில் சிறந்து விளங்குகின்ற அன்னை அகிலாண்டேசுவரி,

    மிகப்பெரிய தனித் திருக்கோவிலில், அடர்ந்த தென்னந் தோப்பினுள் திருச் சந்நிதி கொண்டு தனிப் பொலிவுடன் திகழ்கின்றாள்.

    அன்னை சந்நிதிக்குச் செல்லும் வழியில் பெரிய தூண் ஒன்றில் ஏகபாத மூர்த்தி காணப்படுகின்றது.

    மும்மூர்த்திகளையும் தமது திருமேனியில் படைத்து, பிறகு அவர்களைத் தமது திருமேனியிலே ஒடுக்கி விடுகின்றார்.

    சிவபெருமான் என்பதை ஏகபாத மூர்த்தி சிற்பம் உணர்த்துகின்றது.

    அன்னை சந்நிதியின் தென்மேற்கு மூலையில் பஞ்ச முக விநாயகர் விளங்குகின்றார்.

    அவருக்குத்தலைமேல் ஒரு முகமும் இரு காது புறமும் இரு முகங்களும், பின்புறமாக ஒரு முகமும் சேர்ந்து ஐந்து முகங்களுடன் காட்சி தருகின்றார்.

    தாயுமானவர் இத்தலத்தில் அன்னையை போற்றி வழிபட்டார்.

    அன்னை அகிலாண்டநாயகியை வணங்கி வழிபட்ட தாயுமானவர்,

    "அட்டசித்தி நல் அன்பருக்கு அருள

    விருது கட்டிய பொன் அன்னமே!

    அண்டகோடி புகழ்காவை வாழும்

    அகிலாண்டநாயகி என் அம்மையே"

    என்று அன்னையின் அருள் நிலையைப் போற்றுகின்றார்.

    அன்னை அகிலாண்ட நாயகியைக் கண்ணாரக் கண்டு வழிபட்ட மற்றொரு கவிஞன்

    "அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை

    அணிஉருப் பாதியில் வைத்தான்

    தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்

    சடைமுடி வைத்தனன் அதனால்

    பிளவியல்மதியம் சூடிய பெருமான்

    பித்தன் என்றொருபெயர் பெற்றான்

    களமர்மொய் கழனி சூழ்திரு ஆனைக்

    கா அகிலாண்ட நாயகியே"

    என்று பாடிப் போற்றுகின்றான்.

    • கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள்.
    • அன்னையின் திருவுருவம் நல்ல கம்பீரமான திருத்தோற்றம்.

    பிரகாரங்களுடனும், கோபுரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ள அன்னை அகிலாண்டேசுவரியின் திருக்கோவில் ஈசன் கோவிலினும் அருள்பாலிக்கும் பெருமையுடையதாகும்.

    இதற்குக் காரணம் ஈசனை அகிலாண்டேசுவரி தானே பிரதிஷ்டை செய்தாள்.

    பார்வதி தேவியே அகிலாண்டேசுவரி என்ற திருப்பெயரில் இங்கு சில காலம் தங்கியிருந்து அமுதலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தாள்.

    எனவே அன்னை அகிலாண்டேசுவரியின் திருவருட்சக்தி முதன்மையும் பெருமையும் உடையதாயுள்ளது.

    அன்னை அகிலாண்டேவரி அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே என்றாலும், பின்னரும் கன்னி என மறைபேசும் ஆனந்த வடி மயிலாக விளங்குகின்றாள்.

    கருணை நோக்குடன் கருவறையில் காட்சியளிக்கும் அன்னையின் எதிரில், சங்கராச்சாரிய சுவாமிகள் வைத்த விநாயகர், உள்ளார்.

    அன்னையின் திருவுருவம் நல்ல கம்பீரமான திருத்தோற்றம்.

    கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள்.

    ×