search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agnibad project"

    • இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.
    • மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடைபெற இருக் கிறது.

    அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை வாக்குப்பதிவு நடை பெறவில்லை. அரியானா வில் உள்ள 10 தொகுதிக்கு வருகிற 25-ந்தேதியும், பஞ்சாப்பின் 13 இடங்கள் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகள் ஆகியவற்றுக்கு ஜூன் 1-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.

    இந்த 3 மாநிலங்களும் இளைஞர்களை அதிக அளவில் பாதுகாப்பு படைகளுக்கு அனுப்புவதில் முன்னணி வகிக்கின்றது. பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேச மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் ஓட்டுகளை கவர காங்கிரஸ் புதிய வியூகம் அமைத்துள்ளது.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்ப்பதற்காக 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இதன்படி 17½ வயது முதல் 21 வயது வரை கொண்ட இளைஞர்கள் 4 ஆண்டு களுக்கு ஒப்பந் தத்தில் முப்படை அணிக்கு தேர்வு செய்யப் படுவார்கள். அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மேலும் 15 ஆண்டு களுக்கு பணியில் வைத்து கொள்ளப் படுவார்கள். மற்றவர்கள் 4 ஆண்டுடன் பணியில் இருந்து விடுவிக்கப் படுவார்கள்.

    இந்த திட்டம் விமர் சனத்துக்கு உள்ளானது. அக்னிபாத் திட்டம் முடி வுக்கு கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. பழைய ஆள் சேர்ப்பு முறை மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் உறுதி அளித்தது.

    அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரசார் இந்த 3 மாநிலங்களிலும் வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்து வரு கிறார்கள். இளம் வாக்காளர்களை கவரும் வகையில் இந்த தேர்தல் வியூகம் அமைக்கப் பட்டுள்ளது. அக்னிபாத்தை நீக்குவது உள்பட கட்சியின் 25 உத்தரவாதங்களை விளக்கி தீவிர பிரசாரத்தை இளைஞர் காங்கிரஸ் மேற் கொண்டுள்ளது.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. சீனிவாஸ் கூறும்போது, `இளைஞர் களுக்கு நீதி கிடைக்க வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்கிறோம்.

    நாம் எங்கு சென்றாலும் வேலையில்லா திண்டாட்டம் தான் மிகப் பெரிய பிரச்சினை. நாங்கள் 30 லட்சம் அரசு வேலைகளை வழங்குவதாக வாக்குறுதிஅளித்து காலக் கெடு வகுத்துள்ளோம். இந்த நேரத்தில் இளைஞர்கள் சிறந்த எதிர் காலத்துக்காக எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்றார்.

    • பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
    • நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

    மாதமிருமுறை வெளிவரும் பிரபல ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி பக்ஸி, இத்திட்டத்தைக் கேள்விப்பட்டுத் திடுக்கிட்டுப் போனேன். For God's sake please don't do it" என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    இன்னொரு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் கத்யன், 4 ஆண்டு ஒப்பந்தப் பணியில் சேரும் ராணுவ வீரர், தன் உயிரைத் தியாகம் செய்யும் அளவிற்குப் போரில் பணியாற்றுவார் என எதிர்பார்க்க முடியாது என்று கவலை தெரிவித்துள்ளார்.

    அரசியல் கட்சிகள் தவிர, நாட்டின் பாதுகாப்புப் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும், ராணுவப் பணி பகுதி நேரப் பணி அல்ல என்றும், இதுபோன்ற தேர்வு, ராணுவத்தில் கட்டுப்பாட்டைக் கெடுக்கும் என்று கூறி, இந்தத் தேர்வுத் திட்டம் ஆபத்தானது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப் பணி எனும் லட்சியத்தைச் சிதைக்கும் இந்த அக்னிபாத் எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    ×