என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Agricultural University"
- வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படுகிறது.
வடவள்ளி:
வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பருவமழை இன்னும் சில நாட்களில் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவு பெய்யும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு முன்னறிவிப்பு பெறப்பட்டது.
இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டம் வாரியாக பெய்யும் சராசரி மழை அளவு, எதிர்பார்க்கப்படும் மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சென்னை 810-850, கோவை 338-360, மதுரை 370-390, நெல்லை 515-540, திருச்சி 379-410, சேலம் 331-360, நீலகிரி 501-510, திருப்பூர் 306-330, கரூர் 313-330, கன்னியாகுமரி 533-540, நாமக்கல் 270-270, மயிலாடுதுறை 888-900, நாகப்பட்டினம் 935-950, தஞ்சை 579-610, திருவாரூர் 725-760, திருவண்ணாமலை 450-490, தூத்துக்குடி 442-450, ராணிப்பேட்டை 406-420, கிருஷ்ணகிரி 278-290, தர்மபுரி 314-340, கடலூர் 702-720.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
- 9,526 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கோவை:
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வரவேற்றார்.
விழாவில் மத்திய பயிர் ரகங்கள், உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திலோச்சன் மொஹபத்ரா முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.
இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் இளம் அறிவியல், முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மொத்தம் 9,526 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இதில் 3,415 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6,111 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களை பெற்றனர். விழாவில் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் துணை வேந்தரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.
- முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது.
- நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வடவள்ளி:
கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும் 28 இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வினை ஏராளமான மாணவர்கள் எழுதி, முதல்நிலை படிப்பில் சேர்வதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் இ-மெயில் முகவரிக்கு நேற்று இரவு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இ-மெயிலில், ஜூன் 23-ல் நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணம் திரும்பி வழங்கப்படும்.
2024-2025-ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் நுழைவுத் தேர்வு நடைபெறுவது குறித்தும், தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை படிப்பு செப்டம்பர் மாதம் முடியும் நிலையில், செப்டம்பர் இறுதியிலேயே முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் ஆரம்பமாகும். மாணவர்கள் சேர்க்கை தாமதம் இன்றி நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்த தேவையில்லை
- மாணவர் சேர்க்கைக்கான காலி இடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கபடும்.
கோவை,
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.
உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்தாய்வுக் குரிய குறிப்பிட்ட தேதியில் கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக் கழகத்துக்கு வர வேண்டும்.
உடனடி மாணவர் சேர்க்கை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். உறுப்பு கல்லூரிகளுக்கு பொருந்தாது. இதில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களிடம் இருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும். பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப் பெற்று தவறவிட்டவர்கள் மற்றும் இடம் கிடைத்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம்.
பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப் பெற்று, முன்னரே சேர்க்கை பெற்றவர்கள் அல்லது இடை நிறுத்தம் செய்து கொண்டவர்கள் உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள முடியாது.
கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்த தேவையில்லை. கலந்தாய்வில் இடம் கிடைக்க பெற்ற மாணவர்களில் எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.1,500 மற்றும் இதர பிரிவினர் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். இணைப்பு கல்லூரிக ளுக்கான ஆண்டுக்கட்டணம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும். உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொண்ட மாணவர்களின் வருகைப்பதிவேடு குறிக்கப்பட்டு, தரவரிசை நிர்ணயிக்கப்படும்.
தரவரிசையின் அடிப்ப டையில் மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டப் படிப்பை தேர்வு செய்ய அழைக்கப்படுவார்கள். வகுப்பு வாரியான இட ஒதுக்கீடு கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் காலியிடங்களுக்கான அட்டவணை வருகிற 21-ந் தேி இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலி இடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- 6 இளநிலை, 3 தொழில்முறை பாடப்பிரிவுகள் உள்ளன.
- இணையவழி விண்ணப்ப பதிவு துவங்கியது.
திருப்பூர் :
கோவை தமிழ்நாடு வேளாணபல்கலை க்கழகத்தில் இள நிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொட ங்கியது. விண்ணப்பிக்க ஜூன் 9ந் தேதி கடைசி நாள்.இம்முறை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்கப்படும் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கையும், இணைந்து நடக்கிறது.வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், 14 இளநிலை, 3 டிப்ளமோ படிப்புகளுக்கும், மீன்வள பல்கலையின் கீழ் 6 இளநிலை, 3 தொழில்முறை பாடப்பிரிவுகள் உள்ளன.இளநிலைபட்டப்படி ப்புக்குமாணவர்கள் ஒரே விண்ணப்பத்தை பதிவு செய்தால் போதும். இணையவழி விண்ணப்ப பதிவு துவங்கியது. ஜூன் 9ந் தேதி கடைசி தேதி. விண்ணப்ப கட்டணமாக, எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., மாணவர்கள் 250 ரூபாயும், சக மாணவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். tnau.ucanapply.com மற்றும் tnagfi.ucanapply.com என்ற இணையதளங்களில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலை tnau.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுஉள்ளன.
இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:-
மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும்மீன்வள பல்கலைக்க ழகத்தின் மாணவர்சேர்க்கை செயல்பாடுகள் ஒருங்கி ணைக்க ப்பட்டுள்ளன.உறுப்பு கல்லூரிகளில், 3,363 இடங்களும், இணை ப்பு கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,806 இடங்களும் , மீன் வள பல்கலைக்கழகத்தின் கீழ் 345 இடங்களும் கவுன்சிலிங் வாயிலாக நிரப்பவுள்ளோம்.சந்தேகங்கள் இருந்தால் வேளாண் படிப்புகளுக்கு 0422- 6611345, 6611346, 94886-35077, 94864-25076 ஆகிய எண்களிலும், நாகப்பட்டினம் மீன்வளம் பல்கலைக்கழகத்தை 04365-256430, 94426 -01908 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடத்தப்படும்.நடப்பாண்டில் இளநிலையில் பி.டெக்., பயோ இன்பர்மேடிக்ஸ், பி.டெக்., அக்ரி இன்பர்மேசன் டெக்னாலஜி புதிதாக தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 18 இடங்களும், மாற்றுத்திற னாளிகளுக்கு 125 இடங்கள், முன்னாள் ராணுவ வீரர் பிரிவில் 18 இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 463 இடங்கள், தொழில்முறை பாடப்பிரிவு மாணவர்களுக்கு 246 இடங்கள், ஐ.சி.ஏ.ஆர்., நுழைவுத்தேர்வு வாயிலாக வருபவர்களுக்கு, 20 சதவீதஒதுக்கீடும் வழங்கப்படுகின்றன.10-ம்வகுப்பு தேர்வுமு டிவுகள் வெளியானவுடன் வேளாண் பல்கலையின் கீழ் பட்டயப்படிப்புக்கான சேர்க்கைகளும் ஆன்லைன் வாயிலாக நடைபெறும். tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., பிரிவினர் 100 ரூபாயும், சக மாணவர்கள் 200 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்தவேண்டும்.
- கொப்பரையின் பண்ணை விலை கிலோ 75-80 ரூபாய் வரை இருக்கும்.
- தேங்காயின் பண்ணை விலை 12-14 ரூபாய் வரை இருக்கும்.
உடுமலை :
தமிழகத்தில் 35.07 லட்சம் டன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்தே தேங்காய் அதிக அளவில் கிடைக்கிறது.
தற்போது தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், சந்தை மதிப்பு அறிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விலை முன்னறிவிப்புக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் தரமான தேங்காயின் பண்ணை விலை 12-14 ரூபாய் வரை இருக்கும் எனவும், கொப்பரையின் பண்ணை விலை கிலோ 75-80 ரூபாய் வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
- 33 முதுகலை படிப்புகளும், 28 துறைகளில் முனைவர் பட்டங்களும் வழங்கப்படுகின்றன.
- மே 15ந் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் 33 முதுகலை படிப்புகளும், 28 துறைகளில் முனைவர் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, https://admissionsatpgschool.tnau.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக, மே 15ந் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:- பல்கலைக்கழகத்தின் கீழ், 11 வளாகங்களில் முதுகலை, 33 பாடப்பிரிவுகள் உள்ளன. நடப்பாண்டில் பெரியகுளம் கல்லூரியில் எம்.டெக்., போஸ்ட் ஹார்வெஸ்ட் தொழில்நுட்ப படிப்பு துவங்கியுள்ளோம். பி.எச்டி., 28 பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
இளங்கலை முடித்தவர்கள் அல்லது படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்கள், கடைசி பருவத்தேர்வு மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் முதுகலைக்கும், பி.எச்டி., படிப்புக்கு முதுகலை சான்றிதழ் அல்லது படித்துக்கொண்டு இருப்பவர்கள் முதலாமாண்டு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையிலும், விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை விபரங்களுக்கு 94890 56710 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- 12 இளமறிவியல் படிப்புகள் உள்ளன.
- 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி ஆய்வு செய்யப்பட்டது.
திருப்பூர் :
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ கத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகள், 28 இணைப்பு கல்லூரிகளில் 12 இளமறிவியல் படிப்புகள் உள்ளன.இணைப்பு கல்லூரி களில் மாணவர்களின் சேர்க்கைக்கு கூடுதல் இடம் ஒதுக்க, கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.பல்கலைக்கழகம் தரப்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கல்லூரிக ளின் உள் கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான இடங்கள் அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. இது குறித்து டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில், உரிய ஆய்வுகளுக்கு பின் கல்லூரி களின் தரம், கட்டமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அனுமதி வழங்கியுள்ளோம்.
ஒரு கல்லூரிக்கு வசதி குறைபாடு காரணமாக மாணவர்கள் எண்ணிக்கை 42 சதவீதம் குறைத்துள்ளோம். அதிகபட்சம் ஒரு கல்லூரியில் 20 சதவீத இடங்கள் மட்டும் அதிகரித்துள்ளோம். மொத்தம் 750 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார்.
- தீமை செய்யக்கூடிய பூஞ்சாணங்கள், பூச்சிகள் கோடை வெப்பத்தாலும், பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
- உளி கலப்பை பூமிக்கடியில் கிட்டத்தட்ட இரண்டு அடியில் உள்ள மண்ணை உடைக்கிறது.
உடுமலை:
கோடை கால உழவு முறை மற்றும் எந்திரங்கள் பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆனந்தராஜா, குகன் ஆகியோர் கூறியதாவது:-
கோடையில் பெய்யும் மழை நீரை பூமிக்குள் சேகரிக்க கோடை உழவு மிக பயனுள்ளதாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை கொக்கி கலப்பை கொண்டும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டி கலப்பை கொண்டும் கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் மண் மிருதுவாகி மழைநீரை ஈர்க்கும் திறன் அதிகரிக்கிறது.
கோடை உழவு காற்று, மழையால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும். முந்தைய பயிரின் தூர்கள், களைகளை உரமாக மாற்றும். தீமை செய்யக்கூடிய பூஞ்சாணங்கள், பூச்சிகள் கோடை வெப்பத்தாலும், பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
உழவின் போது மேல் மண்ணை கீழாகவும், கீழ் மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு, காற்றோட்டம், நீர்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை உழவு செய்வதால் மண்ணின் வளம் அதிகரிக்கப்பட்டு கூடுதல் மகசூல் பெற வழிவகை செய்கிறது.
இறகு வார்ப்பு கலப்பையானது தரையில் இருந்து மண்ணை தோண்டி குறைந்தபட்சம் இரண்டு அடி தள்ளி பக்கவாட்டு பகுதியில் போடும் . கலப்பையில் இருந்து இரண்டடி தள்ளி மண் பிரண்டு விழும். இப்படி செய்யும் பொழுது மண் இலகு தன்மையும், அடுத்த விவசாயத்திற்கான எளிய தன்மையும் கிடைக்கும். உளி கலப்பை பூமிக்கடியில் கிட்டத்தட்ட இரண்டு அடியில் உள்ள மண்ணை உடைக்கிறது.
சட்டிக்கலப்பையானது ஒன்றை அடி ஆழமுள்ள மண்ணை வெட்டி மண்ணை கட்டியாக போடும். ஆரம்ப காலங்களில் இந்த வகை கலப்பைத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் இறகு வார்ப்பு கலப்பை வந்தது.சட்டிக்கலப்பையை பயன்படுத்தினால் மண் கட்டி கட்டியாக விழும். அதை உடைப்பதற்கு ஒன்பது கொத்து கலப்பை கொண்டு மறுபடியும் உழவு செய்ய வேண்டியிருக்கும்.
சுழல் கலப்பை, கட்டி உடைப்பான், மண்ணை பிளந்து கட்டிகளை உடைக்கிறது. மண்ணை பிளப்பதற்கு கத்தி போன்ற முனைகள் பயன்படுகின்றன. இவ்வகை கலப்பை 12 முதல் 15 செ.மீ., ஆழம் வரை உழக்கூடியது. இது இலகிய மண்ணிற்கு மிக பொருத்தமானது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க–ழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
- கலந்தாய்வுக்கு அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 7 ஆயிரத்து 755 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
கோவை
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க–ழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
இதில், அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சான்றிதழை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி நேற்று வழங்கினார்.
பின்னர், அவர் நிருபர்க–ளிடம் கூறியதாவது:-
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை க்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்பிற்கு கடந்த 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7,5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 413 இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வுக்கு அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 7 ஆயிரத்து 755 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் 6,602, காத்திருப்பு பட்டியலில் 147 பேர் உள்ளனர். இந்த கலந்த ாய்விற்கு பொதுப் பாடப் பிரிவில் மொத் தம் 1,130 பேர் அழைக்க ப்பட்டனர். தொழிற் கல்வி பாடப்பிரி வில் 54 பேர் அழைக் கப்ப ட்டனர். கலந் தாய்வில் பங் கேற்ற மாணவர் களுக்கு இட ஒதுக்கீட் டிற்கான சான் றிதழ் வழங்கப ்பட்டது. இவர்க ளுக்கான நகர்வு முறை இன்று நடக் கிறது. மேலும், பொதுப்பிரிவு மாணவர் களுக்கான முதற் கட்ட கலந் தாய்வு டிசம் பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடக் கிறது. பின்னர், 10-ந் தேதி இட ஒதுக்கீடும். 12-ந் தேதி முதல் 15-ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பும் நடக்கிறது.
ேலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜனவரி முதல் வாரத்தில் துவங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்த 236 நபர்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தொலை நிலைக் கல்வி பட்டத் தகுதி பெரும் விழா நடைபெற்றது.
வடவள்ளி:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பொன்விழா நிறுவனம் மற்றும் தொலை நிலைக் கல்வி பட்டத் தகுதி பெரும் விழா நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்த 236 நபர்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. தொலை நிலைக் கல்வியில் பண்ணை பட்டய படிப்பில் 45 பேர், முதுநிலை பட்டப்படிப்பு படித்த 35 பேருக்கு பட்டச்சான்று வழங்கப்பட்டது.
இதில் இந்திய வானிலை ஆய்வு மைய முன்னாள் பொது இயக்குனரும், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட ஆலோசகருமான லஷ்மண் சிங் ரத்தோர் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதில் கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் துணை வேந்தர்கள் முருகேச பூபதி, அப்பதுல்கரீம், ராமசாமி, ராமசாமி, பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், தொலைநிலை கல்வி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- 71 இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- கடந்த 8 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் எதுவும் நடைபெற வில்லை.
கோவை:
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியது. இது தொட ர்பாக கோவை தமி ழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி நிருப ர்களிடம் கூறியதாவது:-
2022 - 23 ம் கல்வியாண்டில் இளம் அறிவியல் பாட பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.இன்று மாலை 5 மணி முதல் இணைய தளம் செயல்படும். வருகிற 27.7.22 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.12 இளம் அறிவியல் பாடபிரிவுகளில் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளில் 2148 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில 2337 இடங்களும் உள்ளன. http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடபிரிவு போன்ற அனைத்தும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்.
971 இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஓரே விண்ணப்பத்தில் விருப்ப பாடபிரிவுகளை தேர்வு செய்ய முடியும். ஒரே நபர் ஒவ்வொரு பாட பிரிவிற்கும் தனிதனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.மாணவர் சேர்க்கை தொடர்பான இதர விபரங்களுக்கு www.tnau.ac.in என்ற தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பார்த்துக்கொள்ளலாம்.தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலை பாடபிரிவுகள் செயல்பட்டு வருகின்றது.
982 ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றனர். விரிவாக்க கல்வி இயக்கம், ஆராய்ச்சி மையம் என பல இடங்களில் பணிகளில் இருக்கின்றனர்.பல்கலைகழகத்தில் ஆசிரியர் மாணவர் விகிதம் வேறுபாடு இருப்பது உண்மைதான். கடந்த 8 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் எதுவும் நடைபெற வில்லை. இந்த அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்றுள்ளோம். அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.நீட் தேர்வு முடிவு வந்தவுடன், வேளாண்மை பாடதிட்டங்களுக்கான அட்மிசன் பணிகள் தொடங்கும். செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்