என் மலர்
நீங்கள் தேடியது "Agriculture Officer Inoform"
- ஆன்லைன் வர்த்தக சேவையை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைய தளத்தை பயன்படுத்தி வேளாண் சார்ந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
உடன்குடி:
உடன்குடி வட்டார வேளாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
வேளாண்விளை பொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு உற்பத்தி சார்ந்த பொருட்களை எளிதாக கொள்முதல் செய்ய உதவவும் ஆன்லைன் வர்த்தக சேவையை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைய தளத்தை பயன்படுத்தி வேளாண் சார்ந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். முதல் கட்டமாக 15 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்.
மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களும் விற்பனை செய்ய நடவடி க்கை எடுக்கபட்டு வருகிறது.
இந்த இணையதளம் வாயிலாக, நெல், மக்காச்சோளம், பயிறு வகைகள், எண்ணைவித்து, பயிர் பூஸ்டர்கள், இடுபொருட்கள், காய்கறி விதைகளை ஆர்டர் செய்து உரிய கட்டணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
விவசாயத்தில் நல்லமகசூல் கிடைக்க வேண்டுமானால், நல்ல தரமான விதைகளின் பயன்பாடு முக்கியம். உற்பத்தி செய்து இருப்பில் விற்ப னைக்கு தயாரான தரமான விதைகளை விவசாயிகள் வாங்குவதற்கு வசதியாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முகவரியில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விவசாயிகள் மற்றும் பொது மக்கள் இந்த இணைய தளம் மூலம் பருவத்திற்கு மற்றும் தங்களின் தேவைக்கு ஏற்ற தமிழ்நாடு வோளா ண்மைப் பல்கலை கழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தரமான நெல் விதைகள், மக்காச்சோளம், காய்கறி விதை பாக்கெட், எண்ணை வித்துகள், பயிர் பூஸ்டர்கள், உயிரியல் இடுபொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு வசதியாக இணையதள மூலம் பெற்று பயன்அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.