search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aircraft crash"

    • அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது.
    • ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்து விசாரணை.

    எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம் இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.

    அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது. இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்தார்.

    தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல்படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்..

    ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    • விமானம் விபத்தில் சிக்க இருப்பதை உணர்ந்த விமானிகள் உடனே வெளியே குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடகா மாநிலம் சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூரிய கிரண் பயிற்சி விமானம் இன்று காலை வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

    விமானத்தில் பெண் விமானி உள்பட இரண்டு விமானிகளும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, போகாபூர் கிராமம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விமானம் விபத்தில் சிக்க இருப்பதை உணர்ந்த விமானிகள் உடனே வெளியே குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து.
    • விபத்தில் கேப்டன் விஷால் யாதவ் உயிரிழந்தார் என்றும், பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த விமானி ஒருவர் உயிரிழந்தார்.

    நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், விமானத்தில் இருந்த மற்றொரு பயிற்சி விமானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கோயில் மற்றும் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்று சோர்ஹாட்டா காவல் நிலையப் பொறுப்பாளர் ஜேபி படேல் தெரிவித்தார்.

    மேலும் அவர், "இந்த விபத்தில் கேப்டன் விஷால் யாதவ் (30) உயிரிழந்தார் என்றும், பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் காயமடைந்து அரசு நடத்தும் சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார்.
    • விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.

    ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சிறிய ரக கிளைடர் விமானம் ஒன்று சென்றது. ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானம் தரை இறங்கும்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எனவே விமானி விமானத்தை தலைநகரில் உள்ள தனியார் விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார்.

    அப்போது விமானம் அங்குள்ள வாகன நிறுத்த பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் இறக்கை பகுதி சேதமானது.

    இந்த விபத்தில் விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். விமானத்தில் வேறு யாரும் பயணிகள் இருந்தார்களா? என்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக யாரும் வதந்தி பரப்ப கூடாது எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

    துபாயில் இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் விமான விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானார்கள்

    பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. #AircraftCrash
    பெங்களூரு:

    பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்க உள்ளது.  24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    விமானத் தொழில் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொழிலை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் இந்த கண்காட்சியில், பல்வேறு வகையான விமானங்களின் தொழில்நுட்ப சாகசம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒத்திகையில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.



    இந்நிலையில், எலஹங்கா தளத்தில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற சூரிய கிரண் பிரிவைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இரண்டு விமானங்களும் தரையில் மோதி தீப்பிடித்தன. இதனால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. #AircraftCrash
    ×