என் மலர்
நீங்கள் தேடியது "ajay devgan"
- அஜய் தேவ்கன் தற்பொழுது ரெய்டு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை ராஜ் குமார் குப்தா இயக்க பானரோமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தி பிரபல நடிகரான அஜய் தேவ்கன் தற்பொழுது ரெய்டு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் அஜய் 74 ரெய்டு மற்றும் அவரது நேர்மையினால் 74 முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக நடித்து இருக்கும் ரிதீஷ் தேஷ்முக்கிடம் 75 வது ரெய்டை நடத்தவுள்ளார் போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது.
மேலும் இப்படத்தில் ரிதீஷ் தேஷ்முக், வானி கபூர், ராஜத் கபூர், சௌரப் ஷுக்லா, சுப்ரியா பதக் , அமித் சியால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தை ராஜ் குமார் குப்தா இயக்க பானரோமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு வெளியான ரெய்ட் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் கதையாக அமைந்துள்ளது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பாகமும் வெற்றி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- தமிழில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘கைதி’ திரைப்படம் இந்தியில் ‘போலோ’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
- இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கைதி
இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலோ' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

அஜய் தேவ்கன்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகை அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 'போலோ' திரைப்படத்தின் படப்பிடிப்பில் அமலாபால் வருகிற டிசம்பர் மாதம் முதல் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Good tidings!🌸 https://t.co/uxdNoVX8rM
— Amala Paul ⭐️ (@Amala_ams) November 1, 2022
- ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு.
- இந்திய அணியுடன் நாங்கள் உடன் நிற்கிறோம்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சித்த வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அணியை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுபோல வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நம் அணியின் வெற்றியை நம் சொந்த வெற்றியைப் போல் கொண்டாடும் போது, நம் அணியின் தோல்வியையும் நாம் ஏற்று கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கான் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், இந்திய அணி முழு தேசத்திற்கும் உண்மையில் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்து வருகிறது. இருந்தாலும் உங்கள் இறுதிப் போட்டிக்கான பயணம் விரைவில் முடிந்து போனது.
எனினும் அணியின் ஒவ்வொரு விளையாட்டையும் நாங்கள் ரசித்தோம். வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு அங்கம். இரண்டு முடிவுகளும் தவிர்க்க முடியாதவை. அதனால் நாங்கள் உங்கள் உடன் நிற்கிறோம். சிறந்த அணியுடன் நிற்க நாங்கள் இங்கு இருக்கிறோம். முன்னெப்போதையும் விட வலுவாகவும் சிறப்பாகவும் திரும்பி வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- நடிகர் அஜய் தேவ்கன் தற்போது விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் அஜய் தேவ்கன் நடிப்பில் 'போலா' என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

மாதவன் -அஜய் தேவ்கன்
இதைத்தொடர்ந்து, நடிகர் அஜய் தேவ்கன் 'குயின்', 'சூப்பர் 30', 'குட் பை' உட்பட பல படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
ஜூன் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, முசோரி மற்றும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஜோதிகா
நடிகை ஜோதிகா கடைசியாக 1998-ஆம் ஆண்டு வெளியான 'டோலி சாஜா கே ரக்னா' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜ்ய தேவ்கன் - மாதவன் நடிக்கும் இப்படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
- 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
தமிழில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த 'காதல் தி கோர்' படம் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
தற்போது குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சைத்தான்' படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே, இந்தி சினிமாவில் ஜோதிகா நடித்திருந்தார். அந்த வகையில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார். 'சைத்தான்' படத்தில் நடிகர் மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜோதிகா-மாதவன் நடிப்பில் வெளியான 'டும்... டும்... டும்...', 'பிரியமான தோழி' ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
அந்தவகையில் மாதவனும், ஜோதிகாவும் இந்தி படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.


