என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "al qaeda"
வாஷிங்டன்:
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தலைவர் அல்-ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை பல ஆண்டுகளாக அமெரிக்க படை தேடி வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பவரை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி தான் வசித்த வீட்டில் இருந்து வெளியே எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் பால்கனி அருகே வரும் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.
அல்-ஜவாஹிரி மீது மட்டும் தாக்குதல் நடத்த வேண்டும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்த அமெரிக்கா, துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணையை பயன்படுத்தியது.
இந்த ஏவுகணை எம்.க்யூ-9 ரீப்பர் டிரோனில் (ஆளில்லா விமானம்) பொருத்தப்பட்டு கொண்டு செல்லப்படும். அதிநவீன கேமரா உள்ளிட்ட வசதிகளை கொண்ட ஆளில்லா விமானம். இலக்கின் மேலே பறந்து செல்லும்.
லேசர் கருவி பொருத்தப்பட்ட ஆர் 9 எக்ஸ் ஏவுகணை இலக்கை நோக்கி ஏவப்படும். இலக்கின் மீது மோதுவதற்கு முன்பு ஏவுகணையின் பக்க வாட்டில் இருந்தது 6 பிளேடுகள் வெளியாகும். அதன்பின் இலக்கு வைக்கப்பட்ட நபர் மீது மோதும் ஏவுகணை அவரது உடலை துண்டு துண்டாக்கி விடும். ஏவுகணை வெடிக்காது.
இதன்மூலம் இலக்கு மட்டும் அழிக்கப்படும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த நவீன ஏவுகணையை தான் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்தியது. தாக்குதலின்போது அல்-ஜவாஹிரி வீட்டில் அவரது உறவினர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
அல்-ஜவாஹிரி மட்டும் கொல்லப்பட்டார். முதலில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அதன்பின் ஆர்-9-எக்ஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அல்-ஜவாஹிரியை கொல்ல இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கு முன்பு ஆர்-9-எக்ஸ் ஏவுகணை முதல் முறையாக கடந்த 2017-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.
சிரியாவில் அல்-கொய்தா கமாண்டர் அபு அல்-கைர் அல்-மஸ்ரி காரில் சென்றபோது அந்த விமானம் மீது ஆர்-9-எக்ஸ் ஏவுகணையால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக புகைப்படங்களில் காரின் மேல்புறத்தில் ஓட்டை இருந்தது. காரின் முன் மற்றும் பின்புறத்தில் எந்த சேதமும் ஏற்பட வில்லை.
அல்-ஜவாஹிரி இந்த ஆண்டு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக காபூலில் உள்ள வீட்டுக்கு இடம்பெயர்ந்ததை அமெரிக்க உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அது அல்-ஜவாஹிரி தானா என்பதை உறுதிப்படுத்த நேரம் எடுத்துக் கொண்டனர். அல்-ஜவாஹிரி தனது வீட்டு பால்கனிக்கு வரும் போது அவரது முகத்தை புகைப்படம் எடுத்து ஸ்கேன் செய்து அது அவர் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
பின்னர் தாக்குதலுக்கான திட்டம் மே மாதம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி வீட்டின் கட்டமைப்பு, அவரது குடும்பத்தினரின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டது.
- ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது.
- ஆளில்லா விமானத்தை (டிரோன்) எங்கிருந்து அமெரிக்கா இயக்கியது என்பதில் கேள்வி எழுந்தது.
அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்ட அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது.
இந்த நிலையில் அந்நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் எந்த பங்களிப்பும் இல்லாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார்.
இதனால் ஆளில்லா விமானத்தை (டிரோன்) எங்கிருந்து அமெரிக்கா இயக்கியது என்பதில் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி ஆளில்லா விமானம் இயக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் டிரோன் பாகிஸ்தான் வான்வெளி வழியாக சென்றதாகவும், தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அல்-ஜவாஹிரி, பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துள்ளார். அவர் வசித்த பகுதி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ளது.
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதற்காக நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிதியை பெற முயற்சித்து வருகிறது.
இதற்கிடையே அல்-ஜவாஹிரியின் நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டதாகவும், இதன் மூலம் அமெரிக்காவிடம் நல்ல பெயர் எடுத்து விடலாம் என்ற காரணத்தால் பாகிஸ்தான் அதற்கு சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து அல்-ஜவாஹிரியின் நடமாட்டம் குறித்து பாகிஸ்தான் தகவல்கள் அளித்து இருக்கிறது. இதுகுறித்து சில நிபுணர்கள் கூறும்போது, அமெரிக்காவிடம் நட்புறவை பெறவும், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவைகளிடம் இருந்து நிதி உதவி பெறவும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி உள்ளது என்றனர்.
- ஆப்கானிஸ்தானில் தலிபான், அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.
- அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அல் கொய்தா இயக்க தலைவன் கொல்லப்பட்டான்.
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அங்கு பதுங்கி இருந்த அல்-கொய்தா இயக்கத்தின் தலைவரான அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டான்.
அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவன் அய்மான் அல்-ஜவாரி என்பதும், அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து அவனை தேடி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அல்-கொய்தா இயக்கத்தின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டதை அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இன்று அறிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்