என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alcohol banned"

    • ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
    • ஆளுநருக்கு காந்தி மண்டபத்தில் மது பாட்டில் தெரிந்திருக்கிறது.

    தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவை துண்டிப்பதாக ஆளுநரின் செயல்பாடு உள்ளது.

    ஆளுநருக்கு காந்தி மண்டபத்தில் மது பாட்டில் தெரிந்திருக்கிறது.

    காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. திமுக அரசு மது விலக்கிற்கு எப்போதும் ஆதரவான அரசு.

    மதுவை ஒழிப்பது மத்திய அரசின் கையில் தான் உள்ளது. மதுவை தமிழக அரசால் மட்டும் ஒழித்து விட முடியாது.

    மது விலக்கு தொடர்பாக ஒட்டுமொத்த தேசத்திற்குமான கொள்கையை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.
    • மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

    இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.

    மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்நிலையில், மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது:-

    மாநாடு தொடங்கியதும் மழை வரும் என்று பயந்தேன். இயற்கை நம் பக்கமே உள்ளது. மது ஒழிப்பு மாநாட்டிற்கு லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.

    இந்த மாநாடு அரசியலுக்காகவோ, தேர்தலுக்காகவோ இல்லை. மது வேண்டாம் எனக்கூறும் அனைவரின் ஆதரவும் நமக்கு தேவை.

    மது ஒழிப்பு ஒற்றைக் கொள்கை- கவுதம புத்தரின் முழக்கம் அது. புத்தர் மட்டுமல்ல உலகில் எந்த மகானும் மதுவை ஆதரிக்கவில்லை.

    மது ஒழிப்பு மட்டுமே இன்றைய மாநாட்டின் ஒரே கோரிக்கை. இந்த மாநாடு, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மாநாடு.

    மதுகடைகள் நாளை மூடுவதாக இருந்தால், இன்றே மதுபாட்டில்களை 2 மடங்கு வாங்கி வைக்கிறார்கள். இந்தியா முழுவதும் 7 அல்லது 8 நாட்கள் மட்டுமே மதுக்கடைகள் மூடப்படுகிறது. மற்ற நாட்களில் மது ஆறாக ஓடுகிறது.

    மது ஒழிப்பில் திமுகவுக்கும் உடன்பாடு உள்ளது. நடைமுறையில் சிக்கல் இருப்பதாகவே திமுக நினைக்கிறது. மது ஆலைகள் வைத்திருப்பவர்கள் திமுகவினர், அவர்கள் எப்படி மாநாட்டிற்கு வருவார்கள் என்றும் கேட்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வைத்து, மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பில் பங்கேற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக செலவில் விசிக மாநாட்டை நடத்திய பெருமை திருமாவளவனை சேரும்.
    • ஒரே கல்லிக் இரண்டு மாங்காய் என்ற பழமொழி திருமாவளவனுக்கே பொருந்தும்.

    தி.மு.க. அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர், " விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக அமைச்சர்களிடம் பணம் பெற்றுதான் மது ஒழிப்பு மாநாட்டையே நடத்தினார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேலும் கூறியதாவது:-

    திமுக செலவில் விசிக மாநாட்டை நடத்திய பெருமை திருமாவளவனை சேரும்.

    மாநாட்டிற்கான அனைத்து செலவுகளையும் அமைச்சர்கள் பங்கெடுக்க சொல்லி திமுக போட்ட மைதானம், திமுக போட்ட மேடை, திமுக போட்ட சேர்கள் என திமுக செய்த செலவில் விசிக தோழர்களை உட்கார வைத்த பெருமை திருமாவளவனுக்கு சேரும்.

    ஒரே கல்லிக் இரண்டு மாங்காய் என்ற பழமொழி திருமாவளவனுக்கே பொருந்தும்.

    திமுக அரசுக்கு எதிராக எந்த தீர்மானமும் போட வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு எதிராக எல்லா தீர்மானமும் போடுங்கள் என்று முதல்வர் முதலமைச்சர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பிற மாநிலங்களில் இருந்து பீகாருக்கு மதுபானம் கடத்தப்படும் வழிகளை கண்டறிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
    பாட்னா:

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற நிதிஷ், ஏப்ரல் 5-ம் தேதி அன்று மாநிலத்தில் மதுபானம் உற்பத்தி, வர்த்தகம், சேமிப்பு, போக்குவரத்து, விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

    பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு

    எனினும் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு, மாநிலத்தில கள்ளச் சாரயம் குடித்து 47 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநிலத்தின் அனைத்து அமைச்சர்கள், மூத்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

    அந்த கூட்டத்தில், மதுவிலக்குஉத்தரவை மீறும் போலீஸ் மற்றும் கலால் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமை செயலர் சைதன்ய பிரசாத் கூறியதாவது:  

    சமீபத்திய கள்ளச்சாரய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மதுவிலக்கை மீறும் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், காவல்நிலைய அதிகாரிகள்(எஸ்.எச்.ஓ) உள்ளிட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தந்த பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்தத் தவறிய போலீசார் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஸ்டேஷன் இன்சார்ஜ் பதவி வழங்கப்படாது என்றும் முதல்வர் கூறினார்.

    மேலும், கலால் மற்றும் பதிவுத் துறையின் மூத்த அதிகாரிகளும், காவல் துறையினரும் அடிக்கடி கூட்டங்களை நடத்தி விவாதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    பிற மாநிலங்களில் இருந்து பீகாருக்கு மதுபானம் கடத்தப்படும் வழிகளை கண்டறிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

    மதுபானங்களை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாநில அரசு விரைவில் பிரச்சாரத்தை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×