என் மலர்
நீங்கள் தேடியது "Aliens"
- ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை.
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதாகவும், இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவதாகாவும் தகவல்கள் வெளியாகின.
ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு பதிலாக இலங்கையில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கான ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:-
பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால், இந்தியாவுக்கு என்ன பிரச்சனை? காரணம் என்ன? அவர்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்த வேற்றுகிரகவாசிகளா?
ஐசிசி இந்த பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை. பாகிஸ்தான் ஒரு சிறிய அணி அல்ல. சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தது. இன்னும் முதல் மூன்று அணிகளில் ஒன்றாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏலியன்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்கள்.
- வானில் உள்ள பால்வெளி அண்டத்தில் பல நட்சத்திர குடும்பங்கள் உள்ளன.
இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா? மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா? என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது.
வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் இருப்பது உண்மையா? அல்லது பொய்யா? என்பது, இன்றுவரை நிரூபிக்கப்படாமல் உள்ளது. ஆனால் ஏலியன்கள் இந்த பால்வெளி அண்டத்தில் வேறு எங்கேனும் நம்மை விட அதிபுத்திசாலிகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஏலியன்களின் செயல்பாடுகள் குறித்து இதுவரை பல ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் தங்களது மூளையை கசக்கியபடி கண்களை விரித்து தங்களது ஆராய்ச்சி பயணத்தை தொடங்கி உள்ளனர். ஆனால் ஏலியன்கள் பற்றி இதுவரை எந்த உறுதியான தகவல்களும் வெளிஉலகுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏலியன்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்கள்.
கற்பனை கதாபாத்திரங்களாகவும், ஹாலிவுட் படத்திலும் கற்பனையாக வலம் வரும் வேற்றுக்கிரகவாசிகள் பால்வெளியில் எங்கேனும் இருப்பதற்கு சாத்தியமான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றே பெரும்பாலான விஞ்ஞானிகள் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஏலியன்கள் சிக்குவார்களா என்று வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஏலியன்கள் இருப்பதை உறுதிப்படுத்த ஒரு வழி இருப்பதாக அமெரிக்காவில் உள்ள கர்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பட்டதாரி மாணவர் அக்ஷய் சுரேஷ் தெரிவித்து உள்ளார். ஏலியன்களை கண்டறிய சமிக்ஞைகள் தான் முதல் வழி என்றும் அந்த சமிக்ஞைகளை கொண்டு ஏலியன்களை அறியலாம் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது, வானில் உள்ள பால்வெளி அண்டத்தில் பல நட்சத்திர குடும்பங்கள் உள்ளன. அந்த நட்சத்திர குடும்பங்களில் அதிக நியூட்ரான்களை, அலையாக வெளியேற்றும் சக்தி கொண்ட நட்சத்திரங்களும் உள்ளன. அவை சக்திவாய்ந்த கதிர்களை வெளியிட்ட வண்ணமே இருக்கும். நட்சத்திர கூட்டத்தின் நடுவில், அலைகள் வெளிவருகிறது. இவை எப்.எம். அலைகளை விட 10 மடங்கு சிறியவை. நீண்ட தூரம் பயணிக்கும் அந்த அலைகள் அதிக காந்த தன்மை கொண்டதாக இருக்கிறது.
பால் வெளி அண்டத்தில் ஏலியன்கள் இருந்தால், அவை மற்ற கிரகத்திற்கு செய்தி சொல்ல முயற்சி செய்யும். அப்போது இதுபோன்ற அலைகளை வெளியிடும். இந்த அலைகளை கொண்டு ஆய்வு செய்வதின் மூலம் ஏலியன்கள் பால்வெளி அண்டத்தில் உள்ளதா என்பதை கண்டறியலாம்.
இந்த அலைகளை உள்வாங்க ஒரு கருவியை கண்டறிந்துள்ளேன். இதன் மூலம் ஏலியன்ஸ்களை தொடர்பு கொள்ள முடியும் என்றும் உறுதியாக தெரிவித்து உள்ளார்.
எனவே விரைவில் ஏலியன்கள் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏலியன்கள் வருகையை விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
ஆனால் ஏலியன்கள் குறித்து மறைந்த புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும்போது, வேற்றுக்கிரகவாசிகளைத் தேடி நாம் சிக்னல் அனுப்புவது அவ்வளவு நல்லதல்ல. நம் சிக்னல்களைக் கண்டுபிடித்து நம் உலகுக்கு அவர்களால் வரமுடிந்தது என்றால், அவர்கள் நம்மை விடத் தொழில்நுட்பங்களில் பல மடங்கு முன்னேறியவர்களாகவே இருப்பார்கள். அப்படியொரு கூட்டத்தை எதிர்த்து நிற்கும் அளவுக்கு நாம் இன்னமும் வளரவில்லை. அப்படிச் செய்வது ஆபத்து தான் என்று எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா எனும் வாதம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
- ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன்:
இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா, மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது.
வேற்று கிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது.
சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஏதேனும் ஒரு கோளில் ஏலியன்கள் இருப்பதாக ஒரு தரப்பினரும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஏலியன்கள் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதை என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் வந்ததாகவும், சிலர் அதனைப் பார்த்ததாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிலர் கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் ஏலியன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு மெக்சிகோ நகரில் ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மெக்சிகோவில் நடந்த இந்த ஏலியன்ஸ் கண்காட்சி வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் மேலும் அதிகரித்தது.
இதற்கிடையே, ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மனித வளம் பெருக்கும் திட்டம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏலியன்கள் பூமியில் மனிதர்களிடையே ரகசிய வாழ்க்கை நடத்தி வரலாம் என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அந்த ஆய்வறிக்கையில் பூமியில் பாதாள சுரங்கம் போன்ற மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஏலியன்கள் ரகசிய வாழ்க்கை நடத்தி வரலாம் என்றும், நிலவில் அல்லது மனிதர்களிடையே அவர்கள் நடமாட முடியும் என்றும், பூமிக்கு அவ்வப்போது வந்து செல்ல முடியும் என்றும், ஏலியன்கள் மனித உருவெடுத்து நம்மிடையே கூட வசித்து வரலாம் எனறு கூறும் ஆராய்ச்சியாளர்கள், இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவிக்கின்றனர்.
- வேற்றுகிரக வாசிகள் பற்றி இஸ்ரோ தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
- மனிதர்களை விட ஏலியன்கள் பலமடங்கு வளர்ச்சி பெற்றிருக்கும்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வேற்றுகிரக வாசிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, "பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயம் உள்ளன. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம்."
"100 ஆண்டுகளுக்கு முன் நமது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை அடியோடு மாறியிருக்கிறது. இத்தகைய மைக்ரோபோன், கேமரா, லைட் மற்றும் தகவல் பரிமாற்ற வசதிகள், தொலைகாட்சி என எதுவும் இல்லாமல் இருந்தது. இவை அனைத்தையும் நாம் 100 ஆண்டுகளில் அடைந்திருக்கிறோம்."
"அந்த வகையில் இதே போன்ற நாகரீகம் இருக்கிறது என நினைத்துக் கொள்ளுங்கள். அவைகள் நம்மை விட 1000 ஆண்டுகள் முன்னேறி இருக்கின்றார்கள் எனில் அவர்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெறும் 100 ஆண்டுகளில் நாம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற முடியும் என்றால், அடுத்த 100 ஆண்டுகளில் நம் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்."
"நம்மை விட 1000 ஆண்டுகள் முன்தோன்றி இருக்கும் வேற்றுகிரக வாசிகள் எத்தகைய வளர்ச்சி பெற்றிருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள். அவர்கள் நிச்சயம் இங்கு இருக்க வேண்டும். அவர்கள் நமது பாட்காஸ்ட்-டை கேட்டால் கூட ஆச்சரியமில்லை."
"அவர்கள் உங்களை புழுவாகவே நடத்துவார்கள். நம்மை விட 10000 மடங்கு வளர்ச்சி பெற்ற தொழில்நுட்பம் கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் நிச்சயம் இங்கு இருப்பதற்கு வாய்ப்பு உண்டு," என்று தெரிவித்தார்.
- 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார்.
- பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும்
16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ், வருங்காலம் குறித்த தனது கணிப்புகளுக்குப் பெயர் பெற்றவர். 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார்.
அவரது எழுதி வைத்ததின்படி, இந்த மோதல் பரவலான அழிவுக்கு வழிவகுக்கும், இது உலகையே உலுக்கக்கூடும். நாஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, உலகம் ஒரு பொருளாதார சரிவைச் சந்திக்கும், அது பேரழிவை ஏற்படுத்தும், இது பரவலான அமைதியின்மை மற்றும் சமூக எழுச்சிக்கு வழிவகுக்கும். இந்த சரிவின் தாக்கம், மெக்சிகோ, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.

அங்கு பொருளாதார உறுதியற்ற தன்மை தற்போதுள்ள சவால்களை மேலும் மோசமாக்கும். பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும் என்று கணித்துள்ளார்.
நாஸ்டர்டாமஸ் போன்றே பல்கேரியாவை சேர்ந்த ஆன்மீகவாதி பாபா வாங்கா கணிப்புகளும் பெரும்பாலும் சரியாகவே இருந்துள்ளன.

அவரது கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில், மனித குலம் வேற்று கிரகவாசிகளைச் சந்திக்கும், வேற்றுகிரகவாசிகள் ஒரு உலகளாவிய நிகழ்வில் [அது ஒரு விளையாட்டு நிகழ்வாக இருக்கலாம்] போது தங்களை வெளிக்காட்டுவார்கள்.
மேலும் டெலிபதி மூலம் தொடர்பு கொள்ளும் திறனை மனிதர்கள் பெறுவார்கள், மனித பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்கப்ப் பாய்ச்சல் ஏற்படும் என்று கணித்துள்ளார்.
- வீடியோ விமானத்தில் பயணித்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது போல உள்ளது.
- மேகங்களில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை 3-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏலியன் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.
இணையத்தின் தாக்கம் காரணமாக உலகின் எந்த மூலையிலும் வித்தியாசமான சம்பவங்கள் ஏதாவது நடந்தாலும் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேற்று கிரக வாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், மேகங்கள் மீது மனிதர்களின் தோற்றம் போன்ற வேற்று கிரக வாசிகள் நின்று கொண்டிருப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோ விமானத்தில் பயணித்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது போல உள்ளது. அதில், மேகங்களில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை 3-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏலியன் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. அந்த உருவம் வேற்றுகிரக வாசிகள் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் பயனர்கள் பலரும் ஏலியன்கள் தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவிட்டதால் இந்த வீடியோ இணையத்தில் விவாதத்தை தூண்டி உள்ளது.