search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwar Thirunagari"

    • இந்த புளியமரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது.
    • இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது.

    ஆதிசேஷனின் அவதாரமாகவும், ராமாயணத்தில் லட்சுமணனின் அவதாரமாக தோன்றியவர் திருப்புளியாழ்வார்.

    இவர் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் பேசாத குழந்தையாக தவம் மேற்கொள்வதற்காக அங்கு நின்றார்.

    அந்தப் புளிய மரப் பொந்தில் நம்மாழ்வார் இருந்தார்.

    இந்த புளியமரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது.

    புளிய மரத்திற்கும், சன்னிதிக்கும் பூஜை உண்டு.

    புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர்.

    இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது.

    இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை.

    நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை.

    தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்சக் காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.

    நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார்.

    ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில், ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத்தக்கது.

    வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து, கோவிலில் கொடியேற்றப்படும்.

    இந்த திருவிழாவின் 5–ம் நாள் உற்சவம் முக்கியத்துவம் பெற்றது.

    அன்றைய விழாவில் ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளில் இருந்தும் எம்பெருமாள்கள், பல்லக்கில் ஆழ்வார் திருநகரி வந்தடைவார்கள்.

    ஆதிநாதர் கோவில் முற்றத்தில் நவ திருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை செய்யப்படும்.

    இரவு 11 மணி அளவில் இறைவன் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சி தருவார்.

    தாமாகத் தோன்றிய பெரிய திருமேனி. மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.

    திருத்தொலைவில்லிமங்கலம் அருகிலுள்ள சௌரமங்கலம் கிராமத்தில் அவதரித்த நம்மாழ்வாரை, அவரது பெற்றோர் குருகூருக்கு அழைத்து வந்து ஆதிநாதன் ஸந்நிதியில் விட்டனர்.

    குழந்தை தவழ்ந்து சென்று அங்கிருந்த புளியமரப் பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் அமர்ந்தது.

    மதுரகவி ஆழ்வார் இங்கு வந்து தமக்கு ஹிதோபதேசம் செய்யும்படி பிரார்த்திக்க, நம்மாழ்வார் திருவாய்மொழியை அருளிச் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.

    அதனால் 'ஆழ்வார் திருநகரி' என்று பெயர் பெற்றது.

    ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

    • அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.
    • அதிகமாக இளைஞர்களை அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

    தென்திருப்பேரை:

    ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஆழ்வார்திருநகரி யிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஆழ்வார் திருநகரி நகர செயலாளர் செந்தில் ராஜகுமார் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவ சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஸ்ரீவை குண்டம் வக்கீல் பிரிவு இணை செயலாளர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் புதிய உறுப்பினர் படிவத்தை வழங்கி பேசியதாவது:-

    அடுத்த ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி தான் என்று காவல்துறை அதி காரிகள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் சொல்லக் கூடிய அளவில் உள்ளது. எனவே அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், பழைய உறுப்பினர்கள் தங்களது அடையாள அட்டையை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

    அதிகமாக இளை ஞர்களை அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் போது அந்த பகுதியில் அ.தி.மு.க. வலு வான கட்சியாக மாறும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியை கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் இளை ஞர்கள்- இளம் பெண்கள் பாசறை உறுப் பினராக சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நகர துணைச் செயலாளர் விஸ்வ நாதன், இணைச் செயலாளர் முகமது மாஜிதா, மாவட்ட பிரதிநிதி ஜெயராஜ், துணை செயலாளர்கள் இரட்டை முத்து, முஜிபுர் ரஹ்மான், வேலுச்சாமி, அனந்த வெங்கடாச்சாரி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மரிய அடைக்கலம், மகளிர் அணி செயலாளர் அமுதா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்புராஜ், விவசாய அணி செயலாளர் ஆனந்த பூபதி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் லட்சுமணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகாராஜன், அண்ணா தொழிற்சங்கம் பெரியசாமி, எஸ்.இ.டி.சி. பணிமனை செயலாளர் முருகானந்தம், வார்டு செயலாளர் மாரியம்மாள், தென்திருப்பேரை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கந்தன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

    ×