என் மலர்
நீங்கள் தேடியது "Ambai"
- ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர் அம்பை, மணிமுத்தாறு மற்றும் கடையம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
- அப்பகுதிகளில் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி மின் வாரிய செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர் அம்பை, மணிமுத்தாறு மற்றும் கடையம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்தநா டார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்க ம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளா ங்குளி, ரெங்கசமுத்திரம், ஊர்க் காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அேதபோல் மணிமு த்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம், பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப் புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்புரம், வெங்காலிபட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அழகு, நல்லக்கண்ணு ஆகியோர் வாத்துகளை மேய்த்து கொண்டிருந்தனர்.
- வயலில் பலத்த சத்ததுடன் இடி விழுந்ததில் 20 வாத்துகள் உயிரிழந்தது.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாசமுத்திரத்தில் நேற்று இடி மின்னல் தாக்கி 20 வாத்துகள் பலியானதுடன் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மயங்கி விழுந்தது.
அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை முடிவடைந்த நிலையில் அம்பை ஊர்க்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் மதுரையை சேர்ந்த சின்ன அழகு, நல்லக்கண்ணு ஆகியோர் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று மதியம் பயங்கர இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உடனே வாத்து மேய்த்து கொண்டிருந்த 2பேரும் அருகில் இருந்த மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வாத்துகள் மேய்ந்து கொண்டிருந்த வயலில் பலத்த சத்ததுடன் இடி விழுந்துள்ளது. இதில் அங்கிருந்த 20 வாத்துகள் அதிர்ச்சியில் உயிரிழந்தது. மேலும் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மயக்கமடைந்து விழுந்தது. மேலும் இடி, மின்னல் தாக்கியதில் இப்பகுதியில் பல வீடுகளில் டிவிகள் பழுதாகி உள்ளது.
- நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்ற ஊழியர்களுக்காக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்கள் என 120 பேருக்கு கண் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை நடைபெற்றது
நெல்லை:
நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்ற ஊழியர்களுக்காக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை தாலுகா சட்டப்பணிகள் குழுத்தலைவர் மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதி கே.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சி.செந்தில்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.குமார், குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஏ.பல்கலை செல்வன், வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் எம்.ராஜேந்திரன், எஸ்.செல்வ ஆண்டனி, கே.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர் காயத்ரி கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். விழி ஒளி ஆய்வாளர் இந்திரா கண் பரிசோதனை மேற்கொண்டார். நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்கள் என 120 பேருக்கு கண் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் முதன்மை முகாம் மாணிக்கம், உதவி மேலாளர் அகிலன் ஆகியோர் செய்திருந்தனர்.
- தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி அம்பை பூக்கடை பஜாரில் தொடங்கியது.
- இதில் ஆண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும், பெண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிங்கை:
தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி அம்பை பூக்கடை பஜாரில் தொடங்கியது. ஏ.எஸ்.பி. பல்பீர்சிங் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பெண்கள் பிரிவு போட்டி அகஸ்தியர் பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளியில் இருந்து தொடங்கியது. இதை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை 12-ம் அணி தலைவர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மினி மாரத்தான் போட்டி யில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டார்கள். இதில் ஆண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும் பெண் கள் பிரிவில் 20 பேர்க ளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மினி மாரத்தான் போட்டியில் மாணவ- மாணவிகள், விளையாட்டுத் துறையினர், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
- அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன்,மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
கல்லிடைக்குறிச்சி:
அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு லோடு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் மானுரை சேர்ந்த இசக்கிமுத்து (39), சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி பாண்டி, நெல்லை டவுனை சேர்ந்த மடத்தான், சிவா ஆகியேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அம்பை வட்டார அளவில் நடைபெற்ற பேரவை கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை தாங்கினார்.
- அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுகாதாரம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், பள்ளிகள், சுகாதார மையங்களை மேம்படுத்துவது குறித்தும், அவற்றை சீர் செய்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், எதிர்கால சுகாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பை வட்டார அளவில் நடைபெற்ற பேரவை கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா செல்வி, ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி, இசக்கியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுகாதாரம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், பள்ளிகள், சுகாதார மையங்களை மேம்படுத்துவது குறித்தும், அவற்றை சீர் செய்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், எதிர்கால சுகாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அயன் சிங்கம்பட்டி முத்துகிருஷ்ணன், வெள்ளங்குளி முருகன், கோடாரங்குளம் தங்கம், அயன்தீருவாலீஸ்வரம் வள்ளி, வாகைக்குளம் சுப்புலெட்சுமி நந்தகுமார், மருத்துவர்கள் பிரவின் குமார், பழனிசெந்தில் குமார், ஸ்டான்லி பொன்ராஜ், நிலோபர், ஜெபிஷா ரெஜி, ஈஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், திருப்பதி, ரவிச்சந்திரன், கணேஷ் குமார், கணபதி ராமன், ஆனந்த் பொன்சிங், பாஸ்கர், சுகாதார செவிலியர்கள், ஆய்வக நட்பனர்கள், மஸ்தூர் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அம்பை அருகே உள்ள வி.கே.புரம் சிவந்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசிங் செல்போன் கடை நடத்தி வந்தார்.
- நேற்று மாலை திடீரென தனசிங் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
நெல்லை:
அம்பை அருகே உள்ள வி.கே.புரம் சிவந்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசிங் (வயது 32).
செல்போன் கடை
இவர் அங்கு செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நி லையில் கடந்த 2 வருடங்க ளுக்கு முன் தனசிங்கின் மனைவி உடல்நிலை பாதிப்பால் இறந்துள்ளார்.
அதில் இருந்து தனசிங் மனமு டைந்த நிலையில் காணப் பட்டார். மேலும் அவர் கடைக்கும் சரியாக செல்லாமல், யாரி டமும் பேசாமல் இருந்துள் ளார்.
தற்கொலை
நேற்று மாலை திடீரென தனசிங் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தனசிங் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது.
- அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுடலையாண்டி தொடங்கி வைத்தார்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாசமுத்திரத்தில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுடலையாண்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கத்தை அம்பாசமுத்திரம் வட்டார சாமில் மற்றும் மரவியாபாரிகள் சங்கத் தலைவர் மார்ட்டின் தொடங்கி வைத்தார். மூட்டா தலைவர் பேராசிரியர் இசக்கி, புரட்சிகர இளைஞர் முன்னணி மணிவண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். த.மு.எ.க.ச. செயலர் வேல்முருகன் வரவேற்றார். மனிதம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் தடை ஏற்படும்
- நாலாங் கட்டளை, கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல், சிங்கம்பாறை பகுதி களில் மின் வினியோகம் இருக்காது.
கல்லிடைக்குறிச்சி,:
கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறி யாளர் சுடலையாடும் பெரு மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் தடை ஏற்படும்
ஓ.துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங் கட்டளை, கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல், சிங்கம்பாறை பகுதி களில் மின் வினியோகம் இருக்காது.
வீரவநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவ நல்லூர், சாட்டுபத்து, அரிகே சவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கச முத்திரம், கூனியூர், காரு குறிச்சி பகுதிகள் மற்றும் அம்பாசமுத்திரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார் ்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டிபகுதி களில் மின் வினியோகம் இருக்காது.
இதேபோல மணிமுத் தாறு துணை மின்நிலையத்திற்குட்பட்ட மணிமுத் தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைரா விக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும்.
கடையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவுடை யானூர், மனல் காட்டானூர், பண்டார குளம், வள்ளியம்மாள் புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை அம்பை அருகே உள்ள கீழஆம்புரில் இன்று நடைபெற்றது.
- அம்பை நகராட்சி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறையாக புகழ் பெற்ற மரக்கடைசல் பொம்மைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
நெல்லை:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை அம்பை அருகே உள்ள கீழஆம்புரில் இன்று நடைபெற்றது.
இதனை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். இதில் அம்பை நகராட்சி பகுதிகளில் மரக்கடைசல் பொம்மைகள் உற்பத்தி செய்து வரும் கைவினை கலைஞர்களுக்கு உலக புகழ் பெற்ற அனுபவம் மிக்க பயிற்சியாளரை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
அம்பை நகராட்சி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறையாக புகழ் பெற்ற மரக்கடைசல் பொம்மைகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இதில் குழந்தைகள் விரும்பி விளையாடும் செப்பு சாமான்கள் போன்றவையும் அடங்கும். நலிந்து வரும் இந்த பாரம்பரிய தொழில்முறையில் போதுமான வருமானம் கிடைப்பதில்லை என்பது அவர்கள் நீண்ட நாட்களாக கூறிவரும் கோரிக்கையாகும்.
இதற்கு சீன பிளாஸ்டிக் பொம்மை பொருட்களும் மற்ற மாநிலங்களின், உற்பத்தியாளுடான போட்டியும், தொழில் முன்னேற்றத்திற்கான முதலீட்டின்மையும் காரணமாக கூறப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், தொழில் முதலீடுகள் குறைவாக உள்ளதால் தரம் குறைந்த மூலப்பொருட்களை உபயோகிக்க வேண்டியுள்ளதாகவும், இதனால் உற்பத்தி செய்யும் பொருட்கள் நல்ல விலைக்கு விற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இதனால் இளைய தலைமுறையினர் இந்த தொழிலை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். காலப்போக்கில் இத்தொழில் அழிந்து விடும் என கவலை தெரிவித்தனர். இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் துணையோடு மேம்பட்ட மரக்கடைசல் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியை அனுபவமிக்க பயிற்சியாளர்கள் கொண்டு அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி ஒரு மாதம் நடைபெறும். பயிற்சியின் முடிவில் கைவினை கலைஞர்களின் தொழில் திறன் விரிவடைவதுடன் அவர்களுக்கான வர்த்தக வாய்ப்புகளையும் மேம்படுத்தி தரும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பயிற்சி கலெக்டர் கோகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
- மக்கள் அனைவரும் திரண்டு சென்று அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பை ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அருகில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் கடை
இதில் அம்பை, வி.கே.புரம் பகுதி பயனாளிகள் குடியிருந்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள், பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
மேலும் சுமார் 400-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. சுகாதார தேவைகள் எதுவும் சரிவர செய்து தரப்படவில்லை எனக்கூறி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் மக்கள் அனைவரும் திரண்டு சென்று அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் தாசில்தார் விஜயா பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்வதாக சமாதானம் செய்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜகோபால், பொரு ளாளர் வணங்காமுடி, சமூக ஆர்வலர் ரஹ்மான் சேட், துணைத்தலைவர் நெல்லையப்பன், செயலாளர் மனோ சித்ரா, இணை செயலாளர் மாரி செல்வி, சண்முகசுந்தரம், ஏசையா, ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தாசில்தாரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
- நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப் பதால் ஓ.துலுக்கப்பட்டி துணை மின்நிலை யத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- இதேபோல வீரவநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற் பொறியாளர் சுடலை யாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப் பதால் ஓ.துலுக்கப்பட்டி துணை மின்நிலை யத்திற்கு உட்பட்ட ஆழ்வான் துலூக் கப்பட்டி, ஒ.துலூக்கப் பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங் கட்டளை, கீழக்குத்த பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
இதேபோல வீரவநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கச முத்திரம், திருப்புடை மருதூர், கூனியூர், காரு குறிச்சி, அத்தாளநல்லூர், ரெட்டியார்புரம் பகுதிக ளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
அம்ம்பை, ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணி முத்தாறு, ஜமீன் சிங்கம் பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன் மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள் புரம் ஆகிய பகுதி களிலும் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கடையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவுடையானூர், மனல் காட்டானூர், பண்டார குளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதி களில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.