என் மலர்
நீங்கள் தேடியது "Ambur"
- இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
- தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தேர்தலை ஒட்டி, அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து, வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், ஆம்பூர் அருகேயுள்ள கரும்பூரில் அனைத்து கட்சியினருக்கும் சாதகமாக கட்சியின் சின்னங்களை ஒரே கட்டிடத்தில் வரையப்பட்டுள்ள நிகழ்வு, அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஜோலார்பேட்டை:
ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் மேல்பட்டி இடையேயான தண்டவாளத்தில் 55 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் வனச்சரகத்தில் ஆந்திர மாநிலத்தின் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகளை ஒட்டி உள்ள காரப்பட்டு காப்புக்காடுகள், துருகம் காப்புக்காடுகள், ஊட்டல் வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் அபிகிரிப் பட்டரை, பொன்னப்பல்லி, மலையாம்பட்டு, காட்டு வெங்கடாபுரம், மத்தூர் கொல்லை, சுட்டக்குண்டா, பைரப்பள்ளி, பெங்கள மூலை போன்ற பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.
சில காலங்களுக்கு முன்பு வனப்பகுதிகளுக்கு ஆடு, மாடுகளை மேய்க்க ஓட்டிச் சென்றால் அவற்றை சிறுத்தைகள் வேட்டையாடின. ஆனால், வெள்ளாட்டு கொட்டகைகள், மாட்டுக் தொழுவங்களுக்கு வந்து சிறுத்தை கால்நடைகளை தூக்கி செல்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாம்பட்டை சேர்ந்த வெங்கடேசன் ஆட்டுப்பட்டியில் நுழைந்த 2 சிறுத்தைகள் இரு ஆடுகளை தூக்கி சென்றன. அதேபோல் இரு நாட்களுக்கு முன்பு அபிகிரிப்பட்டறை கலைஞர் நகரை சேர்ந்த ராஜகோபால் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது ஆடு ஒன்றை சிறுத்தை தூக்கி சென்றது.
சிறுத்தை தொடர்ந்து வேட்டையாடி வருவதால் வனப்பகுதி எல்லையோரக் கிராமத்தில் வசிக்கும் பயனாளிகள் ஆடுகளை வளர்ப்பதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே, சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளனர். அபிகிரிபட்டறை, அரவகல் துருகம் ஆகிய கிராமங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கூண்டு வைத்தபோது சிறுத்தை சிக்கவில்லை.
இந்த முறையாவது பிடிபடுமா என கண்காணித்து வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள மேல்கிருஷ்ணாபுரம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் மணி இவரது மனைவி பத்மாவதி (வயது 62). இவர் இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு மர்ம நபர் திடீரென பத்மாவதி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த பத்மாவதி கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வெள்ளாடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.
ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, வன்னிய நாதபுரம், ரகுநாதபுரம், மேக்கனாம்பல்லி, ராள்ளக்கொத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு இலவசமாக வழங்கிய வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன.
இந்நிலையில் மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளுக்கு கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்நடைத்துறை நோய்கள் புலனாய்வு இணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீஹரி தலைமையில் கால்நடை டாக்டர்கள் ரமேஷ்குமார், பிரவீன்குமார் உள்ளிட்ட குழுவினரும், பொது சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் மாவட்ட பூச்சியியல் நிபுணர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் ரஷீத், சுகாதார ஆய்வாளர் பிரேம் உள்ளிட்ட குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து கால்நடை துறையின் நோய்கள் புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் ஸ்ரீஹரி கூறியதாவது:-
வழக்கத்தை காட்டிலும் அதிக பனிப்பொழிவே வெள்ளாடுகள் இறப்புக்கு காரணம். திறந்த வெளியில் உள்ள பட்டிகளில் வெள்ளாடுகளை அடைக்கக்கூடாது. கூரை மேய்ந்த கொட்டகைகளில் மட்டுமே ஆடுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும்.
ஆடுகளுக்கு நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். நோய் தாக்கி வெள்ளாடுகள் இறந்தால் அவற்றை குழி தோண்டி புதைக்க வேண்டும். உணவுக்காக சம்மந்தப்பட்ட வெள்ளாட்டின் இறைச்சியை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், நோய் தாக்குதலுக்கு ஆளான வெள்ளாட்டு கொட்டகைகளை பார்வையிட்டனர். வெள்ளாடுகளின் சளி, சாணம் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.
ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலூரை சேர்ந்தவர் ராமசந்திரன் மகன் சந்தோஷ் (வயது 20). ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வந்தார். குறவன் காலனியை சேர்ந்த பாண்டு மகன் சந்துரு (18). இவர் பள்ளிகொண்டா அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று மாலை 2 பேரும் பைக்கில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கரூரில் இருந்து அரக்கோணத்திற்கு டீசல் ஏற்றி சென்ற லாரி ஆம்பூர் அடுத்த உடையராஜ்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்தது.
லாரி டிரைவர் ஊத்தங்கரை அடுத்த பெரிய கள்ளப்பட்டியை சேர்ந்த முருகன் (38) லாரியை பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் வந்த பைக் லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சந்தோஷ் இறந்தார். மேலும் சிகிச்சை பெற்று வந்த சந்துரு இன்று அதிகாலை 3 மணிக்கு இறந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் பரவக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). டிரைவர். இவர் ஆம்பூர் சர்க்கரை ஆலையில் கரும்பு லோடு இறக்கிவிட்டு, டிராக்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெங்கிலி என்ற இடத்தில் சென்றபோது எதிரே ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த டீசல் லாரி டிராக்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் செல்வமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் கோகுல் (வயது 25). இவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் இன்று காலை அவரது வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது கோகுல் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது.
போலீசார் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து கோகுலை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி (45), வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இவர் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் சென்றது.
இதுகுறித்து, விசாரணையில் பார்த்தசாரதி மீதான புகார் நிரூபணமாகியுள்ளது.
இதையடுத்து பார்த்த சாரதியை சஸ்பெண்டு செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த ஆணை சென்னையில் இருந்து பேக்ஸ் மூலம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நகராட்சி கமிஷனர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Suspend
ஆம்பூர்:
சென்னை பட்டாபிராம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தர் (வயது 34). இவர் ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் கிராபிக்ஸ் டெக்னீசியனாக பணியாற்றி உள்ளார். இவரது மனைவி மாயா (25). இவர்களது குழந்தை கீர்த்தி (2).
சுந்தர் தனது குடும்பத்துடன் இன்று காலை பெங்களூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். ஆம்பூர் அடுத்த மின்னூர் என்ற இடத்தில் கார் சென்ற போது நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த தரைமட்ட கிணற்றில் கார் கவிழ்ந்தது. இதில் சுந்தர், மாயா, குழந்தை கீர்த்தி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
கிணற்றுக்குள் கிடந்ததால் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல் 3 பேரும் தவித்தனர். அங்கிருந்து கத்தி கூச்சலிட்டனர். யாரும் காப்பாற்ற வரவில்லை. சுந்தர் தனது செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து காருடன் விபத்துக்குள்ளாகி கிணற்றில் கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.
அவர்கள் போலீசார் உதவியுடன் வந்த அங்கு தேடி பார்த்தனர். அவர்களுக்கும் காயமடைந்த 3 பேரும் இருந்த இடம் உடனடியாக தெரியவில்லை. தற்சமயமாக விபத்து நடந்த கிணற்றில் எற்றி பார்த்த போது அவர்கள் அங்கு இருப்பது தெரியந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடனடியாக அவர்களை மீட்டனர். சுந்தர் அவரது குடும்பத்துடன் 1½ மணி நேரம் கிணற்றுக்குள் தவித்தனர். கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் அவர்கள் உயிர் தப்பித்தனர்.
அவர்கள் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
ஆம்பூர்:
ஆம்பூர் பேபி காலனி பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகபடும்படி சுற்றிதிரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 18). தன்சூர் அகமது (19). நூரில் அமின் (23). என்பது தெரிய வந்தது.
மேலும் ஆம்பூர் சுற்று வட்டார பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது. அதன் அருகிலேயே 9-வது தெருவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து முருகர் கோவில் கட்டினர்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு முருகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
5 நாட்களுக்க முன்பு தான் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என கோவில் நிர்வாகிகளுக்கு தெரியவில்லை.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.