என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "AMMA UNAVAGANGAL"
- திருச்சியில் உள்ள அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்
- முன்பெல்லாம் ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 300 முதல் 400 ேபர் வரையில் சாப்பிடுவதற்கு வருவார்கள். தற்போது சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை அப்படியே பாதியாக குறைந்துள்ளது
திருச்சி:
திருச்சி மாநகரில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அரசு வழிகாட்டுதலின் பேரில் மாநகராட்சி சார்பில் சாலையோரம் சுற்றித்திரியும் மக்கள் மற்றும் உணவில்லாமல் அல்லல்படும் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் வகையில் சுமார் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது.
இந்த அம்மா உணவகங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் வெளியில் வர அனுமதி இல்லாமல் இருந்த போதிலும் ஏைழ, எளிய மக்களின் பசியை போக்கும் இடமாக அம்மா உணவகங்கள் செயல்பட்டது.
இங்கு குறைந்த விலையில் வயிராற சாப்பிடும் வகையில் உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக அம்மா உணவகங்கள் சரியாக செயல்படாமலும், பராமரிப்பு இல்லாமலும் இருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், தொடர்ந்து மாநகராட்சி கட்டுப்பாட்டில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. பல ஏழைகளின் பசியையும் போக்கி வந்தது.
இங்கு ரூ.10 இருந்தால் போதும் இட்லி மற்றும் தக்காளி சாதம் சாம்பார் சாதம், தயிர்சாதம் உள்ளிட்ட வகைகளில் சாப்பிடலாம்.
சாப்பிட்டு விட்டு பொது மக்களே தான் சாப்பிட்ட தட்டுகளையும் கழுவி வைக்கும் பழக்கம் பயன்பாட்டில் இருந்தது. மேலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக நின்று கொண்டு சுகாதாரமான முறையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் இட்லி, மதியம் 12 மணி அளவில் சாப்பாடு என்ற வகையில் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி உள்ளது. அதாவது முன்பெல்லாம் ஒவ்வொரு அம்மா உணவகங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 300 முதல் 400 ேபர் வரையில் சாப்பிடுவதற்கு வருவார்கள். தற்போது சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை அப்படியே பாதியாக குறைந்துள்ளது என்று கூறினார்.
திருச்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஓருவர் கூறும்போது, நான் கடந்த 2 ஆண்டுகளாக தினமும் கட்டிட ேவலைக்கு செல்வதற்கு முன்னதாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு வருகிறேன்.
சிறந்த தரத்தில் உணவுகள் இருக்கும். ரூ.5 இருந்தால் போதும் காலையில் என்னுடைய சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் முடித்து விடுவேன்.
ஆனால் தற்போது சில மாதங்களாக அம்மா உணவகங்களை சரியாக சுத்தம் செய்யாமல் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. சாப்பிட்டு விட்டு சென்ற டேபிள்களை கூட சுத்தம் செய்யாமல் இருக்கும் நிலையும் நீடித்து வருகிறது.
மாநகராட்சி இதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினைகளை சரி செய்தால் வருங்காலத்தில் தொடர்ந்து அம்மா உணவகங்கள் ஆதரவற்றவர்களின் பசிைய போக்கும் வகையில் செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்