என் மலர்
நீங்கள் தேடியது "Amman Veethiula"
- திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
- 16அடி நீளம் அலகு குத்தி பக்தர் நேர்த்திக்கடன் செலுத்தினர்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோவிலின் 61-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் 10-ஆம் நாள் திருவிழாவான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, காவிரிக் கரையிலிருந்து செண்டை மேளம் முழங்க பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் கரக ஊர்வலம் துவங்கியது. 16 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன.
அங்கு விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் குண்டாமணி, விழா குழுவினர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.