என் மலர்
நீங்கள் தேடியது "Amputation"
- மழை காலங்களில் பாலத்தின் மேல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- ஆற்றில் தண்ணீர் ஓடி கொண்டிருந்ததால் டிரைவருக்கு சிறிய காயம்.
பேராவூரணி:
பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் சாலையில் பூக்கொல்லை அருகே பூனைக்குத்தி காட்டாறு செல்கிறது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது.
இது குறுகிய பாலமாக இருப்பதால் பருவ மழை காலங்களில் பாலத்தின் மேல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று வீரியங்கோட்டையில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த லோடுஆட்டோ பாலத்தில் வரும்போது எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விடும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கவிழ்ந்தது.
ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.
எனவே மேலும் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க உடனடியாக தடுப்பு கம்பி வேலி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.
- வலது காலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை பலன் அளிக்காததால் வலது கால் துண்டிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா வடக்கூர் மேல தெருவை சேர்ந்தவர் ஜோதி. இவர் அரசு பஸ்சில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
சம்பவதன்று இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.
இதில் ஜோதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கா ததால் அங்கிருந்து வெளியேறி மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்கைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு வலது காலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை பலன் அளிக்காததால் வலது கால் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் டாக்டரின் தவறான சிகிச்சையால் தான் தனது கால் துண்டிக்கப்பட்டதாக கூறி அவர் கலெக்டர் அலுவகத்தில் மனு அளித்தார்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
- சிமெண்ட் மற்றும் மணலை கலக்க உதவும், கலவை எந்திரத்தில், கலவை தயார் செய்து கொண்டி ருந்தார்.
- டாக்டர்கள் கூறியதை அடுத்த தமிழின் வலது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.
புதுச்சேரி:
திருவாரூர் மாவட்டம் பாலூரைச்சேர்ந்தவர் தமிழ் (வயது22). இவர், காரைக்காலை அடுத்த நிரவி பகுதியை சேர்ந்த மேஸ்திரி மணிகண்டன் (40) தலைமையில் கட்டிட வேலை செய்து வருகிறார். தமிழ் சம்பவத்தன்று, கட்டிடங்கள் கட்டும்போது, ஜல்லி, சிமெண்ட் மற்றும் மணலை கலக்க உதவும், கலவை எந்திரத்தில், கலவை தயார் செய்து கொண்டி ருந்தார். அப்போது, கலவை எந்திரத்தில் சத்தம் வந்ததை யடுத்து, தமிழ் கலவை எந்தி ரத்தில் உள்ளே கையை விட்டு ஆயில் ஊற்றினார். அப்போது தமிழின் வலது கை எந்திரத்தில் சிக்கியது. தொடர்ந்து, தமிழை அங்கிருந்தவர்கள் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரிசியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தமிழ் உயிருடன் இருக்கவேண்டுமென்றால் வலது கையை துண்டிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியதை அடுத்த தமிழின் வலது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து காரைக்கால் திரும்பிய தமிழ், காரைக்கால் நிரவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் தொழிலாளியை வேலை செய்ய அனுமதித்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.