என் மலர்
நீங்கள் தேடியது "Amritkadeswar"
- திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 31-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 1-ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.
தரங்கம்பாடி:
திருக்கடையூர்அபிராமி உடனாகிய அமிர்தகடே ஸ்வரர் கோவிலில்ஆடிப்பூ ரத்தையொட்டி கொடி யேற்றம் நடைபெற்றது.
தரங்ம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெ ற்றது. விநாயகர், அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர், முருகன், சண்டிகேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்கா ரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார்.
பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
மேலும் தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 31-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 1-ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.